திருமுறை 9 · 9.027 · 11

கோயில்

அருளியவர்
புருடோத்தம நம்பி
பண்
பஞ்சமம்
தலம்
கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

வானவர்கள் வேண்ட வளர்நஞ்சை உண்டார்தாம்ஊனமிலா என்கை ஒளிவளைகள் கொள்வாரோதேனல்வரி வண்டறையும் தில்லைச்சிற்றம்பலவர்நானமரோ என்னாதே நாடகமே ஆடுவரே.
சொற்பிரிப்பு
வானவர்கள் வேண்ட வளர்நஞ்சை உண்டார் தாம்ஊனமிலா என் கை ஒளி வளைகள் கொள்வாரோதேன் நல் வரிவண்டு அறையும் தில்லைச் சிற்றம்பலவர்நான் நமரோ என்னாதே நாடகமே ஆடுவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

ஆடிவரும் கார்அரவும் ஐம்மதியும் பைங்கொன்றைசூடிவருமா கண்டேன் தோள்வளைகள் தோற்றாலும்தேடியிமை யோர்பரவும் தில்லைச்சிற்றம் பலவர்ஆடிவரும் போதருகே நிற்கவுமே ஒட்டாரே.
சொற்பிரிப்பு
ஆடிவரும் கார் அரவும் ஐம்மதியும் பைங்கொன்றைசூடி வருமா கண்டேன் தோள்வளைகள் தோற்றாலும்தேடி இமையோர் பரவும் தில்லைச் சிற்றம்பலவர்ஆடி வரும் போது அருகே நிற்கவுமே ஒட்டாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

ஒட்டா வகைஅவுணர் முப்புரங்கள் ஓர்அம்பால்பட்டாங்(கு) அழல்விழுங்க எய்துகந்த பண்பினார்சிட்டார் மறையோவாத் தில்லைச்சிற்றம் பலவர்கொட்டா நடமாடக் கோல்வளைகள் கொள்வாரே.
சொற்பிரிப்பு
ஒட்டா வகை அவுணர் முப்புரங்கள் ஒர் அம்பால்பட்டாங்கு கழல் விழுங்க எய்துகந்த பண்பினார்சிட்டார் மறை ஒவாத் தில்லைச் சிற்றம்பலவர்கொட்டா நடமாடக் கோல்வளைகள் கொள்வாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

ஆரே இவைபடுவார் ஐயங் கொளவந்துபோரேடி என்று புருவம் இடுகின்றார்தேரார் விழவோவாத் தில்லைச்சிற் றம்பலவர்தீராநோய் செய்வாரை ஒக்கின்றார் காணீரே.
சொற்பிரிப்பு
ஆரே இவைபடுவார் ஐயம் கொளவந்துபோரேடி என்று புருவம் இடுகின்றார்தேரார் விழவோவாத் தில்லைச் சிற்றம்பலவர்தீராநோய் செய்வாரை ஒக்கின்றார் காணீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

காணீரே என்னுடைய கைவளைகள் கொண்டார்தாம்சேணார் மணிமாடத் தில்லைச்சிற் றம்பலவர்பூணார் வனமுலைமேல் பூஅம்பால் காமவேள்ஆணாடு கின்றவா கண்டும் அருளாரே.
சொற்பிரிப்பு
காணீரே என்னுடைய கைவளைகள் கொண்டார் தாம்சேணார் மணிமாடத் தில்லைச் சிற்றம்பலவர்பூணார் வனமுலைமேற் பூ அம்பாற் காமவேள்ஆணாடுகின்றவா கண்டும் அருளாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

ஏயிவரே வானவர்க்கும் வானவரே என்பாரால்தாயிவரே எல்லார்க்கும் தந்தையுமாம் என்பாரால்தேய்மதியம் சூடிய தில்லைச் சிற்றம் பலவர்வாயின கேட்டறிவார் வையகத்தார் ஆவாரே.
சொற்பிரிப்பு
ஏயிவரே வானவர்க்கும் வானவரே என்பாரால்தாயிவரே எல்லார்க்கும் தந்தையுமாம் என்பாரால்தேய்மதியம் சூடிய தில்லைச் சிற்றம்பலவர்வாயின கேட்டறிவார் வையகத்தார் ஆவாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

ஆவா ! இவர்தம் திருவடிகொண்டு அந்தகன்தன்மூவா உடலவியக் கொன்றுகந்த முக்கண்ணர்தேவா மறைபயிலும் தில்லைச்சிற்றம் பலவர்கோவா இனவளைகள் கொள்வாரோ என்னையே.
சொற்பிரிப்பு
ஆஆ இவர்தம் திருவடி கொண்டு அந்தகன் தன்மூவா உடல் அவியக் கொன்றுகந்த முக்கண்ணர்தேவாம் மறை பயிலும் தில்லைச் சிற்றம்பலவர்கோவாய் இனவளைகள் கொள்வாரோ என்னையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

என்னை வலிவாரார் என்ற இலங்கையர் கோன்மன்னும் முடிகள் நெரித்த மணவாளர்செந்நெல் விளைகழனித் தில்லைச் சிற்றம்பலவர்முன்னந்தான் கண்டறிவார் ஒவ்வார் இம் முத்தரே.
சொற்பிரிப்பு
என்னை வலிவார் ஆர் என்ற இலங்கையர்கோன்மன்னு முடிகள் நெரித்த மணவாளர்செந்நெல் விளை கழனித் தில்லைச் சிற்றம்பலவர்முன்னந்தான் கண்டறிவார் ஒவ்வார் இம் முத்தரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

முத்தர் முதுபகலே வந்தென்றன் இல்புகுந்துபத்தர் பலியிடுக என்றெங்கும் பார்க்கின்றார்சித்தர் கணம்பயிலும் தில்லைச்சிற்றம் பலவர்கைத்தலங்கள் வீசிநின் றாடுங்கால் நோக்காரே.
சொற்பிரிப்பு
முத்தர் முதுபகலே வந்து என்தன் இல்புகுந்துபத்தர் பலியிடுக என்றெங்கும் பார்க்கின்றார்சித்தர் கணம்பயிலும் தில்லைச் சிற்றம்பலவர்கைத்தலங்கள் வீசி நின்று ஆடுங்கால் நோக்காரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

நோக்காத தன்மையால் நோக்கிலோம் யாமென்றுமாற்காழி ஈந்து மலரோனை நிந்தித்துச்சேக்காத லித்தேறும் தில்லைச்சிற்றம்பலவர்ஊர்க்கேவந்(து) என்வளைகள் கொள்வாரோ ஒண்ணுதலீர்!
சொற்பிரிப்பு
நோக்காத தன்மையால் நோக்கிலோம் யாம்என்றுமாற்கு ஆழி ஈந்து மலரோனை நிந்தித்துச்சேக் காதலித்து ஏறும் தில்லைச் சிற்றம்பலவர்ஊர்க்கே வந்து என் வளைகள் கொள்வாரோ ஒண்ணுதலீர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

ஒண்ணுதலி காரணமா உம்பர் தொழுதேத்தும்கண்ணுதலான் தன்னைப் புருடோத்தமன் சொன்னபண்ணுதலைப் பத்தும் பயின்றாடிப் பாடினார்எண்ணுதலைப் பட்டங்கு இனிதா இருப்பாரே.
சொற்பிரிப்பு
ஒண்ணுதலி காரணமா உம்பர் தொழுதேத்தும்கண்ணுதலான் தன்னைப் புருடோத்தமன் சொன்னபண்ணுதலைப் பத்தும் பயின்றாடிப் பாடினார்எண்ணுதலைப் பட்டங்கு இனிதா இருப்பாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.