திருமுறை 9 · 9.026 · 11

கோயில்

அருளியவர்
புருடோத்தம நம்பி
பண்
பஞ்சமம்
தலம்
கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

வாரணி நறுமலர் வண்டு கெண்டு பஞ்சமம் செண்பக மாலைமாலைவாரணி வனமுலை மெலியும் வண்ணம் வந்து வந்திவைநம்மை மயக்குமாலோசீரணி மணிதிகழ் மாடம் ஓங்கு தில்லையம்பலத்(து) எங்கள் செல்வன் வாரான்ஆரெனை அருள்புரிந்(து) அஞ்சல் என்பார் ஆவியின் பரம்என்றன் ஆதரவே.
சொற்பிரிப்பு
வாரணி நறுமலர் வண்டு கெண்டு பஞ்சமம் செண்பக மாலை மாலைவாரணி வனமுலை மெலியும் வண்ணம் வந்து வந்து இவை நம்மை மயக்குமாலோசீரணி மணிதிகழ் மாடம் ஓங்கு தில்லை அம்பலத்து எங்கள் செல்வன் வாரான்ஆரெனை அருள்புரிந்து அஞ்சல் என்பார் ஆவியின் பரமன்று எந்தன் ஆதரவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

ஆவியின் பரம்என்றன் ஆதரவும் அருவினை யேனைவிட்டு அம்மஅம்மபாவிவன் மனமிது பையவே போய்ப் பனிமதிச் சடையான் பாலதாலோநீவியும் நெகிழ்ச்சியும் நிறையழிவும் நெஞ்சமும் தஞ்சமி லாமையாலேஆவியின் வருத்தம் இதாரறிவார் அம்பலத்(து) அருள்நடம் ஆடுவானே.
சொற்பிரிப்பு
ஆவியின் பரம் என்தன் ஆதரவும் அருவினையேனை விட்டு அம்ம! அம்ம!பாவி வன்மனம் இது பையவே போய்ப் பனிமதிச் சடை அரன் பாலதாலோநீவியும் நெகிழ்ச்சியும் நிறையழிவும் நெஞ்சமும் தஞ்சம் இலாமையாலேஆவியின் வருத்தம் இது யார் அறிவார் அம்பலத்து அருநடம் ஆடுவானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

அம்பலத் தருள்நடம் ஆடவேயும் யாதுகொல் விளைவதென்(று) அஞ்சிநெஞ்சம்உம்பர்கள் வன்பழி யாளர்முன்னே ஊட்டினர் நஞ்சைஎன் றேயும் உய்யேன்வன்பல படையுடைய பூதஞ்சூழ வானவர் கணங்களை மாற்றியாங்கேஎன்பெரும் பயலைமை தீரும்வண்ணம் எழுந்தரு ளாய்எங்கள் வீதியூடே !
சொற்பிரிப்பு
அம்பலத்து அருநடம் ஆடவேயும் யாதுகொல் விளைவதென்று அஞ்சி நெஞ்சம்உம்பர்கள் வன்பழியாளர் முன்னே ஊட்டினர் நஞ்சை என்றேயும் உய்யேன்வன்பல படையுடைப் பூதஞ்சூழ வானவர் கணங்களை மாற்றி ஆங்கேஎன் பெரும் பயலைமை தீரும் வண்ணம் எழுந்தருளாய் எங்கள் வீதியூடே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

எழுந்தருளாய் எங்கள் வீதியூடே ஏதமில் முனிவரோ(டு) எழுந்தஞானக்கொழுந்தது வாகிய கூத்தனேநின் குழையணி காதினில் மாத்திரையும்செழுந்தட மலர்புரை கண்கள் மூன்றும் செங்கனி வாயும்என் சிந்தைவெளவஅழுந்தும்என் ஆருயிர்க்(கு) என்செய் கேனோ அரும்புனல் அலமரும் சடையினானே !
சொற்பிரிப்பு
எழுந்தருளாய் எங்கள் வீதியூடே ஏதமில் முனிவரோடு எழுந்த ஞானக்கொழுந்து அதுவாகிய கூத்தனே நின் குழையணி காதினின் மாத்திரையும்செழுந்தட மலர் புரை கண்கள் மூன்றும் செங்கனி வாயும் என் சிந்தை வௌவஅழுந்தும் என் ஆருயிர்க்கு என் செய்கேனோ அரும்புனல் அலமரும் சடையினானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

அரும்புனல் அலமரும் சடையி னானை அமரர்கள் அடிபணிந்து அரற்ற அந்நாள்பெரும்புரம் எரிசெய்த சிலையின் வார்த்தை பேசவும் நையும் என் பேதை நெஞ்சம்கருந்தட மலர்புரை கண்ட வண்டார் காரிகை யார்முன்(பு)என் பெண்மை தோற்றேன்திருந்திய மலரடி நசையி னாலே தில்லையம் பலத்தெங்கள் தேவ தேவே.
சொற்பிரிப்பு
அரும்புனல் அலமரும் சடையினானை அமரர்கள் அடிபணிந்து அரற்ற அந்நாள்பெரும்புரம் எரிசெய்த சிலையின் வார்த்தை பேசவும் நையும் என் பேதை நெஞ்சம்கருந்தட மலர்புரை கண்ட வண்டார் காரிகையார் முன்பு என் பெண்மை தோற்றேன்திருந்திய மலரடி நசையினாலே தில்லை அம்பலத்து எங்கள் தேவதேவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

தில்லையம் பலத்தெங்கள் தேவ தேவைத் தேறிய அந்தணர் சிந்தை செய்யும்எல்லைய தாகிய எழில்கொள் சோதி என்னுயிர் காவல்கொண் டிருந்த எந்தாய்பல்லையார் பசுந்தலை யோ(டு) இடறிப் பாதமென் மலரடி நோவ நீபோய்அல்லினில் அருநடம் ஆடில் எங்கள் ஆருயிர் காவலிங்(கு) அரிது தானே.
சொற்பிரிப்பு
தில்லை அம்பலத்து எங்கள் தேவதேவைத் தேறிய அந்தணர் சிந்தை செய்யும்எல்லையதாகிய எழில் கொள் சோதி என்னுயிர் காவல் கொண்டு இருந்த எந்தாய்பல்லையார் பசுந்தலையோடு இடறிப் பாதமென் மலரடி நோவ நீ போய்அல்லினில் அருநடமாடில் எங்கள் ஆருயிர் காவல் இங்கு அரிது தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

ஆருயிர் காவலிங்(கு) அருமை யாலே அந்தணர் மதலைநின் அடிபணியக்கூர்நுனை வேற்படைக்கூற்றம் சாயக் குரைகழல் பணிகொள மலைந்த தென்றால்ஆரினி அமரர்கள் குறைவி லாதார் அவரவர் படுதுயர் களைய நின்றசீருயி ரேஎங்கள் தில்லை வாணா ! சேயிழை யார்க்கினி வாழ்வரிதே.
சொற்பிரிப்பு
ஆருயிர் காவல் இங்கு அருமையாலே அந்தணர் மதலை நின் அடி பணியக்கூர்நுனை வேற்படைக் கூற்றம் சாயக் குரைகழல் பணிகொள மலைந்தது என்றால்ஆர் இனி அமரர்கள் குறைவிலாதார் அவரவர் படுதுயர் களைய நின்றசீருயிரே எங்கள் தில்லை வாணா சேயிழையார்க்கு இனி வாழ்வரிதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

சேயிழை யார்க்கினி வாழ்வரிது திருச்சிற்றம் பலத்தெங்கள் செல்வ னேநீதாயினும் மிகநல்லை என்றடைந்தேன் தனிமையை நினைகிலை சங்க ராவுன்பாயிரும் புலியதள் இன்னுடையும் பையமேல் எடுத்தபொற் பாத மும்கண்டேயிவள் இழந்தது சங்கம் ஆவா எங்களை ஆளுடை ஈசனேயோ.
சொற்பிரிப்பு
சேயிழையார்க்கு இனி வாழ்வரிது திருச்சிற்றம்பலத்து எங்கள் செல்வனே நீதாயினும் மிக நல்லை என்றடைந்தேன் தனிமையை நினைகிலை சங்கரா உன்பாயிரும் புலியதளின் உடையும் பைய மேலெடுத்த பொற்பாதமும் கண்டுஏயிவள் இழந்தது சங்கம் ஆஆ! எங்களை ஆளுடை ஈசனேயோ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

எங்களை ஆளுடை ஈசனேயோ இளமுலை முகம்நெக முயங்கி நின்பொற்பங்கயம் புரைமுகம் நோக்கி நோக்கிப் பனிமதி நிலவதென் மேற்படரச்செங்கயல் புரைகண்ணி மார்கள் முன்னே திருச்சிற்றம் பலமுட னேபுகுந்துஅங்குன பணிபல செய்து நாளும் அருள்பெறின் அகலிடத் திருக்கலாமே.
சொற்பிரிப்பு
எங்களை ஆளுடை ஈசனே ஓ இளமுலை முகம்நெக முயங்கி நின்பொன்பங்கயம் புரை முக நோக்கிநோக்கிப் பனிமதி நிலவது என்மேற் படரச்செங்கயல் புரை கண்ணிமார்கள் முன்னே திருச்சிற்றம்பலம் உடனே புகுந்துஅங்கு உன பணிபல செய்து நாளும் அருள்பெறின் அகலிடத்து இருக்கலாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

அருள்பெறின் அகலிடத்(து) இருக்கலா மென்று அமரர்கள் தலைவனும் அயனும் மாலும்இருவரும் அறிவுடையாரின் மிக்கார் ஏத்துகின் றார் இன்னம் எங்கள்கூத்தைமருள்படு மழலைமென் மொழியுமையாள் கணவனை வல்வினை யாட்டி யேனான்அருள்பெற அலமரும் நெஞ்சம் ஆவா ஆசையை அளவறுத் தார்இங் காரே
சொற்பிரிப்பு
அருள்பெறின் அகலிடத்து இருக்கலாம் என்று அமரர்கள் தலைவனும் அயனும் மாலும்இருவரும் அறிவுடையாரின் மிக்கார் ஏத்துகின்றார் இன்னம் எங்கள் கூத்தைமருள்படு மழலை மென்மொழி உமையாள் கணவனை வல்வினையாட்டியேன் நான்அருள்பெற அலமரும் நெஞ்சம் ஆவா ஆசையை அளவறுத்தார் இங்கு ஆரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

ஆசையை அளவறுத் தார்இங் காரே அம்பலத்(து) அருநடம் ஆடு வானைவாசநன் மலரணி குழல்மடவார் வைகலும் கலந்தெழு மாலைப் பூசல்மாசிலா மறைபல ஓது நாவன் வண்புரு டோத்தமன் கண்டு ரைத்தவாசக மலர்கள் கொண் டேத்த வல்லார் மலைமகள் கணவனை அணைவர் தாமே.
சொற்பிரிப்பு
ஆசையை அளவறுத்தார் இங்கு ஆரே அம்பலத்து அருநடம் ஆடுவானைவாசநன் மலரணி குழல்மடவார் வைகலும் கலந்தெழு மாலைப் பூசல்மாசிலா மறைபல ஓதுநாவன் வண்புருடோத்தமன் கண்டுரைத்தவாசக மலர்கள் கொண்டு ஏத்தவல்லார் மலைமகள் கணவனை அணைவர் தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.