திருமுறை 9 · 9.025 · 10

கோயில்

அருளியவர்
திருவாலியமுதனார்
பண்
பஞ்சமம்
தலம்
கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

கோல மலர்நெடுங்கண் கொவ்வை வாய்க்கொடி ஏரிடையீர்பாலினை இன்னமுதைப் பரமாய பரஞ்சுடரைச்சேலுக ளும்வயல்சூழ் தில்லை மாநகர்ச் சிற்றம்பலத்(து)ஏலவுடை எம்இறையை என்றுகொல் காண்பதுவே.
சொற்பிரிப்பு
கோல மலர் நெடுங்கண் கொவ்வை வாய்க்கொடி ஏரிடையீர்பாலினை இன்னமுதைப் பரமாய பரஞ்சுடரைச்சேலுகளும் வயல் சூழ் தில்லை மாநகர்ச் சிற்றம்பலத்துஏலுடை எம் இறையை என்றுகொல் காண்பதுவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

காண்பதி யான் என்றுகொல் கதிர்மாமணி யைக்கனலைஆண்பெண் அருவுருவென்(று) அறிதற்கு அரி தாயவனைச்சேண்பணை மாளிகைசூழ் தில்லைமாநகர்ச் சிற்றம்பலம்மாண்புடை மாநடஞ்செய் மறையோன் மலர்ப் பாதங்களே.
சொற்பிரிப்பு
காண்பதி யான் என்றுகொல் கதிர் மாமணியைக் கனலைஆண் பெண் அருவுரு என்று அறிதற்கு அரிது ஆயவனைச்சேண்பணை மாளிகை சூழ் தில்லை மாநகர்ச் சிற்றம்பலம்மாண்புடை மா நடஞ்செய் மறையோன் மலர்ப் பாதங்களே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

கள்ளவிழ் தாமரைமேல் கண்டயனொடு மால்பணியஒள்ளெரி யின்நடுவே உருவாய்ப்பரந் தோங்கிய சீர்த்தெள்ளிய தண்பொழில்சூழ் தில்லைமாநகர்ச் சிற்றம்பலத்துள்ளெரி யாடுகின்ற ஒருவனை உணர்வரிதே.
சொற்பிரிப்பு
கள்ளவிழ் தாமரை மேல் கண்டு அயனோடு மால் பணியஒள்ளெரியின் நடுவே உருவாய்ப் பரந்தோங்கிய சீர்த்தெள்ளிய தண்பொழில் சூழ் தில்லை மாநகர்ச் சிற்றம்பலத்துஉள் எரி ஆடுகின்ற ஒருவனை உணர்வரிதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

அரிவையோர் கூறுகந்தான் அழகன் எழில் மால்கரியின்உரிவைநல் உத்தரியம் உகந்தானும் பரார்தம்பிரான்புரிபவர்க்(கு) இன்னருள்செய் புலியூர்த்திருச் சிற்றம்பலத்(து)எரிமகிழ்ந் தாடுகின்ற எம்பிரான்என் இறையவனே.
சொற்பிரிப்பு
அரிவையோர் கூறுகந்தான் அழகன் எழில் மால்கரியின்உரிவை நல் உத்தரியம் உகந்தான் உம்பரார் தம்பிரான்புரிபவர்க்கு இன்னருள்செய் புலியூர்த் திருச்சிற்றம்பலத்துஎரிமகிழ்ந்து ஆடுகின்ற எம்பிரான் என் இறையவனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

இறைவனை என்கதியை என்னுள்ளே உயிர்ப்பாகி நின்றமறைவனை மண்ணும் விண்ணும் மலிவான் சுடராய் மலிந்தசிறையணி வண்டறையும் தில்லை மாநகர்ச் சிற்றம்பலம்நிறையணி யாம் இறையை நினைத்தேன் இனிப் போக்குவனே.
சொற்பிரிப்பு
இறைவனை என்கதியை என்னுளே உயிர்ப்பாகி நின்றமறைவனை மண்ணும்விண்ணும் மலிவான் சுடராய் மலிந்தசிறை அணி வண்டறையும் தில்லை மாநகர்ச் சிற்றம்பலம்நிறை அணியாம் இறையை நினைத்தேன் இனிப் போக்குவனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

நினைத்தேன் இனிப்போக்குவனோ நிமலத் திரளை நினைப்பார்மனத்தி னுளேயிருந்த மணியைமணி மாணிக்கத்தைக்கனைத்திழி யுங்கழனிக் கனகங்கதிர் ஒண்பவளம்சினத்தோடு வந்தெறியும் தில்லைமாநகர்க் கூத்தனையே.
சொற்பிரிப்பு
நினைத்தேன் இனிப்போக்குவனோ நிமலத்திரளை நினைப்பார்மனத்தின் உளே இருந்த மணியை மணி மாணிக்கத்தைக்கனைத்திழியும் கழனிக் கனகம் கதிர் ஒண்பவளம்சினத்தொடு வந்தெறியும் தில்லை மாநகர்க் கூத்தனையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

கூத்தனை வானவர்தம் கொழுந்தைக் கொழுந்தாய் எழுந்தமூத்தனை மூவுருவின் முதலைமுத லாகிநின்றஆத்தனைத் தான்படுக்கும் அந்தணர் தில்லை அம்பலத்துள்ஏத்தநின் றாடுகின்ற எம்பிரானடி சேர்வன்கொலோ
சொற்பிரிப்பு
கூத்தனை வானவர் தம் கொழுந்தைக் கொழுந்தாய் எழுந்தமூத்தனை மூவுருவின் முதலை முதலாகி நின்றஆத்தனைத் தான்படுக்கும் அந்தணர் தில்லை அம்பலத்துள்ஏத்த நின்றாடுகின்ற எம்பிரான் அடி சேர்வன் கொலோ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

சேர்வன்கொலோ அன்னைமீர் திகழும்மலர்ப் பாதங்களைஆர்வங்கொளத் தழுவி அணிநீ(று) என் முலைக்கணியச்சீர்வங்கம் வந்தணவும் தில்லைமாநகர்ச் சிற்றம்பலத்(து)ஏர்வங்கை மான்மறியன் எம்பிரான் என்பால் நேசனையே.
சொற்பிரிப்பு
சேர்வன் கொலோ அன்னைமீர் திகழும் மலர்ப் பாதங்களைஆர்வம் கொளத் தழுவி அணி நீறு என் முலைக்கணியச்சீர்வங்கம் வந்தணவும் தில்லை மாநகர்ச் சிற்றம்பலத்துஏர்வு அங்கை மான் மறியன் எம்பிரான் போல் நேசனையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

நேசமு டையவர்கள் நெஞ்சுளே யிடங்கொண் டிருந்தகாய்சின மால்விடையூர் கண்ணுதலைக் காமருசீர்த்தேசமிகு புகழோர் தில்லைமாநகர்ச் சிற்றம்பலத்(து)ஈசனை எவ்வுயிர்க்கும் எம்மிறைவன்என்(று) ஏத்துவனே.
சொற்பிரிப்பு
நேசம் உடையவர்கள் நெஞ்சுளே இடங்கொண்டிருந்தகாய்சின மால்விடையூர் கண்ணுதலைக் காமருசீர்த்தேசமிகு புகழோர் தில்லை மாநகர்ச் சிற்றம்பலத்துஈசனை எவ்வுயிர்க்கும் எம் இறைவன் என்று ஏத்துவனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

இறைவனை ஏத்துகின்ற இளையாள்மொழி இன்றமிழால்மறைவல நாவலர்கள் மகிழ்ந்தேத்து சிற்றம்பலத்தைஅறைசெந்நெல் வான்கரும்பின் அணியாலைகள் சூழ்மயிலைமறைவல ஆலிசொல்லை மகிழ்ந்தேத்துக வானெளிதே.
சொற்பிரிப்பு
இறைவனை ஏத்துகின்ற இளையாள்மொழி இன்தமிழால்மறைவல நாவலர்கள் மகிழ்ந்து ஏத்து சிற்றம்பலத்தைஅறை செந்நெல் வான்கரும்பின் அணிஆலைகள் சூழ் மயிலைமறைவல வாலி சொல்லை மகிழ்ந்து ஏத்துக வான் எளிதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.