திருமுறை 9 · 9.024 · 11

கோயில்

அருளியவர்
திருவாலியமுதனார்
பண்
இந்தளம்
தலம்
கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

அல்லாய்ப் பகலாய் அருவாய் உருவாய் ஆரா அமுதமாய்க்கல்லால் நிழலாய் கயிலை மலையாய் காண அருளென்றுபல்லா யிரம்பேர் பதஞ்சலிகள் பரவ வெளிப்பட்டுச்செல்வாய் மதில் தில்லைக்(கு) அருளித் தேவன் ஆடுமே
சொற்பிரிப்பு
அல்லாய்ப் பகலாய் அருவாய் உருவாய் ஆரா அமுதமாய்க்கல்லால் நிழலாய் கயிலை மலையாய் காண அருள்என்றுபல்லாயிரம்பேர் பதஞ்சலிகள் பரவ வெளிப்பட்டுச்செல்வாய் மதிலின் தில்லைக்கு அருளித் தேவன் ஆடுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

அன்ன நடையார் அமுத மொழியார் அவர்கள் பயில்தில்லைத்தென்னன் தமிழும் இசையும் கலந்த சிற்றம் பலந்தன்னுள்பொன்னும் மணியும் நிரந்த தலத்துப் புலித்தோல் பியற்கிட்டுமின்னின் இடையாள் உமையாள் காண விகிர்தன் ஆடுமே.
சொற்பிரிப்பு
அன்ன நடையார் அமுத மொழியார் அவர்கள் பயில்தில்லைத்தென்னன் தமிழும் இசையும் கலந்த சிற்றம்பலம் தன்னுள்பொன்னும் மணியும் நிரந்த தலத்துப் புலித்தோல் பியற்கிட்டுமின்னின் இடையாள் உமையாள் காண விகிர்தன் ஆடுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

இளமென் முலையார் எழில்மைந் தரொடும் ஏரார் அமளிமேல்திளையும் மாடத்திருவார் தில்லைச் சிற்றம் பலந்தன்னுள்வளர்பொன் மலையுள் வயிர மலைபோல் வலக்கை கவித்துநின்(று)அளவில் பெருமை அமரர் போற்ற அழகன் ஆடுமே.
சொற்பிரிப்பு
இளமென் முலையார் எழில் மைந்தரொடும் ஏரார் அமளிமேல்திளையும் மாடத் திருவார் தில்லைச் சிற்றம்பலம் தன்னுள்வளர்பொன் மலையுள் வயிர மலைபோல் வலக்கை கவித்து நின்றுஅளவில் பெருமை அமரர் போற்ற அழகன் ஆடுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

சந்தும் அகிலும் தழைப்பீ லிகளும் சாதி பலவுங்கொண்டுஉந்தி இழியும் நிவவின் கரைமேல் உயர்ந்த மதில்தில்லைச்சிந்திப் பரிய தெய்வப் பதியுட் சிற்றம் பலந்தன்னுள்நந்தி முழவங் கொட்ட நட்டம் நாதன் ஆடுமே.
சொற்பிரிப்பு
சந்தும் அகிலும் தழைப் பீலிகளும் சாதி பலவும் கொண்டுஉந்தி இழியும் நிவவின் கரைமேல் உயர்ந்த மதில் தில்லைச்சிந்திப்பரிய தெய்வப் பதியுள் சிற்றம்பலந் தன்னுள்நந்தி முழவம் கொட்ட நட்டம் நாதன் ஆடுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

ஓமப் புகையும் அகிலின் புகையும் உயர்ந்துமுகில்தோயத்தீமெய்த் தொழிலார் மறையோர் மல்கு சிற்றம் பலந்தன்னுள்வாமத்(து) எழிலார் எடுத்த பாதம் மழலைச் சிலம்பார்க்கத்தீமெய்ச் சடைமேல் திங்கள் சூடித் தேவன் ஆடுமே.
சொற்பிரிப்பு
ஓமப் புகையும் அகிலின் புகையும் உயர்ந்து முகில் தோயத்தீமெய்த் தொழிலார் மறையோர் மல்கு சிற்றம்பலந் தன்னுள்வாமத் தெழிலார் எடுத்த பாதம் மழலைச் சிலம்பு ஆர்க்கத்தீ மெய்ச் சடைமேல் திங்கள் சூடித் தேவன் ஆடுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

குரவம் கோங்கம் குளிர்புன்னை கைதை குவிந்த கரைகள்மேல்திரைவந் துலவும் தில்லை மல்கு சிற்றம் பலந்தன்னுள்வரைபோல் மலிந்த மணிமண் டபத்து மறையோர் மகிழ்ந்தேத்தஅரவம் ஆட அனல்கை ஏந்தி அழகன் ஆடுமே.
சொற்பிரிப்பு
குரவம் கோங்கம் குளிர்புன்னை கைதை குவிந்த கரைகள் மேல்திரைவந்து உலவும் தில்லை மல்கு சிற்றம்பலந் தன்னுள்வரைபோல் மலிந்த மணி மண்டபத்து மறையோர் மகிழ்ந்தேத்தஅரவம் ஆட அனல் கைஏந்தி அழகன் ஆடுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

சித்தர் தேவர் இயக்கர் முனிவர் தேனார் பொழில்தில்லைஅத்தா! அருளாய் அணியம் பலவா! என்றென் றவரேத்தமுத்தும் மணியும் நிரந்த தலத்துள் முளைவெண் மதிசூடிக்கொத்தார் சடைகள் தாழ நட்டம் குழகன் ஆடுமே.
சொற்பிரிப்பு
சித்தர் தேவர் இயக்கர் முனிவர் தேனார் பொழில் தில்லைஅத்தா அருளாய் அணி அம்பலவா என்றென்று அவர் ஏத்தமுத்தும் மணியும் நிரந்த தலத்துள் முளை வெண்மதி சூடிக்கொத்தார் சடைகள் தாழ நட்டம் குழகன் ஆடுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

அதித்த அரக்கன் நெரிய விரலால் அடர்த்தாய் அருளென்றுதுதித்து மறையோர் வணங்கும் தில்லைச் சிற்றம் பலந்தன்னுள்உதித்த போழ்தில் இரவிக் கதிர்போல் ஒளிர்மா மணிஎங்கும்பதித்த தலத்துப் பவள மேனிப் பரமன் ஆடுமே.
சொற்பிரிப்பு
அதிர்த்த அரக்கன் நெரிய விரலால் அடர்த்தாய் அருளென்றுதுதித்து மறையோர் வணங்கும் தில்லைச் சிற்றம்பலந் தன்னுள்உதித்த போழ்தில் இரவிக் கதிர்போல் ஒளிர்மா மணியெங்கும்பதித்த தலத்துப் பவள மேனிப் பரமன் ஆடுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

மாலோ(டு) அயனும் அமரர் பதியும் வந்து வணங்கிநின்(று)ஆல கண்டா ! அரனே ! அருளாய் என்றென்(று) அவரேத்தச்சேலா டும்வயல் தில்லை மல்கு சிற்றம் பலந்தன்னுள்பாலா டுமுடிச் சடைகள் தாழப் பரமன் ஆடுமே.
சொற்பிரிப்பு
மாலோடு அயனும் அமரர் பதியும் வந்து வணங்கி நின்றுஆல கண்டா அரனே அருளாய் என்றென்று அவர் ஏத்தச்சேல் ஆடும் வயல் தில்லை மல்கு சிற்றம்பலந் தன்னுள்பால் ஆடும்முடிச் சடைகள் தாழப் பரமன் ஆடுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

நெடிய சமணும் அறைசாக் கியரும் நிரம்பாப் பல்கோடிச்செடியும் தவத்தோர் அடையாத் தில்லைச் சிற்றம் பலந்தன்னுள்அடிகள் அவரை ஆரூர் நம்பி அவர்கள் இசைபாடக்கொடியும் விடையும் உடைய கோலக் குழகன் ஆடுமே.
சொற்பிரிப்பு
நெடிய சமணும் மறைசாக்கியரும் நிரம்பாப் பல்கோடிச்செடியும் தவத்தோர் அடையாத் தில்லைச் சிற்றம்பலந் தன்னுள்அடிகள் அவரை ஆரூர் நம்பி அவர்கள் இசைபாடக்கொடியும் விடையும் உடைய கோலக் குழகன்ஆடுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

வானோர் பணிய மண்ணோர் ஏத்த மன்னி நடமாடும்தேனார் பொழில்சூழ் தில்லை மல்கு சிற்றம்பலத் தானைத்தூநான் மறையான் அமுத வாலி சொன்ன தமிழ்மாலைப்பானேர் பாடல் பத்தும் பாடப் பாவ நாசமே.
சொற்பிரிப்பு
வானோர் பணிய மண்ணோர் ஏத்த மன்னி நடமாடும்தேனார் பொழில்சூழ் தில்லை மல்கு சிற்றம்பலத்தானைத்தூநான் மறையான் அமுத வாலி சொன்ன தமிழ்மாலைப்பால் நேர் பாடல் பத்தும் பாடப் பாவம் நாசமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.