திருமுறை 9 · 9.023 · 10

கோயில்

அருளியவர்
திருவாலியமுதனார்
பண்
நட்டராகம்
தலம்
கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

பவளமால் வரையைப் பனிபடர்ந்(து) அனையதோர் படரொளிதரு திருநீறும்குவளை மாமலர்க் கண்ணியும் கொன்றையும் துன்றுபொற் குழல்திருச் சடையும்திவள மாளிகை சூழ்தரு தில்லையுள்திரு நடம்புரி கின்றதவள வண்ணனை நினைதொறும் என்மனம் தழல்மெழு(கு)ஒக் கின்றதே.
சொற்பிரிப்பு
பவள மால் வரையைப் பனிபடர்ந்து அனையதோர் படரொளி தரு திருநீறும்குவளை மாமலர்க் கண்ணியும் கொன்றையும் துன்று பொற்குழல் திருச்சடையும்திவள மாளிகை சூழ்தரு தில்லையுள் திரு நடம் புரிகின்றதவள வண்ணனை நினைதொறும் என்மனம் தழல் மெழுகு ஒக்கின்றதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

ஒக்க ஒட்டந்த அந்தியும் மதியமும் அலைகடல் ஒலியோடுநெக்கு வீழ்தரு நெஞ்சினைப் பாய்தலும் நிறையழிந்(து) இருப்பேனைச்செக்கர் மாளிகை சூழ்தரு தில்லையுள் திருநடம் வகையாலேபக்கம் ஒட்டந்த மன்மதன் மலர்க்கணை படுந்தொறும் அலந்தேனே.
சொற்பிரிப்பு
ஒக்க ஓட்டந்த அந்தியும் மதியமும் அலைகடல் ஒலியோடுநெக்கு வீழ்தரு நெஞ்சினைப் பாய்தலும் நிறையழிந்து இருப்பேனைச்செக்கர் மாளிகை சூழ்தரு தில்லையுள் திருநடம் வகையாலேபக்கம் ஓட்டந்த மன்மதன் மலர்க்கணை படுந்தொறும் அலந்தேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

அலந்து போயினேன் அம்பலக் கூத்தனே அணிதில்லை நகராளீசிலந்தியை அரசாள்க என்(று) அருள்செய்த தேவதே வீசனேஉலந்தமார்க் கண்டிக் காகிஅக் காலனை உயிர்செக வுதைகொண்டமலர்ந்த பாதங்கள் வனமுலை மேலொற்ற வந்தருள் செய்யாயே.
சொற்பிரிப்பு
அலந்து போயினேன் அம்பலக் கூத்தனே அணிதில்லை நகராளீசிலந்தியை அரசாள்க என்றருள் செய்த தேவதேவ ஈசனேஉலர்ந்த மார்க்கண்டிக்கு ஆகி அக்காலனை உயிர் செக உதை கொண்டமலர்ந்த பாதங்கள் வனமுலை மேல்ஒற்ற வந்தருள் செய்யாயே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

அருள்செய்(து) ஆடுநல் அம்பலக் கூத்தனே ! அணிதில்லை நகராளீமருள்செய்(து) என்றனை வனமுலை பொன்பயப் பிப்பது வழக்கமோதிரளும் நீள்மணிக் கங்கையைத் திருச்சடைச் சேர்த்திஅச் செய்யாளுக்(கு)உருவம் பாகமும் ஈந்துநல் அந்தியை ஒண்ணுதல் வைத்தோனே.
சொற்பிரிப்பு
அருள்செய்து ஆடுநல் அம்பலக்கூத்தனே அணிதில்லை நகராளீமருள்செய்து என்தனை வனமுலை பொன் பயப்பிப்பது வழக்காமோ?திரளும் நீள் மணிக் கங்கையைத் திருச்சடை சேர்த்தி அச்செய்யாளுக்குஉருவம் பாகமும் ஈந்து நல் அந்தியை ஒண்ணுதல் வைத்தோனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

வைத்த பாதங்கள் மாலவன் காண்கிலன் மலரவன் முடிதேடிஎய்த்து வந்திழிந்(து) இன்னமும் துதிக்கின்றார் எழில்மறை அவற்றாலேசெய்த்தலைக் கமலம் மலர்ந்தோங்கிய தில்லை அம்பலத் தானைப்பத்தியாற் சென்று கண்டிட என்மனம் பதைபதைப்(பு) ஒழியாதே.
சொற்பிரிப்பு
வைத்த பாதங்கள் மாலவன் காண்கிலன் மலரவன் முடிதேடிஎய்த்து வந்திழிந்து இன்னமும் துதிக்கின்றார் எழில்மறை அவற்றாலேசெய்த்தலைக் கமலம் மலர்ந்தோங்கிய தில்லை அம்பலத்தானைப்பத்தியால் சென்று கண்டிட என்மனம் பதைபதைப்பு ஒழியாதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

தேய்ந்து மெய்வெளுத்(து) அகம் வளைந்து அரவினை அஞ்சித்தான் இருந்தேயும்காய்ந்து வந்துவந்(து) என்றனை வலிசெய்து கதிர்நிலா எரிதூவும்ஆய்ந்த நான்மறை அந்தணர் தில்லையுள் அம்பலத்(து) அரன்ஆடல்வாய்ந்த மாமலர்ப் பாதங்கள் காண்பதோர் மனத்தினை உடையேற்கே.
சொற்பிரிப்பு
தேய்ந்து மெய் வெளுத்து அகம்வளைந்து அரவினை அஞ்சித் தான் இருந்தேயும்காய்ந்து வந்துவந்து என்றனை வலிசெய்து கதிர்நிலா எரிதூவும்ஆய்ந்த நான்மறை அந்தணர் தில்லையுள் அம்பலத்து அரன் ஆடல்வாய்ந்த மாமலர்ப் பாதங்கள் காண்பதோர் மனத்தினை உடையேற்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

உடையும் பாய்புலித் தோலும்நல் அரவமும் உண்பதும் பலிதேர்ந்துவிடைய(து) ஊர்வதும் மேவிடங் கொடுவரை, ஆகிலும் என்நெஞ்சம்மடைகொள் வாளைகள் குதிகொளும் வயல்தில்லை அம்பலத்து அனலாடும்உடைய கோவினை அன்றிமற்று ஆரையும் உள்ளுவது அறியேனே.
சொற்பிரிப்பு
உடையும் பாய்புலித் தோலும் நல் அரவமும் உண்பதும் பலிதேர்ந்துவிடையது ஊர்வதும் மேவிடம் கொடுவரை ஆகிலும் என்னெஞ்சம்மடைகொள் வாளைகள் குதிகொளும் வயல்தில்லை அம்பலத்து அனலாடும்உடைய கோவினை அன்றி மற்று ஆரையும் உள்ளுவது அறியேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

அறிவும் மிக்கநல் நாணமும் நிறைமையும் ஆசையும் இங்குள்ளஉறவும் பெற்றநற் றாயொடு தந்தையும் உடன்பிறந் தவரோடும்பிறிய விட்டுனை அடைந்தனன் ஏன்றுகொள் பெரும்பற்றப் புலியூரின்மறைகள் நான்கும்கொண் டந்தணர் ஏத்தநன் மாநடம் மகிழ்வானே.
சொற்பிரிப்பு
அறிவும் மிக்கநல் நாணமும் நிறைமையும் ஆசையும் இங்குள்ளஉறவும் பெற்ற நல்தாயொடு தந்தையும் உடன்பிறந்தவரோடும்பிரிய விட்டுனை அடைந்தனன் ஏன்றுகொள் பெரும்பற்றப்புலியூரின்மறைகள் நான்குங் கொண்டு அந்தணர் ஏத்த நன் மாநட மகிழ்வானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

வான நாடுடை மைந்தனே ! ஓஎன்பன் வந்தரு ளாய் என்பன்பால்நெய் ஐந்துடன் ஆடிய படர்சடைப் பால்வண்ணனேஎன்பன்தேனமர் பொழில் சூழ்தரு தில்லையுள் திருநடம் புரிகின்றஏன மாமணிப் பூணணி மார்பனே ! எனக்கருள் புரியாயே.
சொற்பிரிப்பு
வான நாடுடை மைந்தனே ஓ என்பன் வந்தருளாய் என்பன்பால்நெய் ஐந்துடன் ஆடிய படர்சடைப் பால்வண்ணனே என்பன்தேனமர்பொழில் சூழ் தரு தில்லையுள் திருநடம் புரிகின்றஏன மாமணிப் பூண் அணி மார்பனே எனக்கருள் புரியாயே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

புரியும் பொன்மதில் சூழ்தரு தில்லையுள் பூசுரர் பலர்போற்றஎரிய(து) ஆடும்எம் ஈசனைக் காதலித்(து) இனைபவள் மொழியாகவரைசெய் மாமதில் மயிலையர் மன்னவன் மறைவல திருவாலிபரவல் பத்திவை வல்லவர் பரமன(து) அடியிணை பணிவாரே.
சொற்பிரிப்பு
புரியும் பொன்மதில் சூழ்தரு தில்லையுள் பூசுரர் பலர்போற்றஎரியதாடும் எம் ஈசனைக் காதலித்து இனைபவள் மொழியாகவரைசெய் மாமதில் மயிலையர் மன்னவன் மறைவல திருவாலிபரவல் பத்திவை வல்லவர் பரமனது அடியிணை பணிவாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.