திருமுறை 9 · 9.020 · 10

கோயில்

அருளியவர்
கண்டராதித்தர்
பண்
பஞ்சமம்
தலம்
கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

மின்னார் உருவம் மேல்விளங்க வெண்கொடி மாளி கைசூழப்பொன்னார் குன்றம் ஒன்று வந்து நின்றது போலும் என்னாத்தென்னா என்று வண்டு பாடும் தென்தில்லை அம்ப லத்துள்என்னார் அமுதை எங்கள் கோவை என்றுகொல் எய்துவதே
சொற்பிரிப்பு
மின்னார் உருவம் மேல்விளங்க வெண்கொடி மாளிகை சூழப்பொன்னார் குன்றம் ஒன்று வந்து நின்றது போலும் என்னாத்தென்னா என்று வண்டு பாடும் தென்தில்லை அம்பலத்துள்என்னாரமுதை எங்கள் கோவை என்றுகொல் எய்துவதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

ஓவா முத்தீ அஞ்சு வேள்வி ஆறங்க நான்மறையோர்ஆவே படுப்பார் அந்த ணாளர் ஆகுதி வேட்டுயர் வார்மூவா யிரவர் தங்க ளோடு முன் அரங்(கு) ஏறிநின்றகோவே உன்றன் கூத்துக் காணக் கூடுவ தென்று கொலோ
சொற்பிரிப்பு
ஓவா முத்தீ அஞ்சு வேள்வி ஆறங்க நான்மறையோர்ஆவே படுப்பார் அந்தணாளர் ஆகுதி வேட்டு உயர்வார்மூவாயிரவர் தங்களோடு முன்னரங்கு ஏறி நின்றகோவே உன்தன் கூத்துக் காணக் கூடுவது என்றுகொலோ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

முத்தீ யாளர் நான் மறையர் மூவா யிர வர்நின்னோ(டு)ஒத்தே வாழும் தன்மை யாளர் ஓதிய நான்மறையைத்தெத்தே யென்று வண்டு பாடும் தென்தில்லை அம்பலத்துள்அத்தா உன்றன் ஆடல் காண அணைவதும் என்றுகொலோ
சொற்பிரிப்பு
முத்தீயாளர் நான்மறையர் மூவாயிரவர் நின்னோடுஒத்தே வாழும் தன்மையாளர் ஓதிய நான்மறையைத்தெத்தே என்று வண்டுபாடும் தென்தில்லை அம்பலத்துள்அத்தா உன்தன் ஆடல்காண அணைவதும் என்று கொலோ
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

மானைப் புரையும் மடமென் நோக்கி மாமலை யாளோடும்ஆனைஞ் சாடும் சென்னி மேலோர் அம்புலி சூடும்அரன்தேனைப் பாலைத் தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துக்கோனை ஞானக் கொழுந்து தன்னைக் கூடுவது என்றுகொலோ
சொற்பிரிப்பு
மானைப்புரையும் மடமென்னோக்கி மா மலையாளோடும்ஆனஞ்சு ஆடும் சென்னிமேல் ஓர் அம்புலி சூடும் அரன்தேனைப் பாலைத் தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துக்கோனை ஞானக் கொழுந்து தன்னைக் கூடுவது என்று கொலோ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

களிவான் உலகில் கங்கை நங்கை காதலனே ! அருளென்(று)ஒளிமால் முன்னே வரங்கி டக்க உன்னடியார்க்(கு) அருளும்தெளிவார் அமுதே ! தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துள்ஒளிவான் சுடரே ! உன்னை நாயேன் உறுவதும் என்றுகொலோ
சொற்பிரிப்பு
களிவான் உலகில் கங்கை நங்கை காதலனே அருளென்றுஒளிமால் முன்னே வரங்கிடக்க உன்னடியார்க்கு அருளும்தெளிவார் அமுதே தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துள்ஒளி வான் சுடரே உன்னை நாயேன் உறுவதும் என்று கொலோ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பாரோர் முழுதும் வந்தி றைஞ்சப் பதஞ்சலிக்(கு) ஆட்டுகந்தான்வாரார் முலையாள் மங்கை பங்கன் மாமறையோர் வணங்கச்சீரான் மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத்(து) ஆடுகின்றகாரார் மிடற்றெங் கண்டனாரைக் காண்பதும் என்றுகொலோ
சொற்பிரிப்பு
பாரோர் முழுதும் வந்திறைஞ்சப் பதஞ்சலிக்கு ஆட்டுகந்தான்வாரார் முலையாள் மங்கைபங்கன் மாமறையோர் வணங்கச்சீரால் மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத்து ஆடுகின்றகார்ஆர் மிடற்று எம் கண்டனாரைக் காண்பதும் என்று கொலோ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

இலையார் கதிர்வேல் இலங்கைவேந்தன் இருபது தோளும்இறமலைதான் எடுத்த மற்றவற்கு வாளொடு நாள்கொடுத்தான்சிலையால் புரமூன்(று) எய்த வில்லி செம்பொனின் அம்பலத்துக்கலையார் மறிபொன் கையி னானைக் காண்பதும் என்றுகொலோ
சொற்பிரிப்பு
இலையார் கதிர் வேல் இலங்கைவேந்தன் இருபது தோளும் இறமலைதான் எடுத்த மற்றவற்கு வாளொடு நாள் கொடுத்தான்சிலையால் புரமூன்று எய்த வில்லி செம்பொனின் அம்பலத்துக்கலைஆர் மறி பொற்கையினானைக் காண்பதும் என்று கொலோ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

வெங்கோல் வேந்தன் தென்னன் நாடும் ஈழமும் கொண்டதிறல்செங்கோற் சோழன் கோழி வேந்தன் செம்பியன் பொன்னணிந்தஅங்கோல் வளையார் பாடி யாடும் அணிதில்லை அம்பலத்துள்எங்கோன் ஈசன் எம்மி றையை என்றுகொல் எய்துவதே.
சொற்பிரிப்பு
வெங்கோல் வேந்தன் தென்னன் நாடும் ஈழமும் கொண்ட திறல்செங்கோற் சோழன் கோழி வேந்தன் செம்பியன் பொன் அணிந்தஅங்கோல் வளையார் பாடி ஆடும் அணி தில்லை அம்பலத்துள்எங்கோன் ஈசன் எம் இறையை என்றுகொல் எய்துவதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

நெடியா னோடு நான் முகனும் வானவரும் நெருங்கிமுடியான் முடிகள் மோதி உக்க முழுமணி யின்திரளைஅடியார் அலகி னால்தி ரட்டும் அணிதில்லை அம்பலத்துக்கடியார் கொன்றை மாலை யானைக் காண்பதும் என்றுகொலோ
சொற்பிரிப்பு
நெடியானோடு நான்முகனும் வானவரும் நெருங்கிமுடியால் முடிகள் மோதி உக்க முழுமணியின் திரளைஅடியார் அலகினால் திரட்டும் அணிதில்லை அம்பலத்துக்கடியார் கொன்றை மாலையானைக் காண்பதும் என்று கொலோ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

சீரான் மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத் தாடிதன்னைக்காரார் சோலைக் கோழி வேந்தன் தஞ்சையர் கோன்கலந்தஆரா இன்சொற் கண்டரா தித்தன் அருந்தமிழ் மாலை வல்லார்பேரா வுலகிற் பெருமை யோடும் பேரின்பம் எய்துவரே.
சொற்பிரிப்பு
சீரால் மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத்து ஆடி தன்னைக்காரார் சோலைக் கோழி வேந்தன் தஞ்சையர் கோன் கலந்தஆரா இன்சொல் கண்டராதித்தன் அருந்தமிழ் மாலை வல்லார்பேரா உலகில் பெருமையோடும் பேரின்பம் எய்துவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.