திருமுறை 9 · 9.018 · 2

திருவாருர் கைக்குவான் முத்தின் திருவிசைப்பா

அருளியவர்
பூந்துருத்திநம்பி காடநம்பி
பண்
பஞ்சமம்
தலம்
ஆரூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

கைக்குவான் முத்தின் சரிவளை பெய்து கழுத்திலோர் தனிவடங் கட்டிமுக்கண்நா யகராய்ப் பவனிபோந்(து) இங்ஙன் முரிவதோர் முரிவுமை அளவும்தக்கசீர்க் கங்கை அளவுமன்(று) என்னோ தம்மொருப் பாடுல கதன்மேல்மிக்கசீர் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம்குலா வினரே.
சொற்பிரிப்பு
கைக்குவான் முத்தின் சரி வளை பெய்து கழுத்தில் ஓர் தனிவடம் கட்டிமுக்கண் நாயகராய்ப் பவனி போந்து இங்ஙன் முரிவதோர் முரிவு உமை அளவும்தக்க சீர்க் கங்கை அளவும் அன்று என்னோ தம் ஒருப்பாடு உலகதன்மேல்மிக்க சீர் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம் குலாவினரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப் பருகுதோ(று)ம் அமுதம்ஒத் தவர்க்கேதித்தியா இருக்கும் தேவர்காள் ! இவர்தம் திருவுரு இருந்தவா பாரீர்சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த தனிமுழு முதலுமாய் அதற்கோர்வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம்குலா வினரே.
சொற்பிரிப்பு
பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப் பருகுதோறு அமுதம் ஒத்து அவர்க்கேதித்தியா இருக்கும் தேவர்காள் இவர்தம் திருவுரு இருந்தவா பாரீர்சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த தனிமுழு முதலுமாய் அதற்கோர்வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம் குலாவினரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.