திருமுறை 9 · 9.017 · 10

திருவிடைமருதூர்

அருளியவர்
கருவூர்த்தேவர்
பண்
பஞ்சமம்
தலம்
இடைமருதூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

வெய்யசெஞ் சோதி மண்டலம் பொலிய வீங்கிருள் நடுநல்யா மத்தோர்பையசெம் பாந்தள் பருமணி உமிழ்ந்து பாவியேன் காதல்செய் காதில்ஐயசெம் பொற்றோட்(டு) அவிர்சடைமொழுப்பின் அழிவழ கியதிரு நீற்றுமையசெங் கண்டத்(து) அண்டவா னவர்கோன் மருவிடம் திருவிடை மருதே.
சொற்பிரிப்பு
வெய்ய செஞ்சோதி மண்டலம் பொலிய வீங்கிருள் நடுநல் யாமத்தோர்பைய செம்பாந்தள் பருமணி உமிழ்ந்து பாவியேன் காதல் செய் காதில்ஐய செம்பொன் தோட்டு அவிர்சடை மொழுப்பின் அழிவு அழகிய திருநீற்றுமைய செங்கண்டத்து அண்ட வானவர் கோன் மருவிடம் திருவிடைமருதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

இந்திர லோக முழுவதும் பணிகேட்(டு) இணையடி தொழுதெழத் தாம்போய்ஐந்தலை நாகம் மேகலை அரையா அகந்தொறும் பலிதிரி அடிகள்தந்திரி வீணை கீதமும் பாடச் சாதிகின் னரங்கலந்(து) ஒலிப்பமந்திர கீதம் தீங்குழல் எங்கும் மருவிடம் திருவிடை மருதே.
சொற்பிரிப்பு
இந்திர லோக முழுவதும் பணிகேட்டு இணையடி தொழுதெழத் தாம் போய்ஐந்தலை நாக மேகலை அரையா அகந்தொறும் பலிதிரி அடிகள்தந்திரி வீணை கீதமுன் பாடச் சாதி கின்னரம் கலந்து ஒலிப்பமந்திர கீதம் தீங்குழல் எங்கும் மருவிடம் திருவிடைமருதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

பனிபடு மதியம் பயில்கொழுந் தன்ன பல்லவம் வல்லியென்(று) இங்ஙன்வினைபடு கனகம் போலயா வையுமாய் வீங்குல(கு) ஒழிவற நிறைந்துதுனிபடு கலவி மலைமகள் உடனாய்த் தூங்கிருள் நடுநல்யா மத்தென்மனனிடை அணுகி நுணிகியுள் கலந்தோன் மருவிடம் திருவிடைமருதே.
சொற்பிரிப்பு
பனிபடு மதியம் பயில்கொழுந்து அன்ன பல்லவம் வல்லியென்று இங்ஙன்வினைபடு கனகம் போல யாவையுமாய் வீங்கு உலகு ஒழிவற நிறைந்துதுனிபடு கலவி மலைமகளுடனாய்த் தூங்கிருள் நடுநல் யாமத்து என்மனனிடை அணுகி நுணுகியுள் கலந்தோன் மருவிடம் திருவிடைமருதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

அணியுமிழ் சோதி மணியுனுள் கலந்தாங்கு அடியனேன் உள்கலந்து அடியேன்பணிமகிழ்ந் தருளும் அரிவைபா கத்தன் படர்சடை விடம்மிடற்(று) அடிகள்துணியுமிழ் ஆடை அரையிலோர் ஆடை சுடர்உமிழ் தரஅதன் அருகேமணியுமிழ் நாக மணியுமிழ்ந்(து) இமைப்ப மருவிடம் திருவிடைமருதே.
சொற்பிரிப்பு
அணியுமிழ் சோதி மணியினுள் கலந்தாங்கு அடியனேன் உள்கலந்தடியேன்பணிமகிழ்ந்து அருளும் அரிவை பாகத்தன் படர்சடை விடமிடற்று அடிகள்துணியுமிழ் ஆடை அரையில் ஓர் ஆடை சுடர் உமிழ் தர அதனருகேமணியுமிழ் நாகம் அணியுமிழ்ந்து இமைப்ப மருவிடம் திருவிடைமருதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

பந்தமும் பிரிவும் தெரிபொருட் பனுவல் படிவழி சென்று சென்றேறிச்சிந்தையும் தானும் கலந்ததோர் கலவி தெரியினும் தெரிவுறா வண்ணம்எந்தையும் தாயும் யானுமென் றிங்ஙன் எண்ணில்பல் லூழிகள் உடனாய்வந்தணு காது நுணிகியுள் கலந்தோன் மருவிடம் திருவிடைமருதே.
சொற்பிரிப்பு
பந்தமும் பிரிவும் தெரிபொருட் பனுவல் படிவழி சென்றுசென்று ஏறிச்சிந்தையும் தானும் கலந்ததோர் கலவி தெரியினும் தெரிவுறா வண்ணம்எந்தையும் தாயும் யானுமென்று இங்ஙன் எண்ணில் பல் ஊழிகள் உடனாய்வந்தணுகாது நுணுகி உள்கலந்தோன் மருவிடம் திருவிடைமருதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

எரிதரு கரிகாட்(டு) இடுபிணம் நிணமுண்(டு)ஏப்பமிட்(டு) இலங்ககெயிற்(று) அழல்வாய்த்துருகழல் நெடும்பேய்க் கணம்எழுந்தாடும்தூங்கிருள் நடுநல்யா மத்தேஅருள்புரி முறுவல் முகில்நிலா எறிப்பஅந்திபோன்(று) ஒளிர்திரு மேனிவரியர(வு) ஆட ஆடும்எம் பெருமான்மருவிடம் திருவிடைமருதே.
சொற்பிரிப்பு
எரிதரு கரிகாட்டு இடுபிண நிணமுண்டு ஏப்பமிட்டு இலங்கெயிற்று அழல்வாய்த்துருகழல் நெடும்பேய்க் கணம் எழுந்தாடும் தூங்கிருள் நடு நல் யாமத்தேஅருள்புரி முறுவல் முகிழ் நிலா எறிப்ப அந்திபோன்று ஒளிர் திருமேனிவரியரவு ஆட ஆடும் எம்பெருமான் மருவிடம் திருவிடைமருதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

எழிலையாழ் செய்கைப் பசுங்கலன் விசும்பின் இன்துளி படநனைந்(து) உருகிஅழலையாழ் புருவம் புனலொடும் கிடந்தாங்கு ஆதனேன் மாதரார் கலவித்தொழிலையாழ் நெஞ்சம் இடர்படா வண்ணம் தூங்கிருள் நடுநல்யா மத்தோர்மழலையாழ் சிலம்ப வந்தகம் புகுந்தோன் மருவிடம் திருவிடை மருதே.
சொற்பிரிப்பு
எழிலையாழ் செய்கைப் பசுங்கலன் விசும்பின் இன்துளி படநனைந்து உருகிஅழலையாழ் புருவம் புனலொடும் கிடந்தாங்கு ஆதனேன் மாதரார் கலவித்தொழிலை ஆழ் நெஞ்சம் இடர்படா வண்ணம் தூங்கிருள் நடுநல் யாமத்து ஓர்மழலையாழ் சிலம்ப வந்து அகம் புகுந்தோன் மருவிடம் திருவிடைமருதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

வையவாம் பெற்றம் பெற்றம்ஏ(று) உடையார் மாதவர் காதல்வைத் தென்னைவெய்யவாம் செந்தீப் பட்டஇட் டிகைபோல் விழுமியோன் முன்புபின்(பு) என்கோநொய்யவா றென்ன வந்துள்வீற் றிருந்த நூறுநூ றாயிர கோடிமையவாங் கண்டத்(து) அண்டவா னவர்கோன் மருவிடம் திருவிடை மருதே.
சொற்பிரிப்பு
வையவாம் பெற்றம் பெற்றம் ஏறுடையார் மாதவர் காதல் வைத்து என்னைவெய்யவாம் செந்தீப்பட்ட இட்டிகை போல் விழுமியோன் முன்பு பின்பு என்கோநொய்யவாறு என்ன வந்துள் வீற்றிருந்த நூறு நூறாயிர கோடிமையவாம் கண்டத்து அண்டவானவர்கோன் மருவிடம் திருவிடைமருதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

கலங்கலம் பொய்கைப் புனற்றெளி விடத்துக் கலந்தமண் ணிடைக்கிடந் தாங்குநலம் கலந்(து) அடியேன் சிந்தையுட் புகுந்த நம்பனே வம்பனே னுடையபுலங்கலந் தவனே ! என்று நின்(று) உருகிப் புலம்புவார் அவம்புகார் அருவிமலங்கலங் கண்ணிற் கண்மணி அனையான் மருவிடம் திருவிடைமருதே.
சொற்பிரிப்பு
கலங்கலம் பொய்கைப் புனல் தெளிவிடத்துக் கலந்த மண்ணிடைக் கிடந்தாங்குநலங்கலந்து அடியேன் சிந்தையுள் புகுந்த நம்பனே வம்பனேனுடையபுலங்கலந்தவனே என்று நின்று உருகிப் புலம்புவார் அவம் புகார் அருவிமலங்கலம் கண்ணில் கண்மணி அனையான் மருவிடம் திருவிடைமருதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

ஒருங்கிருங் கண்ணின் எண்ணில்புன் மாக்கள் உறங்கிருள் நடுநல்யா மத்தோர்கருங்கண்நின்(று) இமைக்கும் செழுஞ்சுடர் விளக்கம் கலந்தெனக் கலந்துணர் கருவூர்தருங்கரும் பனைய தீந்தமிழ் மாலை தடம்பொழில் மருதயாழ் உதிப்பவருங்கருங் கண்டத்து அண்டவா னவர்கோன் மருவிடம் திருவிடைமருதே.
சொற்பிரிப்பு
ஒருங்கிரு கண்ணின் எண்ணில் புன்மாக்கள் உறங்கிருள் நடுநல் யாமத்து ஓர்கருங்கண் நின்று இமைக்கும்செழுஞ்சுடர் விளக்கம் கலந்தெனக் கலந்துணர் கருவூர்தருங்கரும்பு அனைய தீந்தமிழ் மாலை தடம்பொழில் மருத யாழ் உதிப்பவருங்கருங் கண்டத்து அண்ட வானவர் கோன் மருவிடம் திருவிடைமருதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.