1
உலகெலாம் தொழவந்(து) எழுகதிர்ப் பருதி ஒன்றுநூ றாயிர கோடிஅலகெலாம் பொதிந்த திருவுடம்(பு) அச்சோ ! அங்ஙனே அழகிதோ, அரணம்பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம் பருவரை ஞாங்கர்வெண் திங்கள்இலைகுலாம் பதணத்(து) இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத்(து) இவர்க்கே.
சொற்பிரிப்பு
உலகெலாம் தொழவந்து எழுகதிர்ப் பரிதி ஒன்று நூறாயிர கோடிஅலகெலாம் பொதிந்த திருவுடம்பு அச்சோ அங்ஙனே அழகிதோ அரணம்பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம் பருவரை ஞாங்கர் வெண்திங்கள்இலைகுலாம் பதணத்து இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்து இவர்க்கே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.