திருமுறை 9 · 9.014 · 10

திருப்பூவணம்

அருளியவர்
கருவூர்த்தேவர்
பண்
பஞ்சமம்
தலம்
பூவணம்
நாடு
பாண்டியநாடு

1

திருவருள் புரிந்தாள் ஆண்டுகொண் டிங்ஙன் சிறியனுக்(கு) இனியது காட்டிப்பெரிதருள் புரிந்தா னந்தமே தரும்நின் பெருமையிற் பெரியதொன் றுளதேமருதர சிருங்கோங்கு அகில்மரம் சாடி வரைவளங் கவர்ந்திழி வைகைப்*பொருதிரை மருங்கோங்(கு) ஆவண வீதிப் பூவணங் கோயில்கொண் டாயே.( * வையை என்றும் பாடம்)
சொற்பிரிப்பு
திருவருள் புரிந்து ஆள் ஆண்டுகொண்டு இங்ஙன் சிறியனுக்கு இனியது காட்டிப்பெரிதருள் புரிந்து ஆனந்தமே தரும் நின் பெருமையில் பெரியது ஒன்றுளதேமருதர சிருங்கோங்கு அகில்மரம் சாடி வரைவளம் கவர்ந்திழி வையைப்பொருதிரை மருங்கோங்கு ஆவண வீதிப் பூவணம் கோயில் கொண்டாயே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பாம்பணைத் துயின்றோன் அயன்முதல் தேவர் பன்னெடுங் காலம்நிற் காண்பான்ஏம்பலித் திருக்க என்னுளம் புகுந்த எளிமையை என்றும் நான் மறக்கேன்தேம்புனற் பொய்கை வாளைவாய் மடுப்பத் தெளிதரு தேறல்பாய்ந் தொழுகும்பூம்பணைச் சோலை ஆவண வீதிப் பூவணங் கோயில்கொண் டாயே.
சொற்பிரிப்பு
பாம்பணைத் துயின்றோன் அயன் முதல் தேவர் பன்னெடுங் காலம் நிற்காண்பான்ஏம்பலித்து இருக்க என்னுளம் புகுந்த எளிமையை என்றும் நான் மறக்கேன்தேம்புனல் பொய்கை வாளை வாய் மடுப்பத் தெளிதரு தேறல் பாய்ந்து ஒழுகும்பூம்பணைச் சோலை ஆவண வீதிப் பூவணம் கோயில் கொண்டாயே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

கரைகடல் ஒலியில் தமருகத்(து) அரையில் கையினிற் கட்டிய கயிற்றால்இருதலை ஒருநா இயங்கவந்(து) ஒருநாள் இருந்திடாய் எங்கள்கண் முகப்பே;விரிதிகழ் விழவின் பின்செல்வோர் பாடல் வேட்கையின் வீழ்ந்தபோது அவிழ்ந்தபுரிசடை துகுக்கும் ஆவண வீதிப் பூவணங் கோயில்கொண் டாயே.
சொற்பிரிப்பு
கரைகடல் ஒலியின் தமருகத்து அரையில் கையினிற் கட்டிய கயிற்றால்இருதலை ஒருநா இயங்க வந்து ஒருநாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பேவிரிதிகழ் விழவின் பின்செல்வோர் பாடல் வேட்கையின் வீழ்ந்த போது அவிழ்ந்தபுரிசடை உகுக்கும் ஆவண வீதிப் பூவணம் கோயில் கொண்டாயே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

கண்ணியல் மணியின் சூழல்புக்(கு) அங்கே கலந்துபுக்(கு) ஒடுங்கினேற்(கு) அங்ஙன்நுண்ணியை எனினும் நம்பநின் பெருமை நுண்ணிமை இறந்தமை அறிவன்மண்ணியன் மரபில் தங்கிருள் மொழுப்பின் வண்டினம் பாடநின் றாடும்புண்ணிய மகளிர் ஆவண வீதிப் பூவணங் கோயில்கொண் டாயே.
சொற்பிரிப்பு
கண்ணியல் மணியின் சூழல் புக்கு அங்கே கலந்து புக்கு ஒடுங்கினேற்கு அங்ஙன்நுண்ணியை எனினும் நம்ப நின் பெருமை நுண்ணிமை இறந்தமை அறிவன்மண்ணியல் மரபின் தங்கிருள் மொழுப்பின் வண்டினம் பாட நின்றாடும்புண்ணிய மகளிர் ஆவண வீதிப் பூவணம் கோயில் கொண்டாயே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

கடுவினைப் பாசக் கடல்கடந்து ஐவர் கள்ளரை மெள்ளவே துரந்துன்அடியினை இரண்டும் அடையுமா(று) அடைந்தேன் அருள் செய்வாய் அருள்செயா தொழிவாய்நெடுநிலை மாடத்(து) இரவிருள் கிழிக்க நிலைவிளக்(கு) அலகில்சா லேகம்புடைகிடந்(து) இலங்கும் ஆவண வீதிப் பூவணங் கோயில் கொண் டாயே.
சொற்பிரிப்பு
கடுவினைப் பாசக் கடல் கடந்து ஐவர் கள்ளரை மெள்ளவே துரந்து உன்அடியிணை இரண்டும் அடையுமாறு அடைந்தேன் அருள்செய்வாய் அருள்செயாது ஒழிவாய்நெடுநிலை மாடத்து இரவிருள் கிழிக்க நிலைவிளக்கு அலகில் சாலேகம்புடைகிடந்து இலங்கும் ஆவண வீதிப் பூவணம் கோயில் கொண்டாயே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

செம்மனக் கிழவோர் அன்புதா என்றுன் சேவடி பார்த்திருந்(து) அலசஎம்மனம் குடிகொண் டிருப்பதற்(கு) யானார் என்னுடை அடிமைதான் யாதேஅம்மனம் குளிர்நாட் பலிக்கெழுந் தருள அரிவையர் அவிழ்குழல் சுரும்புபொம்மென முரலும் ஆவண வீதிப் பூவணங் கோயில்கொண் டாயே.
சொற்பிரிப்பு
செம்மனக் கிழவோர் அன்பு தா என்றுன் சேவடி பார்த்திருந்து அலசஎம்மனம் குடிகொண்டு இருப்பதற்கு யான் ஆர் என்னுடை அடிமைதான் யாதேஅம்மனம் குளிர்நாட் பலிக்கு எழுந்தருள அரிவையர் அவிழ்குழல் சுரும்புபொம்மென முரலும் ஆவண வீதிப் பூவணம் கோயில் கொண்டாயே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

சொன்னவில் முறைநான்(கு) ஆரணம் உணராச் சூழல்புக்(கு) ஒளித்தநீ இன்றுகன்னவில் மனத்தென் கண்வலைப் படும்இக் கருணையிற் பெரியதொன் றுளதேமின்னவில் கனக மாளிகை வாய்தல் விளங்கிளம் பிறைதவழ் மாடம்பொன்னவில் புரிசை ஆவண வீதிப் பூவணங் கோயில்கொண் டாயே.
சொற்பிரிப்பு
சொல் நவில் முறைநான்கு ஆரணம் உணராச் சூழல் புக்கு ஒளித்த நீ இன்றுகல் நவில் மனத்தென் கண் வலைப் படும் இக்கருணையில் பெரியதொன்று உளதேமின் நவில் கனக மாளிகை வாய்தல் விளங்கு இளம்பிறை தவழ் மாடம்பொன் நவில் புரிசை ஆவண வீதிப் பூவணம் கோயில் கொண்டாயே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

பாடல் கிடைக்கப்பெறவில்லை
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை
உரை

பாடல் கிடைக்கப்பெறவில்லை

9 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

பாடல் கிடைக்கப்பெறவில்லை
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

10

பூவணங் கோயில் கொண்டெனை ஆண்ட புனிதனை வனிதைபா கனை வெண்கோவணங் கொண்டு வெண்டலை ஏந்தும் குழகனை அழகெலாம் நிறைந்ததீவணன் தன்னைச் செழுமறை தெரியும் திகழ்கரு வூரனேன் உரைத்தபாவணத் தமிழ்கள் பத்தும்வல் லார்கள் பரமனது உருவமா குவரே.
சொற்பிரிப்பு
பூவணம் கோயில் கொண்டு எனை ஆண்ட புனிதனை வனிதை பாகனை வெண்கோவணங் கொண்டு வெண்தலை ஏந்தும் குழகனை அழகெலாம் நிறைந்ததீ வணன் தன்னைச் செழுமறை தெரியும் திகழ் கருவூரனேன் உரைத்தபாவணத் தமிழ்கள் பத்தும் வல்லார்கள் பரமனது உருவ மாகுவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.