1
அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட அங்ஙனே பெரியநீ சிறியஎன்னையாள் விரும்பி என்மனம் புகுந்த எளிமையை என்றும்நான் மறக்கேன்முன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா முக்கணா நாற்பெருந் தடந்தோள்கன்னலே தேனே அமுதமே கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே.
சொற்பிரிப்பு
அன்னமாய் விசும்பு பறந்து அயன் தேட அங்ஙனே பெரிய நீ சிறியஎன்னை ஆள் விரும்பி என் மனம் புகுந்த எளிமையை என்றும் நான் மறக்கேன்முன்னம் மால் அறியா ஒருவனாம் இருவா முக்கணா நாற்பெருந் தடந்தோள்கன்னலே தேனே அமுதமே கங்கை கொண்ட சோளேச்சரத்தானே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.