திருமுறை 9 · 9.011 · 10

திருமுகத்தலை

அருளியவர்
கருவூர்த்தேவர்
பண்
பஞ்சமம்
தலம்
முகத்தலை
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

புவனநா யகனே ! அகவுயிர்க்(கு) அமுதே பூரணா ! ஆரணம் பொழியும்பவளவாய் மணியே ! பணிசெய்வார்க்(கு) இரங்கும் பசுபதீ ! பன்னகா பரணா !அவனிஞா யிறுபோன்(று) அருள்புரிந்(து) அடியேன் அகத்திலும் முகத்தலை மூதூர்த்தவளமா மணிப்பூங் கோயிலும் அமர்ந்தாய் தனியனேன் தனிமைநீங் குதற்கே.
சொற்பிரிப்பு
புவன நாயகனே அகவுயிர்க்கு அமுதே பூரணா ஆரணம் பொழியும்பவளவாய் மணியே பணிசெய்வார்க்கு இரங்கும் பசுபதீ பன்னக ஆபரணாஅவனி ஞாயிறு போன்று அருள்புரிந்தடியேன் அகத்திலும் முகத்தலை மூதூர்த்தவளமா மணிப்பூங் கோயிலும் அமர்ந்தாய் தனியனேன் தனிமை நீங்குதற்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

புழுங்குதீ வினையேன் வினைகெடப் புகுந்து புணர்பொருள் உணர்வுநூல் வகையால்வழங்குதேன் பொழியும் பவளவாய் முக்கண் வளரொளி மணிநெடுங் குன்றேமுழங்குதீம் புனல்பாய்ந்(து) இளவரால் உகளும் முகத்தலை அகத்தமர்ந்(து) அடியேன்விழுங்குதீங் கனியாய் இனியஆ னந்த வெள்ளமாய் உள்ளமா யினையே.
சொற்பிரிப்பு
புழுங்கு தீவினையேன் வினைகெடப் புகுந்து புணர் பொருள் உணர்வு நூல் வகையால்வழங்குதேன் பொழியும் பவளவாய் முக்கண் வளரொளி மணிநெடும் குன்றேமுழங்கு தீம்புனல் பாய்ந்து இள வரால் உகளும் முகத்தலை அகத்தமர்ந்து அடியேன்விழுங்கு தீங்கனியாய் இனிய ஆனந்த வெள்ளமாய் உள்ளம் ஆயினையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

கன்னெகா உள்ளக் கள்வனேன் நின்கண் கசிவிலேன் கண்ணில்நீர் சொரியேன்முன்னகா ஒழியேன் ஆயினும் செழுநீர் முகத்தலை அகத்தமர்ந்(து) உறையும்பன்னகா பரணா பவளவாய் மணியே ! பாவியேன் ஆவியுள் புகுந்த(து)என்னகா ரணம்நீ ஏழைநாய் அடியேற்கு எளிமையோ பெருமையா வதுவே.
சொற்பிரிப்பு
கல் நகா உள்ளக் கள்வனேன் நின்கண் கசிவிலேன் கண்ணின் நீர் சொரியேன்முன் நகாஒழியேன் ஆயினும் செழுநீர் முகத்தலை அகத்தமர்ந்து உறையும்பன்னகா பரணா பவளவாய் மணியே பாவியேன் ஆவியுள் புகுந்ததுஎன்ன காரணம் நீ ஏழை நாயடியேற்கு எளிமையோ பெருமை ஆவதுவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

கேடிலா மெய்ந்நூல் கெழுமியும் செழுநீர்க் கிடையனா ருடையஎன் நெஞ்சில்பாடிலா மணியே மணியுமிழ்ந்(து) ஒளிரும் பரமனே ! பன்னகா பரணா !மேடெலாம் செந்நெல் பசுங்கதிர் விளைந்து மிகத்திகழ் முகத்தலை மூதூர்நீடினாய் எனினும் உட்புகுந்(து) அடியேன் நெஞ்செலாம் நிறைந்துநின் றாயே !
சொற்பிரிப்பு
கேடிலா மெய்ந்நூல் கெழுமியும் செழுநீர்க் கிடையனாருடைய என் நெஞ்சில்பாடிலா மணியே மணி உமிழ்ந்து ஒளிரும் பரமனே பன்னகா பரணாமேடெலாஞ் செந்நெல் பசுங்கதிர் விளைந்து மிகத்திகழ் முகத்தலை மூதூர்நீடினாய் எனினும் உள்புகுந்து அடியேன் நெஞ்செலாம் நிறைந்து நின்றாயே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

அக்கனா அனைய செல்வமே சிந்தித்(து) ஐவரோ(டு) என்னொடும் விளைந்தஇக்கலாம் முழுதும் ஒழியவந்(து) உள்புக்(கு) என்னைஆள் ஆண்டநாய கனே !முக்கண்நா யகனே முழுதுல(கு) இறைஞ்ச முகத்தலை அகத்தமர்ந்(து) அடியேன்பக்கல்ஆ னந்தம் இடையறா வண்ணம் பண்ணினாய் பவளவாய் மொழிந்தே.
சொற்பிரிப்பு
அக்கனா அனைய செல்வமே சிந்தித்து ஐவரோடு என்னொடும் விளைந்தஇக்கலாம் முழுதும் ஒழிய வந்து உள்புக்கு என்னை ஆள் ஆண்ட நாயகனேமுக்கண் நாயகனே முழுதுலகு இறைஞ்ச முகத்தலை அகத்தமர்ந்து அடியேன்பக்கல் ஆனந்தம் இடையறா வண்ணம் பண்ணினாய் பவளவாய்‌ மொழிந்தே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

புனல்பட உருகி மண்டழல் வெதும்பிப் பூம்புனல் பொதிந்துயிர் அளிக்கும்வினைபடு நிறைபோல் நிறைந்தவே தகத்தென் மனம்நெக மகிழ்ந்தபே ரொளியேமுனைபடு மதில்மூன்(று) எரித்தநா யகனே ! முகத்தலை அகத்தமர்ந்(து) அடியேன்வினைபடும் உடல்நீ புகுந்துநின் றமையால் விழுமிய விமானமா யினதே.
சொற்பிரிப்பு
புனல்பட உருகி மண் தழல் வெதும்பிப் பூம்புனல் பொதிந்து உயிர் அளிக்கும்வினைபடு நிறைபோல் நிறைந்த வேதகத்து என் மனம் நெக மகிழ்ந்த பேரொளியேமுனைபடு மதில் மூன்று எரித்த நாயகனே முகத்தலை அகத்தமர்ந்து அடியேன்வினைபடும் உடல் நீ புகுந்து நின்றமையால் விழுமிய விமானம் ஆயினதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

விரியநீர் ஆலக் கருமையும் சாந்தின் வெண்மையும் செந்நிறத் தொளியும்கரியும் நீறாடும் கனலும் ஒத் தொளிரும் கழுத்திலோர் தனிவடங் கட்டிமுரியுமா றெல்லாம் முரிந்தழ கியையாய் முகத்தலை அகத்தமர்ந் தாயைப்பிரியுமா றுளதே பேய்களோம் செய்த பிழைபொறுத்(து) ஆண்டபே ரொளியே.
சொற்பிரிப்பு
விரியும் நீர் ஆலக் கருமையின் சாந்தின் வெண்மையும் செந்நிறத்து ஒளியும்கரியும் நீறாடும் கனலும் ஒத்து ஒளிரும் கழுத்தில் ஓர் தனிவடம் கட்டிமுரியுமாறு எல்லாம் முரிந்து அழகியையாய் முகத்தலை அகத்தமர்ந்தாயைப்பிரியுமாறு உ ளதே பேய்களோம் செய்த பிழை பொறுத்து ஆண்ட பேரொளியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

என்னையுன் பாத பங்கயம் பணிவித்(து) என்பெலாம் உருகநீ எளிவந்(து)உன்னைஎன் பால்வைத்(து) எங்கும்எஞ் ஞான்றும் ஒழிவற நிறைந்தஒண் சுடரே !முன்னைஎன் பாசம் முழுவதும் அகல முகத்தலை அகத்தமர்ந்(து) எனக்கேகன்னலும் பாலும் தேனும்ஆ ரமுதும் கனியுமாய் இனியை ஆயினையே.
சொற்பிரிப்பு
என்னை உன் பாத பங்கயம் பணிவித்து என்பெலாம் உருக நீ எளிவந்துஉன்னை என்பால் வைத்து எங்கும் எஞ்ஞான்றும் ஒழிவற நிறைந்த ஒண்சுடரேமுன்னை என் பாசம் முழுவதும் அகல முகத்தலை அகத்தமர்ந்து எனக்கேகன்னலும் பாலும் தேனும் ஆரமுதும் கனியுமாய் இனியை ஆயினையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

அம்பரா அனலா; அனிலமே புவிநீ அம்புவே இந்துவே இரவிஉம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய் ஒழிவற நிறைந்தஒண் சுடரேமொய்ம்பராய் நலஞ்சொல் மூதறி வாளர் முகத்தலை அகத்தமர்ந்(து) எனக்கேஎம்பிரானாகி ஆண்டநீ மீண்டே எந்தையும் தாயுமா யினையே.
சொற்பிரிப்பு
அம்பரா அனலா அனிலமே புவி நீ அம்புவே இந்துவே இரவிஉம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய் ஒழிவற நிறைந்த ஒண்சுடரேமொய்ம்பராய் நலஞ்சொல் மூதறிவாளர் முகத்தலை அகத்தமர்ந்து எனக்கேஎம்பிரானாகி ஆண்ட நீ மீண்டே எந்தையும் தாயும் ஆயினையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

மூலமாய் முடிவாய் முடிவிலா முதலாய் முகத்தலை அகத்தமர்ந்(து) இனியபாலுமாய், அமுதாம் பன்னகா பரணன் பனிமலர்த் திருவடி இணைமேல்ஆலையம் பாகின் அனையசொற் கருவூர் அமுதுறழ் தீந்தமிழ் மாலைசீலமாப் பாடும் அடியவர் எல்லாம் சிவபதம் குறுகிநின் றாரே.
சொற்பிரிப்பு
மூலமாய் முடிவாய் முடிவிலா முதலாய் முகத்தலை அகத்தமர்ந்து இனியபாலுமாய் அமுதாம் பன்னகா பரணன் பனிமலர்த் திருவடி இணைமேல்ஆலைஅம்பாகின் அனையசொல் கருவூர் அமுதுறழ் தீந்தமிழ் மாலைசீலமாப் பாடும் அடியவர் எல்லாம் சிவபதம் குறுகி நின்றாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.