திருமுறை 9 · 9.010 · 11

திருக்கீழ்க் கோட்டுர் மணியம்பலம்

அருளியவர்
கருவூர்த்தேவர்
பண்
பஞ்சமம்
தலம்
கீழ்க் கோட்டூர் மணியம்பலம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

தளிரொளி மணிப்பூம் பதஞ்சிலம்(பு) அலம்பச் சடைவிரித்(து) அலையெறி கங்கைத்தெளிரொளி மணிநீர்த் திவலைமுத்(து) அரும்பித் திருமுகம் மலர்ந்துசொட்(டு) அட்டக்கிளரொளி மணிவண்(டு) அறைபொழிற் பழனம் கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்வளரொளி மணியம் பலத்துள்நின்றாடும் மைந்தன்என் மனங்கலந் தானே.
சொற்பிரிப்பு
தளிரொளி மணிப் பூம்பதம் சிலம்பு அலம்பச் சடைவிரித்து அலை எறி கங்கைத்தெளிரொளி மணிநீர்த் திவலை முத்து அரும்பித் திருமுகம் மலர்ந்து சொட்டு அட்டக்கிளரொளி மணிவண்டு அறைபொழிற் பழனம் கெழுவு கம்பலை செய் கீழ்க்கோட்டூர்வளரொளி மணி அம்பலத்துள் நின்றாடும் மைந்தன் என் மனம் கலந்தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

துண்டவெண் பிறையும் படர்சடை மொழுப்பும் சுழியமும் சூலமும் நீலகண்டமும் குழையும் பவளவாய் இதழும் கண்ணுதல் திலகமும் காட்டிக்கெண்டையும் கயலும் உகளுநீர்ப் பழனம் கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்வண்டறை மணியம் பலத்துள்நின் றாடும் மைந்தன்என் மனங்கலந் தானே.
சொற்பிரிப்பு
துண்ட வெண் பிறையும் படர்சடை மொழுப்பும் சுழியமும் சூலமும் நீலகண்டமும் குழையும் பவள வாய் இதழும் கண்ணுதல் திலகமும் காட்டிக்கெண்டையும் கயலும் உகளும் நீர்ப் பழனம் கெழுவு கம்பலை செய் கீழ்க்கோட்டூர்வண்டுஅறை மணி அம்பலத்துள் நின்றாடும் மைந்தன் என் மனம் கலந்தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

திருநுதல் விழியும் பவளவாய் இதழும் திலகமும் உடையவன் சடைமேல்புரிதரு மலரின் தாதுநின்(று) ஊதப் போய்வருந் தும்பிகாள் ! இங்கேகிரிதவழ் முகிலின் கீழ்த்தவழ் மாடம் கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்வருதிறல் மணியம் பலவனைக் கண்(டு)என் மனத்தையும் கொண்டுபோ துமினே.
சொற்பிரிப்பு
திருநுதல் விழியும் பவளவாய் இதழும் திலகமும் உடையவன் சடைமேல்புரிதரு மலரின் தாது நின்று ஊதப் போய்வரும் தும்பிகாள் இங்கேகிரி தவழ் முகிலின் கீழ்த்தவழ் மாடம் கெழுவு கம்பலை செய் கீழ்க்கோட்டூர்வருதிறல் மணி அம்பலவனைக் கண்டு என் மனத்தையும் கொண்டு போதுமினே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

தெள்ளுநீ றவன்நீ(று) என்னுடல் விரும்பும் செவியவன் அறிவுநூல் கேட்கும்மெள்ளவே அவன்பேர் விளம்பும்வாய் கண்கள் விமானமேநோக்கி வெவ் வுயிர்க்கும்கிள்ளைபூம் பொதும்பிற் கொஞ்சிமாம் பொழிற்கே கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்வள்ளலே மணியம் பலத்துள்நின் றாடும் மைந்தனே !என்னும்என் மனனே.
சொற்பிரிப்பு
தெள்ளுநீறு அவன் நீறு என்னுடல் விரும்பும் செவி அவன் அறிவு நூல் கேட்கும்மெள்ளவே அவன் பேர் விளம்பும் வாய் கண்கள் விமானமே நோக்கி வெவ்வுயிர்க்கும்கிள்ளை பூம் பொதும்பில் கொஞ்சி மாம்பொழிற்கே கெழுவு கம்பலை செய் கீழ்க்கோட்டூர்வள்ளலே மணி அம்பலத்துள் நின்றாடும் மைந்தனே என்னும் என் மனனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

தோழி !யாம்செய்த தொழில்என் எம்பெருமான் துணைமலர்ச் சேவடி காண்பான்ஊழிதோ றூழி உணர்ந்துளங் கசிந்து நெக்குநைந்(து) உளங்கரைந்(து) உருகும்கேழலும் புள்ளும் ஆகிநின்றி ருவர் கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்வாழிய மணியம் பலவனைக் காண்பான் மயங்கவும் மாலொழி யோமே.
சொற்பிரிப்பு
தோழி யாம் செய்த தொழில் என் எம் பெருமான் துணைமலர்ச் சேவடி காண்பான்ஊழிதோறு ஊழி உணர்ந்து உளங்கசிந்து நெக்கு நைந்து உளங்கரைந்து உருகும்கேழலும் புள்ளும் ஆகி நின்று இருவர் கெழுவு கம்பலை செய் கீழ்க்கோட்டூர்வாழிய மணி அம்பலவனைக் காண்பான் மயங்கவும் மால் ஒழியோமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

என்செய்கோம் தோழி ! தோழிநீ துணையாய் இரவுபோம் பகல்வரு மாகில்அஞ்சலோ என்னான் ஆழியும் திரையும் அலமரு மாறுகண்(டு) அயர்வன்கிஞ்சுக மணிவாய் அரிவையர் தெருவில் கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்மஞ்சணி மணியம் பலவஓ என்று மயங்குவன் மாலையம் பொழுதே.
சொற்பிரிப்பு
என் செய்கோம் தோழி தோழி நீ துணையாய் இரவு போம் பகல் வருமாகில்அஞ்சலோ என்னான் ஆழியும் திரையும் அலமரும் ஆறு கண்டு அயர்வன்கிஞ்சுக மணி வாய் அரிவையர் தெருவில் கெழுவு கம்பலை செய் கீழ்க்கோட்டூர்மஞ்சணி மணி அம்பலவ ஓ என்று மயங்குவன் மாலை அம்பொழுதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

தழைதவழ் மொழுப்பும் தவளநீற்(று) ஒளியும் சங்கமும் சகடையின் முழக்கும்குழைதவழ் செவியும் குளிர்சடைத் தெண்டும் குண்டையும் குழாங்கொடு தோன்றும்கிழைதவழ் கனகம் பொழியநீர்ப் பழனம் கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்மழைதவழ் மணியம் பலத்துள்நின் றாடும் மைந்தர்தம் வாழ்வுபோன் றனவே.
சொற்பிரிப்பு
தழை தவழ் மொழுப்பும் தவள நீற்று ஒளியும் சங்கமும் சகடையின் முழக்கும்குழை தவழ் செவியும் குளிர்சடைத் தெண்டும் குண்டையும் குழாம் கொடு தோன்றும்கிழை தவழ் கனகம் பொழியு நீர்ப் பழனம் கெழுவு கம்பலை செய் கீழ்க் கோட்டூர்மழை தவழ் மணி அம்பலத்துள் நின்றாடும் மைந்தர் தம் வாழ்வு போன்றதுவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

தன்னக மழலைச் சிலம்பொடு சதங்கை தமருகம் திருவடி திருநீறுஇன்னகை மழலை கங்கைகோங்(கு) இதழி இளம்பிறை குழைவளர் இளமான்கின்னரம் முழவம் மழலையாழ் வீணை கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்மன்னவன் மணியம் பலத்துள்நின் றாடும் மைந்தன்என் மனத்துள்வைத் தனனே.
சொற்பிரிப்பு
தன்னக மழலைச் சிலம்பொடு சதங்கை தமருகம் திருவடி திருநீறுஇன்னகை மழலை கங்கை கொங்கு இதழி இளம்பிறை குழை வளர் இளமான்கின்னரம் முழவம் மழலை யாழ் வீணை கெழுவு கம்பலை செய் கீழ்க்கோட்டூர்மன்னவன் மணி அம்பலத்துள் நின்றாடும் மைந்தன் என் மனத்துள் வைத்தனனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

யாதுநீ நினைவ(து) எவரையாம் உடையது எவர்களும் யாவையும் தானாய்ப்பாதுகை மழலைச் சிலம்பொடு புகுந்தென் பனிமலர்க் கண்ணுள்நின் றகலான்கேதகை நிழலைக் குருகென மருவிக் கெண்டைகள் வெருவுகீழ்க் கோட்டூர்மாதவன் மணியம் பலத்துள்நின் றாடும் மைந்தன்என் மனம்புகுந் தானே.
சொற்பிரிப்பு
யாது நீ நினைவது எவரை யாம் உடையது எவர்களும் யாவையும் தானாய்ப்பாதுகை மழலைச் சிலம்பொடு புகுந்தென் பனிமலர்க் கண்ணுள் நின்று அகலான்கேதகை நிழலைக் குருகென மருவிக் கெண்டைகள் வெருவு கீழ்க்கோட்டூர்மாதவன் மணி அம்பலத்துள் நின்றாடும் மைந்தன் என் மனம் புகுந்தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

அந்திபோல் உருவும் அந்தியிற் பிறைசேர் அழகிய சடையும்வெண் ணீறும்சிந்தையால் நினையிற் சிந்தையும் காணேன்; செய்வதென் தெளிபுனல் அலங்கல்கெந்தியா வுகளும் கெண்டைபுண் டரீகம் கிழிக்கும்தண் பணைசெய்கீழ்க் கோட்டூர்வந்தநாள் மணியம் பலத்துள்நின் றாடும் மைந்தனே அறியும்என் மனமே.
சொற்பிரிப்பு
அந்தி போல் உருவும் அந்தியில் பிறைசேர் அழகிய சடையும் வெண்ணீறும்சிந்தையால் நினையில் சிந்தையும் காணேன் செய்வதென் தெளி புனல் அலங்கல்கெந்தியா உகளும் கெண்டை புண்டரீகம் கிழிக்கும் தண்பணை செய் கீழ்க்கோட்டூர்வந்தநாள் மணி அம்பலத்துள் நின்றாடும் மைந்தனே அறியும் என் மனமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

கித்திநின் றாடும் அரிவையர் தெருவில் கெழுவுகம் பலைசெய்க்கீழ்க் கோட்டூர்மத்தனை மணியம் பலத்துள்நின் றாடும் மைந்தனை ஆரணம் பிதற்றும்பித்தனேன் மொழிந்த மணிநெடு மாலை பெரியவர்க்(கு) அகலிரு விசும்பில்முத்தியாம் என்றே உலகர்ஏத்து வரேல் முகமலர்ந்(து) எதிர்கொளும் திருவே.
சொற்பிரிப்பு
கித்தி நின்றாடும் அரிவையர் தெருவில் கெழுவு கம்பலை செய் கீழ்க்கோட்டூர்மத்தனை மணி அம்பலத்துள் நின்றாடும் மைந்தனை ஆரணம் பிதற்றும்பித்தனேன் மொழிந்த மணி நெடு மாலை பெரியவர்க்கு அகலிரு விசும்பின்முத்தியாம் என்றே உலகர் ஏத்துவரேல் முகமலர்ந்து எதிர்கொளும் திருவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.