திருமுறை 9 · 9.009 · 10

திருக்களந்தை ஆதித்தேச்சரம்

அருளியவர்
கருவூர்த்தேவர்
பண்
புறநீர்மை
தலம்
களந்தை ஆதித்தேச்சரம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

கலைகள்தம் பொருளும் அறிவுமாய் என்னைக் கற்பினிற் பெற்றெடுத்(து) எனக்கேமுலைகள்தந்(து) அருளும் தாயினும் நல்ல முக்கணான் உறைவிடம் போலும்மலைகுடைந் தனைய நெடுநிலை மாட மருங்கெலாம் மறையவர் முறையோத்(து)அலைகடல் முழங்கும் அந்தணீர்க் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
சொற்பிரிப்பு
கலைகள் தம் பொருளும் அறிவுமாய் என்னைக் கற்பினில் பெற்றெடுத்து எனக்கேமுலைகள் தந்து அருளும் தாயினும் நல்ல முக்கணான் உறைவிடம் போலும்மலை குடைந்து அனைய நெடுநிலை மாட மருங்கெலாம் மறையவர் முறை ஓத்துஅலைகடல் முழங்கும் அந்தண் நீர்க் களந்தை அணிதிகழ் ஆதித்தேச்சரமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

சந்தன களபம் துதைந்தநன் மேனித் தவளவெண் பொடிமுழு தாடும்செந்தழல் உருவில் பொலிந்துநோக் குடைய திருநுதலவர்க்கிடம் போலும்இந்தன விலங்கல் எறிபுனந் தீப்பட்(டு) எரிவதொத்(து) எழுநிலை மாடம்அந்தணர் அழலோம்(பு) அலைபுனற் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
சொற்பிரிப்பு
சந்தன களபம் துதைந்த நன்மேனித் தவள வெண்பொடி முழுதாடும்செந்தழல் உருவில் பொலிந்து நோக்குடைய திருநுதல் அவர்க்கிடம் போலும்இந்தன விலங்கல் எறிபுனந் தீப்பட்டு எரிவது ஒத்து எழுநிலை மாடம்அந்தணர் அழலோம்பு அலைபுனற் களந்தை அணிதிகழ் ஆதித்தேச்சரமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

கரியரே இடந்தான் செய்யரே ஒருபால் கழுத்திலோர் தனிவடஞ் சேர்த்திமுரிவரே முனிவர் தம்மொ(டு)ஆல் நிழற்கீழ் முறைதெரிந்(து) ஓருடம் பினராம்இருவரே முக்கண் நாற்பெருந் தடந்தோள் இறைவரே மறைகளும் தேடஅரியரே யாகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
சொற்பிரிப்பு
கரியரே இடந்தான் செய்யரே ஒருபால் கழுத்தில் ஓர் தனிவடம் சேர்த்திமுரிவரே முனிவர் தம்மொடு ஆல் நிழல் கீழ் முறைதெரிந்து ஓர் உடம்பினராம்இருவரே முக்கண் நாற்பெருந் தடந்தோள் இறைவரே மறைகளுந் தேடஅரியரே ஆகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச்சரமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பழையராம் தொண்டர்க்(கு) எளியரே மிண்டர்க்(கு) அரியரே பாவியேன் செய்யும்பிழையெலாம் பொறுத்தென் பிணிபொறுத் தருளாப் பிச்சரே நச்சரா மிளிரும்குழையராய் வந்தெந் குடிமுழு தாளும் குழகரே ஒழுகுநீர்க் கங்கைஅழகரே யாகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
சொற்பிரிப்பு
பழையராம் தொண்டர்க்கு எளியரே மிண்டர்க்கு அரியரே பாவியேன் செய்யும்பிழையெலாம் பொறுத்து என் பிணி பொறுத்தருளாப் பிச்சரே நச்சரா மிளிரும்குழையராய் வந்தென் குடிமுழுது ஆளுங் குழகரே ஒழுகு நீர்க் கங்கைஅழகரே ஆகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச்சரமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

பவளமே மகுடம் பவளமே திருவாய் பவளமே திருவுடம்(பு) அதனில்தவளமே களபம் தவளமே புரிநூல் தவளமே முறுவல்ஆ டரவம்துவளுமே கலையும் துகிலுமே ஒருபால் துடியிடை இடமருங்(கு) ஒருத்திஅவளுமே ஆகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
சொற்பிரிப்பு
பவளமே மகுடம் பவளமே திருவாய் பவளமே திருவுடம்பு அதனில்தவளமே களபம் தவளமே புரிநூல் தவளமே முறுவல் ஆடரவம்துவளுமே கலையும் துகிலுமே ஒருபால் துடியிடை இடமருங்கு ஒருத்திஅவளுமே ஆகில் அவரிடங் களந்தை அணிதிகழ் ஆதித்தேச்சரமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

நீலமே கண்டம் பவளமே திருவாய் நித்திலம் நிரைத்திலங் கினவேபோலுமே முறுவல் நிறையஆ னந்தம் பொழியுமே திருமுகம் ஒருவர்கோலமே அச்சோ அழகிதே என்று குழைவரே கண்டவர் உண்டதுஆலமே ஆகில் அவரிடங் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே !
சொற்பிரிப்பு
நீலமே கண்டம் பவளமே திருவாய் நித்திலம் நிரைத்து இலங்கினவேபோலுமே முறுவல் நிறைய ஆனந்தம் பொழியுமே திருமுகம் ஒருவர்கோலமே அச்சோ அழகிதே என்று குழைவரே கண்டவர் உண்டதுஆலமே ஆகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச்சரமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

திக்கடா நினைந்து நெஞ்சிடிந் துருகும் திறத்தவர் புறத்திருந்(து) அலசமைக்கடா அனைய என்னையாள் விரும்பி மற்றொரு பிறவியிற் பிறந்துபொய்க்கடா வண்ணம் காத்தெனக்(கு) அருளே புரியவும் வல்லரே எல்லேஅக்கடா ஆகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
சொற்பிரிப்பு
திக்கடா நினைந்து நெஞ்சிடிந்து உருகும் திறத்தவர் புறத்திருந்து அலசமைக்கடா அனைய என்னை ஆள் விரும்பி மற்றொரு பிறவியிற் பிறந்துபொய்க்கடா வண்ணம் காத்து எனக்கு அருளே புரியவும் வல்லரே எல்லேஅக்கடா வாகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச்சரமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

மெய்யரே மெய்யர்க்கு இடுதிரு வான விளக்கரே எழுதுகோல் வளையாள்மையரே வையம் பலிதிரிந்(து) உறையும் மயானரே உளங்கலந் திருந்தும்பொய்யரே பொய்யர்க்(கு) அடுத்தவான் பளிங்கின் பொருள்வழி இருள்கிழித் தெழுந்தஐயரே யாகில் அவரிடங் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
சொற்பிரிப்பு
மெய்யரே மெய்யர்க்கு இடு திருவான விளக்கரே எழுது கோல்வளையாள்மையரே வையம் பலி திரிந்து உறையும் மயானரே உளங்கலந்து இருந்தும்பொய்யரே பொய்யர்க்கு அடுத்த வான் பளிங்கின் பொருள்வழி இருள்கிழித்து எழுந்தஐயரேயாகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச்சரமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

குமுதமே திருவாய் குவளையே களமும் குழையதே இருசெவி ஒருபால்விமலமே கலையும் உடையரே சடைமேல் மிளிருமே பொறிவரி நாகம்கமலமே வதனம் கமலமே நயனம் கனகமே திருவடி நிலைநீர்அமலமே ஆகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
சொற்பிரிப்பு
குமுதமே திருவாய் குவளையே களமும் குழையதே இருசெவி ஒருபால்விமலமே கலையும் உடையரே சடைமேல் மிளிருமே பொறிவரி நாகம்கமலமே வதனம் கமலமே நயனம் கனகமே திருவடி நிலைநீர்அமலமே யாகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச்சரமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

நீரணங்(கு) அசும்பு கழனிசூழ் களந்தை நிறைபுகழ் ஆதித்தேச் சரத்துநாரணன் பரவும் திருவடி நிலைமேல் நலமலி கலைபயில் கருவூர்ஆரணம் மொழிந்த பவளவாய் சுரந்த அமுதம்ஊ றியதமிழ் மாலைஏரணங்(கு) இருநான்(கு) இரண்டிவை வல்லோர் இருள்கிழித்(து) எழுந்தசிந் தையரே.
சொற்பிரிப்பு
நீர் அணங்கு அசும்பு கழனிசூழ் களந்தை நிறைபுகழ் ஆதித்தேச்சரத்துநாரணன் பரவுந் திருவடி நிலைமேல் நலமலி கலைபயில் கருவூர்ஆரணம் மொழிந்த பவளவாய் சுரந்த அமுதம் ஊறிய தமிழ்மாலைஏரணங்கு இருநான்கு இரண்டு இவை வல்லோர் இருள் கிழித்து எழுந்த சிந்தையரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.