1
கணம்விரி குடுமிச் செம்மணிக் கவைநாக் கறையணல் கட்செவிப் பகுவாய்ப்பணம்விரி துத்திப் பொறிகொள்வெள் ளெயிற்றுப் பாம்பணி பரமர்தம் கோயில்மணம்விரி தருதே மாம்பொழில் மொழுப்பில் மழைதவழ் வளரிளம் கமுகம்திணர்நிரை அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே.
சொற்பிரிப்பு
கணம்விரி குடுமிச் செம்மணிக் கவை நாக்கு கறையணல் கட்செவிப் பகுவாய்பணம்விரி துத்திப் பொறிகொள் வெள் எயிற்றுப் பாம்பணி பரமர் தம் கோயில்மணம்விரி தரு தேமாம் பொழில் மொழுப்பில் மழை தவழ் வளர் இளம் கமுகம்திணர்நிரை அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம்பலமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.