1
மாலுலா மனம்தந்(து) என்கையில் சங்கம் வவ்வினான் மலைமகள் மதலைமேலுலாந் தேவர் குலமுழு தாளும் குமரவேள் வள்ளிதன் மணாளன்சேலுலாங் கழனித் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்றவேலுலாந் தடக்கை வேந்தன்என் சேந்தன் என்னும் என் மெல்லியல் இவளே.
சொற்பிரிப்பு
மாலுலா மனம் தந்து என் கையில் சங்கம் வவ்வினான் மலைமகள் மதலைமேலுலாம் தேவர் குலமுழுது ஆளும் குமரவேள் வள்ளி தன் மணாளன்சேலுலாம் கழனித் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்றவேலுலாம் தடக்கை வேந்தன் என் சேந்தன் என்னும் என் மெல்லியல் இவளே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.