1
ஏகநா யகனை இமையவர்க்(கு) அரசை என்னுயிர்க்(கு) அமுதினை எதிரில்போகநா யகனைப் புயல்வணற்(கு) அருளிப் பொன்னெடுஞ் சிவிகையா வூர்ந்தமேகநா யகனை மிகுதிரு வீழி மிழலைவிண் ணிழிசெழுங் கோயில்யோகநா யகனை அன்றிமற் றொன்றும் உண்டென உணர்கிலேன் யானே.
சொற்பிரிப்பு
ஏகநாயகனை இமையவர்க்கு அரசை என்னுயிர்க்கு அமுதினை எதிர் இல்போகநாயகனைப் புயல்வணற்கு அருளிப் பொன்நெடும் சிவிகையா ஊர்ந்தமேகநாயகனை மிகு திருவீழி மிழலை விண்ணிழி செழுங்கோயில்யோகநாயகனை அன்றி மற்றொன்றும் உண்டு என உணர்கிலேன் யானே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.