திருமுறை 9 · 9.004 · 11

கோயில்

அருளியவர்
திருமாளிகைத்தேவர்
பண்
காந்தாரம்
தலம்
கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

இணங்கிலா ஈசன் நேசத்(து) இருந்தசித் தத்தி னேற்குமணங்கொள்சீர்த் தில்லை வாணன் மணஅடி யார்கள் வண்மைக்குணங்களைக் கூறா வீறில் கோறைவாய்ப் பீறற் பிண்டப்பிணங்களைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே.
சொற்பிரிப்பு
இணங்கிலா ஈசன் நேசத்து இருந்த சித்தத்தினேற்குமணங்கொள் சீர்த் தில்லைவாணன் மண அடியார்கள் வண்மைக்குணங்களைக் கூறா வீறு இல் கோறைவாய்ப் பீறல் பிண்டப்பிணங்களைக் காணா கண் வாய் பேசாது அப்பேய்களோடே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

எட்டுரு விரவி என்னை ஆண்டவன் ஈண்டு சோதிவிட்டிலங்(கு) அலங்கல் தில்லை வேந்தனைச் சேர்ந்தி லாததுட்டரைத் தூர்த்த வார்த்தைத் தொழும்பரைப் பிழம்பு பேசும்பிட்டரைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே.
சொற்பிரிப்பு
எட்டு உரு விரவி என்னை ஆண்டவன் ஈண்டு சோதிவிட்டிலங்கு அலங்கல் தில்லைவேந்தனைச் சேர்ந்திலாத துட்டரைத் தூர்த்த வார்த்தைத்தொழும்பரைப் பிழம்பு பேசும் பிட்டரைக் காணா கண் வாய்பேசாது அப்பேய்களோடே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

அருள்திரள் செம்பொன் சோதி அம்பலத் தாடுகின்றஇருள்திரள் கண்டத் தெம்மான் இன்பருக்(கு) அன்பு செய்யாஅரட்டரை அரட்டுப் பேசும் அழுக்கரைக் கழுக்க ளாயபிரட்டரைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே.
சொற்பிரிப்பு
அருள்திரள் செம்பொற்சோதி அம்பலத்து ஆடுகின்றஇருள்திரள் கண்டத்து எம்மான் இன்பருக்கு அன்பு செய்யாஅரட்டரை அரட்டுப் பேசும் அழுக்கரைக் கழுக்களாயபிரட்டரைக் காணா கண் வாய் பேசாது அப்பேய்களோடே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

துணுக்கென அயனும் மாலும் தொடர்வரும் சுடராய் இப்பால்அணுக்கருக்(கு) அணிய செம்பொன் அம்பலத் தாடிக்(கு) அல்லாச்சிணுக்கரைச் செத்தற் கொத்தைச் சிதம்பரைத் சீத்தை ஊத்தைப்பிணுக்கரைக் காணா கண்வாய் பேசா(து) அப்பேய்க ளோடே.
சொற்பிரிப்பு
துணுக்கு என அயனும் மாலும் தொடர்வு அரும் சுடராய் இப்பால்அணுக்கருக்கு அணிய செம்பொன் அம்பலத்தாடிக்கு அல்லாச்சிணுக்கரைச் செத்தல் கொத்தைச் சிதம்பரைச் சீத்தை ஊத்தைப்பிணுக்கரைக் காணா கண் வாய் பேசாது அப்பேய்களோடே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

திசைக்குமிக் குலவு சீர்த்தித் தில்லைக் கூத்(து) உகந்து தீயநசிக்கவெண் ணீற(து) ஆடும் நமர்களை நணுகா நாய்கள்அசிக்கஆ ரியங்கள் ஓதும் ஆதரைப் பேத வாதப்பிசுக்கரைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே.
சொற்பிரிப்பு
திசைக்கு மிக்கு உலவு கீர்த்தித் தில்லைக் கூத்து உகந்து தீயநசிக்க வெண்ணீறு அது ஆடும் நமர்களை நணுகா நாய்கள்அசிக்க ஆரியங்கள் ஓதும் ஆதரைப் பேத வாதப்பிசுக்கரைக் காணா கண் வாய் பேசாது அப்பேய்களோடே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

ஆடர(வு) ஆட ஆடும் அம்பலத்(து) அமிர்தே என்னும்சேடர்சே வடிகள் சூடத் திருவிலா உருவி னாரைச்சாடரைச் சாட்கை மோடச் சழக்கரைப் பிழக்கப் பிட்கப்பேடரைக் காணா கண்வாய் பேசாது அப் பேய்க ளோடே.
சொற்பிரிப்பு
ஆட அரவு ஆட ஆடும் அம்பலத்து அமுதே என்னும்சேடர் சேவடிகள் சூடாத் திருவிலா உருவினாரைச்சாடரைச் சாட்கை மோடச் சழக்கரைப் பிழைக்கப் பிட்கப்பேடரைக் காணா கண் வாய் பேசாது அப்பேய்களோடே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

உருக்கிஎன் உள்ளத் துள்ளே ஊறலந் தேறல் மாறாத்திருக்குறிப்(பு) அருளும் தில்லைச் செல்வன்பாற் செல்லும் செல்வில்அருக்கரை அள்ளல் வாய கள்ளரை அவியாப் பாவப்பெருக்கரைக் காணா கண்வாய் பேசா(து)அப் பேய்க ளோடே.
சொற்பிரிப்பு
உருக்கி என் உள்ளத்துள்ளே ஊறல் அம் தேறல் மாறாத்திருக்குறிப்பு அருளும் தில்லைச் செல்வன்பால் செல்லும் செல்வு இல்அருக்கரை அள்ளல் வாய கள்ளரை அவியாப் பாவப்பெருக்கரைக் காணா கண் வாய் பேசாது அப்பேய்களோடே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

செக்கர்ஒத்(து) இரவி நூறா யிரத்திரள் ஒப்பாம் தில்லைச்சொக்கர்அம் பலவர் என்னும் சுருதியைக் கருத மாட்டாஎக்கரைக் குண்ட மிண்ட எத்தரைப் புத்த ராதிப்பொக்கரைக் காணா கண்வாய் பேசாது அப் பேய்க ளோடே.
சொற்பிரிப்பு
செக்கர் ஒத்து இரவி நூறு ஆயிரத்திரள் ஒப்பாம் தில்லைச்சொக்கர் அம்பலவர் என்னும் சுருதியைக் கருத மாட்டாஎக்கரைக் குண்டாம் மிண்ட எத்தரைப் புத்தர் ஆதிப்பொக்கரைக் காணா கண் வாய் பேசாது அப்பேய்களோடே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

எச்சனைத் தலையைக் கொண்டு செண்டடித்(து) இடபம் ஏறிஅச்சங்கொண்(டு) அமரர் ஓட நின்றஅம் பலவற்(கு) அல்லாக்கச்சரைக் கல்லாப் பொல்லாக் கயவரைப் பசுநூல் கற்கும்பிச்சரைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே.
சொற்பிரிப்பு
எச்சனைத் தலையைக் கொண்டு செண்டு அடித்து இடபம் ஏறிஅச்சம் கொண்டு அமரர் ஓட நின்ற அம்பலவற்கு கல்லாக்கச்சரைக் கல்லாப் பொல்லாக் கயவரைப் பசு நூல் கற்கும்பிச்சரைக் காணா கண் வாய் பேசாது அப்பேய்களோடே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

விண்ணவர் மகுட கோடி மிடைந்தொளிர் மணிகள் வீசும்அண்ணல்அம் பலவன் கொற்ற அரசனுக்(கு) ஆசை இல்லாத்தெண்ணரைத் தெருளா உள்ளத்(து) இருளரைத் திட்டை முட்டைப்பெண்ணரைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே.
சொற்பிரிப்பு
விண்ணவர் மகுட கோடி மிடைந்து ஒளிர் மணிகள் வீசும்அண்ணல் அம்பலவன் கொற்ற வாசலுக்கு ஆசையில்லாத்தெண்ணரைத் தெருளா உள்ளத்து இருளரைத் திட்டை முட்டைப்பெண்ணரைக் காணா கண் வாய் பேசாது அப்பேய்களோடே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

சிறப்புடை அடியார் தில்லைச் செம்பொன்அம் பலவற்(கு) ஆளாம்உறைப்புடை யடியார் கீழ்க்கீழ் உறைப்பர்சே வடிநீ(று) ஆடார்இறப்பொடு பிறப்பி னுக்கே இனியராய் மீண்டும் மீண்டும்பிறப்பரைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே.
சொற்பிரிப்பு
சிறப்பு உடை அடியார் தில்லைச் செம்பொன் அம்பலவற்கு ஆளாம்உறைப்பு உடை அடியார் கீழ்க் கீழ் உறைப்பர் சேவடி நீடார்இறப்பொடு பிறப்பினுக்கே இனியராய் மீண்டும் மீண்டும்பிறப்பரைக் காணா கண் வாய் பேசாது அப்பேய்களோடே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.