திருமுறை 9 · 9.003 · 12

கோயில் உறவாகிய யோகம் திருவிசைப்பா

அருளியவர்
திருமாளிகைத்தேவர்
பண்
பஞ்சமம்
தலம்
கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

உறவா கியயோ கமும்போ கமுமாய் உயிராளீ என்னும்என் பொன்னொருநாள்சிறவா தவர்புரஞ் செற்ற கொற்றச் சிலைகொண்டு பன்றிப்பின் சென்றுநின்றமறவா என்னும் மணிநீர் அருவி மகேந்திர மாமலைமேல் உறையும்குறவா என்னும் குணக்குன்றே என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.
சொற்பிரிப்பு
உறவு ஆகிய யோகமும் போகமுமாய் உயிராளீ! என்னும் என் பொன் ஒருநாள்சிறவாதவர் புரம் செற்ற கொற்றச் சிலைகொண்டு பன்றிப் பின் சென்று நின்றமறவா என்னும் மணி நீர் அருவி மகேந்திர மாமலைமேல் உறையும்குறவா! என்னும் குணக்குன்றே! என்னும் குலாத் தில்லை அம்பலக்கூத்தனையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

காடாடு பல்கணம் சூழக் கேழற் கடும்பின் நெடும்பகற் கான்நடந்தவேடா ! மகேந்திர வெற்பா ! என்னும் வினையேன் மடந்தைவிம் மாவெருவும்சேடா என்னும் செல்வர்மூ வாயிரம் செழுஞ்சோதி அந்தணர் செங்கைதொழும்கோடா என்னும் குணக்குன்றே என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.
சொற்பிரிப்பு
காடாடு பல்கணம் சூழக் கேழல் கடும்பின் நெடும்பகல் கான் நடந்தவேடா! மகேந்திர வெற்பா! என்னும் வினையேன் மடந்தை விம்மா வெருவும்சேடா! என்னும் செல்வர் மூவாயிரர் செழுஞ்சோதி அந்தணர் செங்கை தொழும்கோடா! என்னும் குணக்குன்றே! என்னும் குலாத் தில்லை அம்பலக்கூத்தனையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

கானே வருமுரண் ஏனம் எய்த களியார் புளினநற்கா ளாய்என்னும்வானே தடவும் நெடுங் குடுமி மகேந்திர மாமலை மேலிருந்ததேனே என்னும் தெய்வவாய் மொழியார் திருவாளர்மூ வாயிரவர் தெய்வக்கோனே என்னும் குணக்குன்றே என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.
சொற்பிரிப்பு
கானே வரு முரண் ஏனம் எய்த களிஆர் புளின நற்காளாய்! என்னும்வானே தடவும் நெடுங்குடுமி மகேந்திர மாமலை மேல் இருந்ததேனே! என்னும் தெய்வ வாய்மொழியார் திருவாளர் மூவாயிரவர் தெய்வக்கோனே! என்னும் குணக்குன்றே! என்னும் குலாத் தில்லை அம்பலக்கூத்தனையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

வெறியேறு பன்றிப் பின்சென்(று) ஒருநாள் விசயற்(கு) அருள்செய்த வேந்தே என்னும்மறியேறு சாரல் மகேந் திரமா மலைமேல் இருந்த மருந்தே ! என்னும்நெறியே! என்னும் நெறிநின்ற வர்கள் நினைக்கின்ற நீதி வேதாந்த நிலைக்குறியே !என்னும் குணக்குன்றே ! என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.
சொற்பிரிப்பு
வெறியேறு பன்றிப் பின் சென்று ஒருநாள் விசயற்கு அருள் செய்த வேந்தே! என்னும்மறியேறு சாரல் மகேந்திர மா மலை மேல் இருந்த மருந்தே! என்னும்நெறியே! என்னும் நெறி நின்றவர்கள் நினைக்கின்ற நீதி வேதாந்த நிலைக்குறியே! என்னும் குணக்குன்றே! என்னும் குலாத் தில்லை அம்பலக்கூத்தனையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

செழுந்தென்றல் அன்றில்இத் திங்கள் கங்குல் திரைவீரை தீங்குழல் சேவின்மணிஎழுந்தின்று என்மேல் பகையாட வாடும் எனைநீ நலிவதென் னேஎன்னும்அழுந்தா மகேந்திரத்(து) அந்த ரப்புட்(கு) அரசுக் கரசே ! அமரர்தனிக்கொழுந்தே என்னும் குணக்குன்றே என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.
சொற்பிரிப்பு
செழுந்தென்றல் அன்றில் இத்திங்கள் கங்குல் திரை வீரை தீங்குழல் சேவின் மணிஎழுந்தின்று என்மேல் பகையாட ஆடும் எனை நீ நலிவது என் என்னே என்னும்அழுந்தா மகேந்திரத்து அந்தரப் புட்கு அரசுக்கு அரசே! அமரர் தனிக்கொழுந்தே! என்னும் குணக்குன்றே என்னும் குலாத் தில்லை அம்பலக்கூத்தனையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

வண்டார் குழலுமை நங்கை முன்னே மகேந்திரச் சாரல் வராகத் தின்பின்கண்டார் கவல வில்லாடி வேடர் கடிநா யுடன்கை வளைந்தாய் ! என்னும்பண்டாய மலரயன் தக்கன் எச்சன் பகலோன் தலைபல் பசுங்கண்கொண்டாய் என்னும் குணக்குன்றே ! என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.
சொற்பிரிப்பு
வண்டார் குழல் உமை நங்கை முன்னே மகேந்திரச் சாரல் வராகத்தின் பின்கண்டார் கவல வில்லாடி வேடர் கடி நாயுடன் கை வளைந்தாய் என்னும்பண்டாய மலர் அயன் தக்கன் எச்சன் பகலோன் தலை பல் பசுங்கண்கொண்டாய் என்னும் குணக்குன்றே! என்னும் குலாத் தில்லை அம்பலக்கூத்தனையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

கடுப்பாய்ப் பறைகறங்கக் கடுவெஞ் சிலையும் கணையும் கவணும் கைக்கொண்(டு)உடுப்பாய் தோல்செருப்புச் சுரிகை வராக முன்னோடி விளியுளைப்பநடப்பாய் ! மகேந்திர நாத ! நாதாந்தத்(து) அரையா என்பார்க்கு நாதாந்தபதம்கொடுப்பாய் என்னும் குணக்குன்றே என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.
சொற்பிரிப்பு
கடுப்பாய்ப் பறை கறங்கக் கடுவெஞ்சிலையும் கணையும் கவணும் கைக்கொண்டுஉடுப்பாய் தோல் செருப்புச் சுரிகை வராகம் முன் ஓடு விளி உளைப்பநடப்பாய்! மகேந்திர நாத! நாதாந்தத்து அரையா என்பார்க்கு நாதாந்த பதம்கொடுப்பாய்! என்னும் குணக்குன்றே! என்னும் குலாத் தில்லை அம்பலக்கூத்தனையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

சேவேந்து வெல்கொடி யானே ! என்னும் சிவனே ! என் சேமத்துணையே என்னும்மாவேந்து சாரல் மகேந்தி ரத்தில் வளர்நா யகா ! இங்கே வாராய் என்னும்பூவேந்தி மூவா யிரவர் தொழப் புகழேந்து மன்று பொலிய நின்றகோவே ! என்னும் குணக்குன்றே ! என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.
சொற்பிரிப்பு
சேவேந்து வெல்கொடியானே என்னும் சிவனே என் சேமத்துணையே என்னும்மாவேந்து சாரல் மகேந்திரத்தின் வளர் நாயகா! இங்கே வாராய் என்னும்பூவேந்தி மூவாயிரவர் தொழப் புகழேந்து மன்று பொலிய நின்றகோவே! என்னும் குணக்குன்றே! என்னும் குலாத் தில்லை அம்பலக்கூத்தனையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

தரவார் புனம்சுனை தாழ்அருவித் தடம்கல் லுறையும் மடங்கல் அமர்மரவார் பொழில்எழில் வேங்கை எங்கும் மழைசூழ் மகேந்திர மாமலைமேல்சுரவா ! என்னும் சுடர்நீள் முடிமால்அயன் இந்திரன் முதல்தே வர்க்கெல்லாம்குரவா என்னும் குணக்குன்றே என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.
சொற்பிரிப்பு
தரவார் புனம் சுனைத் தாழ் அருவி, தடங்கல் உறையும் மடங்கல் அமர்மரவார் பொழில் எழில் வேங்கை எங்கும் மழை சூழ் மகேந்திர மாமலை மேல்சுரவா! என்னும் சுடர் நீள் முடிமால் அயன் இந்திரன் முதல் தேவர்க்கெல்லாம்குரவா! என்னும் குணக்குன்றே என்னும் குலாத் தில்லை அம்பலக்கூத்தனையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

திருநீ றிடாவுருத் தீண்டேன் என்னும் திருநீறு மெய்த்திரு முண்டத்திட்டுப்பெருநீல கண்டன் திறங்கொண்(டு) இவள் பிதற்றிப் பெருந்தெரு வேதிரியும்வருநீர் அருவி மகேந்திரப்பொன் மலையின் மலைமக ளுக்கருளும்குருநீ என்னும் குணக்குன்றே ! என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.
சொற்பிரிப்பு
திருநீறு இடா உருத் தீண்டேன் என்னும் திருநீறு மெய் திருமுண்டம் தீட்டிப்பெருநீலகண்டன் திறங்கொண்டு இவள் பிதற்றிப் பெருந்தெருவே திரியும்வருநீர் அருவி மகேந்திரப் பொன் மலையில் மலைமகளுக்கு அருளும்குரு நீ என்னும் குணக்குன்றே! என்னும் குலாத் தில்லை அம்பலக் கூத்தனையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

உற்றாய் என்னும் உன்னையன்றி மற்றொன்(று) உணரேன் என்னும் உணர்வுகள் கலக்கப்பெற்றாய ஐந்தெழுத்தும் பிதற்றிப் பிணிதீர வெண்ணீறிடப் பெற்றேன் என்னும்சுற்றாய சோதி மகேந்திரம் சூழ மனத்திருள் வாங்கிச் சூழாத நெஞ்சில்குற்றாய் ! என்னும் குணக்குன்றே ! என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.
சொற்பிரிப்பு
உற்றாய்! என்னும் உன்னை அன்றி மற்றொன்று உணரேன் என்னும் உணர்வுள் கலக்கப்பெற்றாய் ஐந்தெழுத்தும் பிதற்றிப் பிணிதீர் வெண்ணீறு இடப் பெற்றேன் என்னும்சுற்றாய சோதி மகேந்திரம் சூழ மனத்து இருள் வாங்கிச் சூழாத நெஞ்சில்குற்றாய் என்னும் குணக்குன்றே என்னும் குலாத் தில்லை அம்பலக் கூத்தனையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

வேறாக உள்ளத்(து) உவகை விளைத்(து) அவனிச் சிவலோக வேதவென்றிமாறாத மூவாயிர வரையும் எனையும் மகிழ்ந்தாள வல்லாய் ! என்னும்ஆறார் சிகர மகேந்திரத்(து) உன் அடியார் பிழைபொறுப்பாய் மாதோர்கூறாய் என்னும் குணக்குன்றே என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.
சொற்பிரிப்பு
வேறாக உள்ளத்து உவகை விளைத்து அவனிச் சிவலோக வேத வென்றிமாறாத மூவாயிரவரையும் எனையும் மகிழ்ந்து ஆள வல்லாய் என்னும்ஆறார் சிகர மகேந்திரத்து உன் அடியார் பிழை பொறுப்பாய் அமுது ஓர்கூறாய் என்னும் குணக்குன்றே என்னும் குலாத் தில்லை அம்பலக் கூத்தனையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.