திருமுறை 9 · 9.002 · 11

கோயில்

அருளியவர்
திருமாளிகைத்தேவர்
பண்
பஞ்சமம்
தலம்
கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

உயர்கொடி யாடை மிடைபட லத்தின் ஓமதூ மப்பட லத்தின்பெயர்நெடு மாடத்(து) அகிற்புகைப் படலம் பெருகிய பெரும்பற்றப் புலியூர்ச்சியரொளி மணிகள் நிரந்துசேர் கனகம் நிறைந்தசிற் றம்பலக் கூத்தா !மயர்வறும் அமரர் மகுடந்தோய் மலர்ச்சே வடிகள்என் மனத்துவைத் தருளே.
சொற்பிரிப்பு
உயர்கொடி ஆடை மிடை படலத்தின் ஓம தூமப் படலத்தின்பியர் நெடுமாடத்து அகில் புகைப்படலம் பெருகிய பெரும்பற்றப்புலியூர்சியர் ஒளிமணிகள் நிரந்துசேர் கனகம் நிறைந்த சிற்றம்பலக் கூத்தாமயர் அறும் அமரர் மகுடந்தோய் மலர்ச் சேவடிகள் என் மனத்து வைத்தருளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

கருவளர் மேகத் தகடுதோய் மகுடக் கனகமா ளிகைகலந் தெங்கும்பெருவளர் முத்தீ நான்மறைத் தொழிலால் எழில்மிகு பெரும்பற்றப் புலியூர்த்திருவளர் தெய்வப் பதிவிதி நிதியம்* திரண்டசிற் றம்பலக் கூத்தா !உருவளர் இன்பச் சிலம்பொலி அலம்பும் உன்னடிக் கீழ(து)என் னுயிரே.( * பதி வதி நிதியம் என்றும் பாடம்)
சொற்பிரிப்பு
கருவளர் மேகத்து அகடு தோய் மகுடக் கனக மாளிகை கலந்து எங்கும்பெருவளர் முத்தீ நான்மறைத் தொழிலால் எழில்மிகு பெரும்பற்றப்புலியூர்த்திருவளர் தெய்வப்பதி விதி நிதியம் திரண்ட சிற்றம்பலக் கூத்தாஉருவளர் இன்பச்சிலம்பு ஒலி அலம்பும் உன் அடிக் கீழது என் உயிரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

வரம்பிரி வாளை மிளிர்மடுக் கமலம் கரும்பொடு மாந்துமே திகள்சேர்பரம்பிரி செந்நெல் கழனிச் செங்கழுநீர்ப் பழனம்சூழ் பெரும்பற்றப் புலியூர்ச்சிரம்புரை முடிவா னவர்அடி முறையால் இறைஞ்சுசிற் றம்பலக் கூத்தாநிரந்தரம் முனிவர் நினைதிருக் கணைக்கால் நினைந்துநின்(று) ஒழிந்ததென் நெஞ்சே.
சொற்பிரிப்பு
வரம்பிரி வாளை மிளிர் மடுக் கமலம் கரும்பொடு மாந்திடும் மேதிபிரம்பு இரி செந்நெல் கழனிச் செங்கழுநீர்ப் பழனம் சூழ் பெரும்பற்றப்புலியூர்ச்சிரம்புரை முடி வானவர் அடி முறையால் இறைஞ்சும் சிற்றம்பலக் கூத்தாநிரந்தரம் முனிவர் நினை திருக்கணைக்கால் நினைந்து நின்று ஒழிந்தது என் நெஞ்சே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

தேர்மலி விழவில் குழலொலி தெருவில் கூத்தொலி ஏத்தொலி ஓத்தின்பேரொலி பரந்து கடலொலி மலியப் பொலிதரு பெரும்பற்றப் புலியூர்ச்சீர்நில(வு) இலயத் திருநடத் தியல்பில் திகழ்ந்தசிற் றம்பலக் கூத்தா !வார்மலி முலையாள் வருடிய திரள்மா மணிக்குறங்(கு) அடைந்ததென் மதியே.
சொற்பிரிப்பு
தேர் மலி விழவில் குழலொலி தெருவில் கூத்தொலி,ஏத்தொலி,ஓத்தின்பேரொலி பரந்து கடலொலி மலியப் பொலிதரு பெரும்பற்றப் புலியூர்ச்சீர்நிலவு இலயத் திருநடத்து இயல்பில் திகழ்ந்த சிற்றம்பலக் கூத்தாவார்மலி முலையாள் வருடிய திரள் மா மணிக்குறங்கு அடைந்தது என் மதியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

நிறைதழை வாழை நிழற்கொடி நெடுந்தெங்(கு) இளங்கமுகு உளங்கொள்நீள் பலமாப்பிறைதவழ் பொழில்சூழ் கிடங்கிடைப் பதணம் முதுமதிற் பெரும்பற்றப் புலியூர்ச்சிறைகொள்நீர்த் தரளத் திரள்கொள்நித் திலத்த செம்பொற் சிற்றம்பலக் கூத்தா !பொறை யணி நிதம்பப் புலியதள் ஆடைக் கச்சுநூல் புகுந்ததென் புகலே.
சொற்பிரிப்பு
நிறை தழை வாழை நிழற்கொடி நெடுந்தெங்கு இளங்கமுகு உளங்கொள் நீள்பல மாப்பிறை தவழ் பொழில் சூழ் கிடங்கு இடைப்பதணம் முதுமதில் பெரும்பற்றப்புலியூர்ச்சிறைகொள் நீர்த் தரளத்திரள் கொள் நித்திலத்த செம்பொன் சிற்றம்பலக் கூத்தாபொறையணி நிதம்பப் புலியதள் ஆடைக் கச்சுநூல் புகுந்தது என் புகலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

அதுமதி இதுவென்(று) அலந்தலை நூல்கற்(று) அழைப்பொழிந்(து) அருமறை அறிந்துபிதுமதி வழிநின்(று) ஒழிவிலா வேள்விப் பெரியவர் பெரும்பற்றப் புலியூர்ச்செதுமதிச் சமணும் தேரரும் சேராச் செல்வச் சிற்றம்பலக் கூத்தா !மதுமதி வெள்ளத் திருவயிற்(று) உந்தி வளைப்புண்(டு)என் னுள்மகிழ்ந் ததுவே.
சொற்பிரிப்பு
அது மதி இது என்று அலந்தலை நூல் கற்று அழைப்பொழிந்து அருமறை அறிந்துபிதுமதி வழி நின்று ஒழிவிலா வேள்விப் பெரியவர் பெரும்பற்றப்புலியூர்ச்செதுமதிச் சமணும் தேரரும் சேராச் செல்வச் சிற்றம்பலக் கூத்தாமதுமதி வெள்ளத் திருவயிற்று உந்தி வளைப்புண்டு என் உளம் மகிழ்ந்ததுவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பொருவரைப் புயத்தின் மீமிசைப் புலித்தோல் பொடியணி பூணநூல் அகலம்பெருவரை புரைதிண் தோளுடன் காணப் பெற்றவர் பெரும்பற்றப் புலியூர்த்திருமரு(வு) உதரத் தார்திசை யடைப்ப நடஞ்செய்சிற் றம்பலக் கூத்தா !உருமரு(வு) உதரத் தனிவடம் தொடர்ந்து கிடந்த(து)என் உணர்வுணர்ந்(து) உணர்ந்தே.
சொற்பிரிப்பு
பொருவரைப் புயத்தின் மீமிசைப் புலித்தோல் பொடியணி பூணநூல் அகலம்பெருவரை புரைதிண் தோளுடன்காணப் பெற்றவர் பெரும்பற்றப்புலியூர்த்திருமருவு உதரத்தார் திசையடைப்ப நடம் செய் சிற்றம்பலக் கூத்தா!உருமருவு உதரத் தனிவடம் தொடர்ந்து கிடந்தது என் உணர்வு உணர்ந்து உணர்ந்தே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

கணியெரி விசிறு கரம்துடி விடவாய்க் கங்கணம் செங்கைமற் றபயம்பிணிகெட இவைகண்(டு) உன்பெரு நடத்திற் பிரிவிலார் பெரும்பற்றப் புலியூர்த்திணிமணி நீல கண்டத்(து)என் அமுதே ! சீர்கொள்சிற் றம்பலக் கூத்தா !அணிமணி முறுவல் பவளவாய்ச் செய்ய சோதியுள் அடங்கிற்(று)என் அறிவே.
சொற்பிரிப்பு
கணி எரி விசிறு கரம் துடி விடவாய்க் கங்கணம் செங்கை மற்று அபயம்பிணிகெட இவை கண்டு உன் பெருநடத்தில் பிரிவிலார் பெரும்பற்றப்புலியூர்த்திணிமணிநீல கண்டத்து என் அமுதே! சீர்கொள் சிற்றம்பலக் கூத்தாஅணிமணி முறுவல் பவள வாய்ச் செய்ய சோதியுள் அடங்கிற்று என் அறிவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

திருநெடு மால்இந் திரன்அயன் வானோர் திருக்கடைக் காவலின் நெருக்கிப்பெருமுடி மோதி உகுமணி முன்றில் பிறங்கிய பெரும்பற்றப் புலியூர்ச்செருநெடு மேரு வில்லின்முப் புரம்தீ விரித்தசிற் றம்பலக் கூத்தா !கருவடி குழைக்கா(து) அமலச்செங் கமல மலர்முகம் கலந்த(து)என் கருத்தே.
சொற்பிரிப்பு
திருநெடுமால் இந்திரன் அயன் வானோர் திருக்கடைக்காவலில் நெருக்கிப்பெருமுடி மோதி உகுமணி முன்றில் பிறங்கிய பெரும்பற்றப்புலியூர்ச்செரு நெடுமேரு வில்லின் முப்புரம் தீ விரித்த சிற்றம்பலக் கூத்தா!கரு வடிகுழைக் காது அமலச் செங்கமல மலர்முகம் கலந்தது என் கருத்தே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

ஏர்கொள்கற் பகம்ஒத்(து) இருசிலைப் புருவம் பெருந்தடங் கண்கள்மூன் றுடையுன்பேர்கள்ஆ யிரம்நூறாயிரம் பிதற்றும் பெற்றியோர் பெரும்பற்றப் புலியூர்ச்சீர்கொள் கொக் கிறகும் கொன்றையும் துன்று சென்னிச் சிற்றம்பலக் கூத்தா !நீர்கொள்செஞ் சடைவாழ் மதிபுது மத்தம் நிகழ்ந்தஎன் சிந்தையுள் நிறைந்தே.
சொற்பிரிப்பு
ஏர்கொள் கற்பகம் ஒத்து இருசிலைப் புருவம், பெருந்தடம் கண்கள் மூன்றுடை உன்பேர்கள் ஆயிரம் நூறாயிரம் பிதற்றும் பெற்றியோர் பெரும்பற்றப்புலியூர்ச்சீர்கொள் கொக்கு இறகும் கொன்றையும் துன்று சென்னிச் சிற்றம்பலக் கூத்தா!நீர்கொள் செஞ்சடைவாழ் புதுமதி மத்தம் நிகழ்ந்த என் சிந்தையுள் நிறைந்தே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

காமனைக் காலன் தக்கன்மிக் கெச்சன் படக்கடைக் கணித்தவன் அல்லாப்பேய்மனம் பிறிந்த தவப்பெருந் தொண்டர் தொண்டனேன் பெரும்பற்றப் புலியூர்ச்சேமநற் றில்லை வட்டங்கொண்(டு) ஆண்ட செல்வச்சிற் றம்பலக் கூத்தா !பூமலர் அடிக்கீழ்ப் புராணபூ தங்கள் பொறுப்பர்என் புன்சொலின் பொருளே.
சொற்பிரிப்பு
காமன் அக்காலன் தக்கன் மிக்கு எச்சன் படக் கடைக்கணித்தவன் அல்லாப்பேய்மனம் பிறிந்த தவப் பெருந்தொண்டர் தொண்டனேன் பெரும்பற்றப்புலியூர்ச்சேமநல் தில்லை வட்டம் கொண்டு ஆண்ட செல்வச் சிற்றம்பலக் கூத்தாபூமலர் அடிக்கீழ்ப் புராண பூதங்கள் பொறுப்பர் என் புன்சொலின் பொருளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.