1
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே ! உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே !தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே ! சித்தத்துள் தித்திக்கும் தேனே !அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே ! அம்பலம் ஆடரங் காகவெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத் தொண்டனேன் விளம்புமா விளம்பே.
சொற்பிரிப்பு
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வேதெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே சித்தத்துள் தித்திக்கும் தேனேஅளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே அம்பலம் ஆடு அரங்கு ஆகவெளிவளர் தெய்வக் கூத்து உகந்தாயைத் தொண்டனேன் விளம்புமா விளம்பே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.