1
சொற்பிரிப்பு
உரை
மீன் வலை வீசிய வேடனாகிய சிவபெருமான் தன் தெய்வத் திருமேனியுடன் எழுந்தருளி வந்து நமக்கு வெளிப்பட்டு விட்டால், இரண்டு கண்களும் அவனுடைய திருவடியைக் கண்டு மகிழும். பெண்களோடு சேர்ந்து என் வாழ்க்கை கீழ்ப்படுதல் நிகழாது. உலகங்களில் போய்ப் பிறப்பதற்குக் காரணமான இறைவன் திருவடிகளை மறத்தல் எனும் செயல் நிகழாது . திருமால் அறியாத இறைவனது திருவடித் தாமரை இரண்டையும் வழிபடுதல் நிகழும். பண்ணுடன் கூடிய மகிழ்ச்சி தரும் பாடலும் ஆடலும் பழகுதல் நிகழும். நல்ல பாண்டிய நாட்டினை உடைய பெருமானது படையின் வீரச் செயல்களைப் பாடுதல் நிகழும். விண்ணவரும் வியக்கும்படியான இறைவனது பலதிறப்பட்ட மாற்றங்களுடைய காட்சியை அடியேன் கண்டு களிப்பேன்.