1
ஞானவாள் ஏந்தும்ஐயர் நாதப் பறையறைமின்மானமா ஏறும்ஐயர் மதிவெண் குடைகவிமின்ஆனநீற் றுக்கவசம் அடையப் புகுமின்கள்வானவூர் கொள்வோம்நாம் மாயப்படை வாராமே.
சொற்பிரிப்பு
ஞான வாள் ஏந்தும் ஐயர் நாதப் பறை அறைமின்மான மா ஏறும் ஐயர் மதி வெண் குடை கவிமின்;ஆன நீற்றுக் கவசம் அடையப் புகுமின்கள் ;வான ஊர் கொள்வோம் நாம்-மாயப் படை வாராமே.
உரை
சிவஞானமாகிய வாளினைக் கையில் ஏந்திய சிவபெருமானது பிரணவ நாதமாகிய பறையை அறையுங்கள். பெருமை பொருந்திய விடையேறும் இறைவன் சூடிய சந்திரனாகிய வெண்குடையைப் பிடியுங்கள். ஆக்கம் தரும் திருவெண்ணீறாகிய கவசத்தினுள்ளே முழுவதும் புகுந்து கொள்ளுங்கள். மாயா காரியமாகிய சேனைகள் வந்து நம்மைத் தாக்கும் முன்பாக அருள் வானில் உள்ள இன்பப்பதியாகிய சிவபுரத்தை யாம் கைப்பற்றுவோமாக!