1
சொற்பிரிப்பு
உரை
பூக்கள் நிறைந்த திருமுடியை உடைய மன்னனும் பாம்பை அணிந்த எம்பெருமானும் ஆகிய சிவபெருமான், சிறியவர்களாகிய நம்மை ஆட்கொண்டான். நம்மைவிட்டு நீங்காமல் நம் உள்ளத்தில் கலந்து ஞான உணர்வாகி நின்று நம்மை உருக்குகின்றான். (மெழுகு தீயின் சார்பை விட்டு விலகினால் இறுகி விடுவது போல, தாம் உயிர்களோடு கலந்து இருக்கும் தன்மை இல்லையானால் 'அவை உணர்விழந்து தீச்சார்பு பெற்று இறுகிக் கெட்டழியுமோ' என இரங்கி இடைவிடாது உள்ளத்தில் கலந்து ஞானமாய்த் திகழ்கின்றான்) அளவற்ற கருணையினால் ஆ! வா என்று அவனால் அழைக்கப்பட்டுப் பொய்யான இவ்வுலக வாழ்வைவிட்டு அப்பெருமானுடைய திருவடி நிழலில் புகுந்து கொள்ளக் காலம் வந்தது; போவோம்; வந்து ஒன்று சேருங்கள்.