1
சொற்பிரிப்பு
உரை
புகழே வடிவாய சிவபெருமானே! செந்தாமரைப்பூப் போன்ற அரிய செம்மேனியனே ! எனக்குக் கிடைத்தற்கரிய அமுதமானவனே! இந்நிலவுலகிலே உடம்பெடுப்பதாகிய பிறப்பு ஒழிய வேண்டும். அதற்குக் காரணமான அன்புடைமையைப் பெற வேண்டும். அவ்வன்பு என்றும் நீங்காமல் நிலவ உன் மெய்யடியார் கூட்டத்தின் நடுவே ஒப்பற்ற திருவடிவுடைய உன் திருவருள் காட்டி அடியேனையும் உய்திக்கு ஏற்றருள்வாயாக.