1
சொற்பிரிப்பு
உரை
தேவர்கள் அனைவருக்கும் அரசனே ! எல்லா இடங்களிலும், எல்லாப் பொருள்களிலும் நீக்கமற நிறைந்துள்ள சிவயோக வடிவானவனே ! அழுக்காகிய மலமுடையவன் யான். மல கன்மங்கள் என்னிடமிருந்து நீங்கவில்லை . அவ்வாறு பரிபாகப்படாத என்னிடத்தில், தானாகவே பழுக்கும் கனிபோன்று என்முன் தோன்றி, என்னை மட்டுமன்றி என் குடிமுழுவதையும் (அடியார்கள் கூட்டம்) ஆட்கொண்டவனே! ஆட்கொண்டது மட்டுமன்றி இவ்வுலக வாழ்வாகிய இன்ப துன்ப வாழ்வு நீங்கவும், சிவஞான வாழ்வு வாழப்பெறவும் மருந்து போன்ற கருணையாளனே! எல்லா நூல்களாலும் அநுபவத்தாலும் துணிந்து கூறப்பட்ட செம்பொருளே! சிறப்புக்கள் பலவுமுடைய திருவடிகளை உடையவனே! நிலைத்த ஞானச்செல்வமே! நாங்கள் உய்யும் பொருட்டு உன்னை உறுதியாகப் பற்றினேன். நீ இனி என்னை விட்டு எங்கே சென்று எழுந்து அருளுவாய்?