1
சொற்பிரிப்பு
உரை
இறைவன், பெரிய மலையாம் இமயமலை அரசன் புதல்வியைப் பாகமாகக் கொண்டவன். பாண்டிய மன்னனின் பெறுதற்கரிய அமுதம் போன்றவன்; பெயர், வடிவம் ஒன்றும் இல்லாதவன். தனது திருவடி மலரை நான் வணங்கும்படி வெளிப்பட்டு நின்று மனத்தை உருக்குவித்தான். குதிரை மேல் ஏறி வந்த வீரர் ஒருவரையல்லாது, பிறர் எவருடைய வடிவத்தையும் என் உள்ளம் அறிய மாட்டாது.