1
சொற்பிரிப்பு
உரை
ஒளி வடிவமானவனே! (ஞாயிறு, திங்கள்) ஆகிய இரு சுடரானவனே! அவற்றைச் சூழ்ந்த (நட்சத்திரங்களாகிய) நல் ஒளியையுடைய விளக்கே! சுருண்ட கூந்தலையும், பருத்த நகிலையும் உடைய உமை மங்கையைத் திருமேனியில் பாதியாகக் கொண்டவனே ! மேலோனே ! பால் போலும் வெண்ணிறமான திருநீற்றை அணிந்தவனே! தாமரை மலர்மீது வீற்றுள்ள நான்முகனும் மற்றும் திருமாலும் அறியாத நீதியே ! வளம் பொருந்திய திருப்பெருந்துறையில் மலர் நிறைந்த குருந்த மரத்தடியின் கீழ் வீற்றிருந்த சிறப்பையுடைய முதல்வனே ! அடியேன் விரும்பி உன்னை அழைத்தால் நீ எனக்கு 'அஞ்சாதே' என உறுதியுரை தந்தருள்க. !