1
சொற்பிரிப்பு
உரை
இறைவன், ஒளிர்கின்ற பொன்மலை போன்றும் துளைக்கப்படாத முத்து போன்றும் விளங்குகின்றான். பயன் இன்றி, அடிமையாக இருக்க விரும்பிக் கீழ்ப்பட்ட என்னை ஏற்றுக் கொண்ட அருட்கோயில் அவன். கரிய நிறமுடைய திருமாலும் நான்முகனும் செருக்கினால் தடைப்பட்டு இன்னும் சென்றடைய முடியாத கிடைத்தற்கரிய அருமருந்தானவன். பொள்ளப்படாத மாணிக்கமாகிய சிவனைக்கூடி, அவன் பக்கலில் பொருந்தி இருப்பது எந்தாளோ?