1
சொற்பிரிப்பு
உரை
என் தலைவனாகிய சிவபெருமானே! கருடன் படம் பொறிக்கப்பட்ட கொடியைத் தனது சின்னமாகக் கொண்ட திருமாலும் காணமுடியாதது உனது செவ்விய வீரக்கழல் அணியப் பெற்ற திருவடி. இப்பேர்ப்பட்ட திருவடி என்னும் பெரிய பொருளை எனக்கு இப்பூவுலகில் தந்து என்னை ஆண்டருளிய பொள்ளாத (உளியினால் செதுக்கப்படாத) மாணிக்கம் போன்றவனே! என்னைச் சூழ்ந்திருக்கும் அஞ்ஞான இருளாகிய ஆணவ மலத்தை வலி இழக்கச் செய்வாயாக. அதன் பின்னர் உன்னுடைய வீட்டுலகத்தில் (சிவலோகத்தில்) கிடைக்கும் அருளைப் பெறுவதற்கு 'இங்கே வா' என்று என்னைக் கூப்பிடுவாயாக. இதற்கு நான் ஆசைப்பட்டேன் என்பதறிந்து என்னை அழைப்பாயாக.