1
சொற்பிரிப்பு
உரை
சிறந்த இதழ்களை உடைய தாமரைகள் மலரும் குளிர்ந்த சேற்றுடை வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபெருமானே! உயர்ந்த நந்திக் கொடியினை உடையாய், என்னை உடையவனே! எனது வாழ்விற்கு மூலப்பொருளான எம்பெருமானே! பொழுது விடிந்தது. நீ எழுந்தருளினால் நாங்கள் நினது அழகிய இரு திருவடிகளுக்கு ஒத்த மலர்களை அவற்றின் மேல் தூவி உன் சந்நிதியில் நின்று நின் திருமுகத்தில் எழுகின்ற அருள்விளங்கும் அழகிய புன்சிரிப்பைப் பெற்று நின் திருவடிகளை வணங்குவோம். துயில் நீங்கித் திருப்பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக.