1
சொற்பிரிப்பு
உரை
போர் செய்தல் அமைந்த வேல் போன்ற கண்களை உடைய பெண்களே! சிறப்பு மிகுந்த பவளத் துண்டங்களைத் தூண்களாகவும் முத்து வடங்களைக் கயிறாகவும் உடைய அழகான பொன்னாலாகிய ஊஞ்சல் பலகையில் ஏறி அமர்வோம். திருமாலால் அறியவொண்ணாத, அன்று அலர்ந்த தாமரை மலரை ஒத்த திருவடி நிழலை நாய் போலும் அடியேனுக்கு இறைவன் இருப்பிடமாக அளித்தார். உத்தர கோச மங்கையில் உறையும் அந்தத் தெவிட்டாத அமுதத்தின் அருளுருவாக விளங்கும் இரு பொன்னடிகளையும் புகழ்ந்து பாடிப் பொன்னூசல் ஆடுவோமாக !