1
சொற்பிரிப்பு
உரை
சிவபெருமான் மேரு மலையை வில்லாகக் கையில் கொண்டு வளைத்தான். அம்பு எய்யவில்லை; போர் மூண்டது . அசுரர்களுடைய மூன்று நகர்களும் துயருற்றன. உடனேயே, திடீரென அந்த மூன்று நகர்களும் வெந்து நீறாயின. அதில் வாழ்ந்த அசுரர்கள் அனைவரும் ஒருமிக்க வெந்து நீறாயினர். வில்லில் கோத்த அம்பு பயன்படாமலே நேர்ந்த அந்த வியத்தகு செயலைப்பாடி உந்தி பறந்து விளையாடு.