1
சொற்பிரிப்பு
உரை
சிவபெருமான் திருவடிகளுக்கு அவைகளே ஒப்பானவை அல்லாமல் பிற திருவடிகள் ஒப்பாகா. அவன் தனது ஒப்புயர்வற்ற திருவடிகளை என்தலைமீது வைத்து எனக்குத் தீட்சையைச் செய்வித்தான். அவ்வாறு செய்த உடனேயே இதுவரையில் எனக்குத் துணை போவார்கள் எனது உறவினர்களே என்று நினைத்துக் கொண்டிருந்த எண்ணங்கள் என் மனத்தைவிட்டு நீங்கப்பெற்று இறைவனே எனக்கு உற்ற துணை என்பதனை உணர்ந்தேன். அச்சிவபெருமானது பெருமைகளைப் புகழ்ந்து பாடி மலர்களைக் கொடியிலிருந்து பறிப்போமாக.