1
சொற்பிரிப்பு
உரை
ஆண்டவன் திருமேனிமேல் பூசுவது வெள்ளிய திருநீற்றுப் பொடியாகும். ஆபரணமாக அணிவதோ பாம்பாகும். திருவாயினால் பேசுவது தெளிவில்லாத இரகசியமே போலும். தோழியே! இவற்றைப் பூசுவதும், பேசுவதும், பூண்பதும் செய்து என்ன பயன் ? எனில் இவற்றால் இறைவன் எல்லா உயிர்களுக்கும் அவ்வவற்றிற்குத் தக்க பயன் அளிப்பவன் ஆவான்.