1
சொற்பிரிப்பு
உரை
அரச வண்டே! தாமரை மலர் மேல் ஏறித் தங்கும் நான்முகனும் இந்திரனும் எல்லோருடைய நாவிலும் சென்று தங்கிக் கலைகளுக்கெல்லாம் அரசியாக விளங்கும் அழகமைந்த கலைமகளும், திருமாலும், நான்கு வேதங்களும், எருமைக்கடா மீது ஏறி வரும் ஒளி உருவினன் ஆகிய எமன் என்று சொல்லப்படும் உருத்திரனும், தேவர்களும் ஆகிய எல்லோராலும் அறிய ஒண்ணாத இடபத்தை வாகனமாகக் கொண்ட சிவபெருமானது செவ்விய திருவடி மலரையே அடைந்து நீ ரீங்காரம் செய்வாயாக!