1
சொற்பிரிப்பு
உரை
(இந்த முதல் பாட்டில் வரும் இறைவியர்களின் பெயர்களைத் தாங்கிய பெண்களை விளித்து, அவர்கள் இன்னின்ன செய்யுங்கள் என்று அமைந்துள்ளது. சத்தி= உருத்திராணி (உருத்திரனின் தேவி); சோமி = திருமகள் (சீதேவி, இலட்சுமி); பார்மகள்= பூதேவி; சோமி மற்றும் பார்மகள் இருவரும் திருமாலின் தேவியர்கள்; நாமகள் = சரசுவதி (பிரம்மாவின் தேவி), சித்தி = கணபதியின் தேவி; கௌரி, பார்ப்பதி = உமையம்மையின் பெயர்கள்; கங்கை = கங்காதேவி) தோழியர்களே! நல் முத்துக்களால் ஆகிய மாலையினையும் மலர் மாலையையும் தொங்கவிட்டு, பயிர் முளைகளிட்ட குடம், நறும்புகைக் கலசம், விளக்கு என்பவற்றை முறையாக வைப்பீர்களாக. உருத்திர சத்தியும், திருமகளும், நிலமகளும், கலைமகளும் பல்லாண்டு பாடுவீராக. கணபதியின் சத்தியும் காளியும் உமையும் கங்கையும் சேர்ந்து இறைவனுக்கு வீசுவதற்குச் சாமரத்தைக் கைப்பிடிப்பீராக. எம் தந்தையும், ஆசிரியனும் திருவையாற்றில் கோயில் கொண்டவனுமாகிய எம் தலைவனைப் பாடி, அவனுக்குத் திருமுழுக்காட்ட அழகிய வாசனைப் பொடியை நாம் இடிப்போமாக.