1
சொற்பிரிப்பு
உரை
அம்மனை ஆடும் அம்மையே! சிவந்த கண்களையுடைய நெடிய திருமாலும் வராகமாய் மண்ணைத் தோண்டிப் போயும் காண முடியாத ஒளி விளங்கும் தாமரை போலும் திருவடிகளோடு நிலவுலகத்தே புகுந்தருளி, நம் பிறப்பைத் தொலைத்து, நம்மை அடிமையாகக் கொண்டு, வலிய அழைத்து வீட்டினை நல்கும் தென்னை மரங்கள் நிறைந்த பொழிலுடைய திருப்பெருந்துறையில் எழுந்தருளி இருப்பவனும், அழகிய திருநோக்கு உடையவனும் சிறந்த பேரருளாளன் ஆகியும் இருப்பவனது அழகிய கருணை ததும்பும் நெடிய கழலணிந்த திருவடிகளையே நாம் பாடுவோமாக!