1
சொற்பிரிப்பு
உரை
ஒளி பொருந்திய நீண்ட கண்ணை உடைய பெண்ணே ! முதலும் முடிவுமில்லாத காண்டற்கரிய பெருமையுடைய ஒளியானவனை நாங்கள் பாடுகிறோம். அதைக் கேட்டும் இன்னும் நீ துயில்கின்றனையோ ? உன் செவிதான் சொல்லுவதைக் கேளாத வலிய செவியோ? பெரிய கடவுளது நெடிய சிலம்பணிந்த திருவடிகளை நாங்கள் வாழ்த்திய வாழ்த்தின் ஓசை தெரு முழுவதும் பரவியுள்ளது. அதனைக் கேட்ட அளவிலேயே ஒருத்தி பொருமி அழுது, உடம்பு மறந்து, மலர் நிறைந்த படுக்கையிலிருந்து கீழே விழுந்தாள். இந்நிலத்தே ஒன்றிற்குமாகாதவள் போல் மூர்ச்சித்துக் கிடக்கலாயினள். இது என்ன நிலை பார்! அவள் செயல் அவ்வாறிருக்க, எங்கள் தோழியாகிய உன் தன்மை, விழித்து எழாதிருக்கும் இந்நிலையோ? இது என்ன? எமது கண் பாவை போன்றவளே! சொல்லுவதை ஏற்பாயாக. ஆய்வாயாக .