திருமுறை 7 · 7.099 · 11

திருநாகேச்சரம்

அருளியவர்
சுந்தரர்
பண்
பஞ்சமம்
தலம்
நாகேச்சுரம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

பிறையணி வாணுதலாள் உமையாளவள் பேழ்கணிக்கநிறையணி நெஞ்சனுங்க நீலமால்விடம் உண்டதென்னேகுறையணி குல்லைமுல்லை அளைந்துகுளிர் மாதவிமேல்சிறையணி வண்டுகள்சேர் திருநாகேச் சரத்தானே.
சொற்பிரிப்பு
பிறை அணி வாள் நுதலாள் உமையாள் அவள் பேழ்கணிக்கநிறை அணி நெஞ்சு அனுங்க நீல மால் விடம் உண்டது என்னேகுறை அணி குல்லை முல்லை அளைந்து குளிர் மாதவி மேல்சிறை அணி வண்டுகள் சேர் திரு நாகேச்சரத்தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

அருந்தவ மாமுனிவர்க் கருளாகியோர் ஆலதன்கீழ்இருந்தற மேபுரிதற் கியல்பாகிய தென்னைகொலாம்குருந்தய லேகுரவம் அரவின்னெயி றேற்றரும்பச்செருந்திசெம் பொன்மலருந் திருநாகேச் சரத்தானே.
சொற்பிரிப்பு
அருந்தவ மா முனிவர்க்கு அருளாகி ஓர் ஆல் அதன் கீழ்இருந்து அறமே புரிதற்கு இயல்பாகியது என்னைகொலாம்குருந்து அயலே குரவம் அரவின் எயிறு ஏற்று அரும்பச்செருந்தி செம்பொன் மலரும் திரு நாகேச்சரத்தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

பாலன தாருயிர் மேற் பரியாது பகைத்தெழுந்தகாலனை வீடுவித்துக் கருத்தாக்கிய தென்னைகொலாம்கோல மலர்க்குவளைக் கழுநீர்வயல் சூழ்கிடங்கில்சேலொடு வாளைகள்பாய் திருநாகேச் சரத்தானே.
சொற்பிரிப்பு
பாலனது ஆருயிர் மேல் பரியாது பகைத்து எழுந்தகாலனை வீடுவித்துக் கருத்து ஆக்கியது என்னை கொலாம்கோல மலர்க் குவளைக் கழுநீர் வயல் சூழ் கிடங்கில்சேலொடு வாளைகள் பாய் திரு நாகேச்சரத்தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

குன்ற மலைக்குமரி கொடியேரிடை யாள்வெருவவென்றி மதகரியின் உரிபோர்த்ததும் என்னைகொலாம்முன்றில் இளங்கமுகின் முதுபாளை மதுவளைந்துதென்றல் புகுந்துலவுந் திருநாகேச் சரத்தானே.
சொற்பிரிப்பு
குன்ற மலைக் குமரி கொடியேர் இடையாள் வெருவவென்றி மத கரியின் உரி போர்த்ததும் என்னைகொலாம்முன்றில் இளங்கமுகின் முது பாளை மது அளைந்துதென்றல் புகுந்து உலவும் திரு நாகேச்சரத்தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

அரைவிரி கோவணத்தோ டரவார்த்தொரு நான்மறைநூல்உரைபெரு கவ்வுரைத்தன் றுகந்தருள் செய்ததென்னேவரைதரு மாமணியும் வரைச்சந்தகி லோடும்உந்தித்திரைபொரு தண்பழனத் திருநாகேச் சரத்தானே.
சொற்பிரிப்பு
அரை விரி கோவணத்தோடு அரவு ஆர்த்தொரு நான் மறைநூல்உரை பெருக உரைத்து அன்று உகந்தருள் செய்தது என்னேவரை தரு மாமணியும் வரைச் சந்து அகிலோடும் உந்தித்திரைபொரு தண் பழனத் திரு நாகேச்சரத்தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

தங்கிய மாதவத்தின் தழல்வேள்வியி னின்றெழுந்தசிங்கமும் நீள்புலியுஞ் செழுமால்கரி யோடலறப்பொங்கிய போர்புரிந்து பிளந்தீருரி போர்த்ததென்னேசெங்கயல் பாய்கழனித் திருநாகேச் சரத்தானே.
சொற்பிரிப்பு
தங்கிய மா தவத்தின் தழல் வேள்வியின் நின்று எழுந்தசிங்கமும் நீள் புலியும் செழு மால் கரியோடு அலறப்பொங்கிய போர் புரிந்து பிளந்து ஈருரி போர்த்தது என்னேசெங்கயல் பாய் கழனித் திரு நாகேச்சரத்தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

நின்றஇம் மாதவத்தை ஒழிப்பான்சென் றணைந்துமிகப்பொங்கிய பூங்கணைவேள் பொடியாக விழித்தல்என்னேபங்கய மாமலர்மேல் மதுவுண்டுவண் தேன்முரலச்செங்கயல் பாய்வயல்சூழ் திருநாகேச் சரத்தானே.
சொற்பிரிப்பு
நின்ற இம்மாதவத்தை ஒழிப்பான் சென்று அணைந்து மிகப்பொங்கிய பூங்கணை வேள் பொடியாக விழித்தல் என்னேபங்கய மாமலர் மேல் மது உண்டு வண் தேன் முரலச்செங்கயல் பாய் வயல் சூழ் திரு நாகேச்சரத்தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

வரியர நாணதாக மாமேரு வில்லதாகஅரியன முப்புரங்கள் அவைஆரழல் ஊட்டல்என்னேவிரிதரு மல்லிகையும் மலர்ச்சண்பக மும்மளைந்துதிரிதரு வண்டுபண்செய் திருநாகேச் சரத்தானே.
சொற்பிரிப்பு
வரி அர நாண் அது ஆக மா மேரு வில் அது ஆகஅரியன முப்புரங்கள் அவை ஆரழல் ஊட்டல் என்னேவிரி தரு மல்லிகையும் மலர்ச் சண்பகமும் அளைந்துதிரி தரு வண்டு பண்செய் திரு நாகேச்சரத்தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

அங்கியல் யோகுதன்னை அழிப்பான்சென் றணைந்துமிகப்பொங்கிய பூங்கணைவேள் பொடியாக விழித்தல்என்னேபங்கய மாமலர்மேல் மதுவுண்டுபண் வண்டறையச்செங்கயல் நின்றுகளுந் திருநாகேச் சரத்தானே.
சொற்பிரிப்பு
அங்கு இயல் யோகு தன்னை அழிப்பான் சென்று அணைந்து மிகப்பொங்கிய பூங்கணை வேள் பொடியாக விழித்தல் என்னேபங்கய மாமலர் மேல் மதுவுண்டு பண் வண்டு அறையச்செங்கயல் நின்று உகளும் திரு நாகேச்சரத்தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

குண்டரைக் கூறையின்றித் திரியுஞ்சமண் சாக்கியப்பேய்மிண்டரைக் கண்டதன்மை விரவாகிய தென்னைகொலோதொண்டிரைத் துவணங்கித் தொழில்பூண்டடி யார்பரவும்தெண்டிரைத் தண்வயல்சூழ் திருநாகேச் சரத்தானே.
சொற்பிரிப்பு
குண்டரைக் கூறை இன்றித் திரியும் சமண் சாக்கியப் பேய்மிண்டரைக் கண்ட தன்மை விரவு ஆகியது என்னை கொலோதொண்டு இரைத்து வணங்கித் தொழில் பூண்டு அடியார் பரவும்தெண் திரைத் தண் வயல் சூழ் திரு நாகேச்சரத்தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

கொங்கணை வண்டரற்றக் குயிலும்மயி லும்பயிலும்தெங்கணை பூம்பொழில்சூழ் திருநாகேச் சரத்தானைவங்கம் மலிகடல்சூழ் வயல்நாவலா ரூரன்சொன்னபங்கமில் பாடல்வல்லார் அவர்தம்வினை பற்றறுமே.
சொற்பிரிப்பு
கொங்கு அணை வண்டு அரற்றக் குயிலும் மயிலும் பயிலும்தெங்கு அணை பூம்பொழில் சூழ் திரு நாகேச்சரத்தானைவங்கம் மலி கடல் சூழ் வயல் நாவல் ஆரூரன் சொன்னபங்கமில் பாடல் வல்லார் அவர் தம் வினை பற்று அறுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.