1
தண்ணியல் வெம்மையி னான்றலை யிற்கடை தோறும்பலிபண்ணியல் மென்மொழி யார்இடக்* கொண்டுழல் பண்டரங்கன்புண்ணிய நான்மறை யோர்முறை யாலடி போற்றிசைப்பநண்ணிய நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே.( * இடம் என்றும் பாடம்)
சொற்பிரிப்பு
தண் இயல் வெம்மையினான்; தலையில் கடைதோறும் பலி,பண் இயல் மென் மொழியார், இடக் கொண்டு உழல் பண்டரங்கன்புண்ணிய நால்மறையோர் முறையால் அடி போற்று இசைப்பநண்ணிய நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.