1
ஆதியன் ஆதிரை யன்அயன் மால்அறி தற்கரியசோதியன் சொற்பொரு ளாய்ச்சுருங் காமறை நான்கினையும்ஓதியன் உம்பர்தங் கோனுல கத்தினுள் எவ்வுயிர்க்கும்நாதியன் நம்பெரு மான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே.
சொற்பிரிப்பு
ஆதியன்; ஆதிரையன் அயன் மால் அறிதற்கு அரியசோதியன்; சொல் பொருள் ஆய், சுருங்கா மறை நான்கினையும்ஓதியன்; உம்பர் தம் கோன்; உலகத்தினுள் எவ் உயிர்க்கும்நாதியன்; நம்பெருமான்; நண்ணும் ஊர் நனிபள்ளி அதே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.