திருமுறை 7 · 7.096 · 10

திருவாரூர்ப்பரவையுண்மண்டளி

அருளியவர்
சுந்தரர்
பண்
பஞ்சமம்
தலம்
ஆரூர்ப் பரவையுண்மண்டளி
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

தூவாயா தொண்டுசெய் வார்படு துக்கங்கள்காவாயா கண்டுகொண் டார்ஐவர் காக்கிலும்நாவாயால் உன்னையே நல்லன சொல்லுவேற்காவாவென் பரவையுண் மண்டளி யம்மானே.
சொற்பிரிப்பு
தூ வாயா! தொண்டு செய்வார்‌ படு துக்கங்கள்‌காவாயா? கண்டுகொண்டார்‌ ஐவர்‌ காக்கிலும்‌,நா வாயால்‌ உன்னையே நல்லன சொல்லுவேற்கு“ஆவா!” என்‌ பரவையுண் ‌ மண்டளி அம்மானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பொன்னானே புலவர்க்கு நின்புகழ் போற்றலாம்தன்னானே தன்னைப் புகழ்ந்திடுந் தற்சோதிமின்னானே செக்கர் வானத் திளஞாயிறன்னானே பரவையுண் மண்டளி யம்மானே.
சொற்பிரிப்பு
பொன்னானே, புலவர்க்கு! நின்‌ புகழ்‌ போற்றல்‌ ஆம்‌தன்னானே தன்னைப்‌ புகழ்ந்திடும்‌ தற்சோதி!மின்னானே! செக்கர் வானத்து இள ஞாயிறுஅன்னானே! பரவையுண் மண்டளி அம்மானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

நாமாறா துன்னையே நல்லன சொல்லுவார்போமாறென் புண்ணியா புண்ணியம் ஆனானேபேய்மாறாப் பிணமிடு காடுகந் தாடுவாய்க்காமாறென் பரவையுண் மண்டளி யம்மானே.
சொற்பிரிப்பு
நா மாறாது உன்னையே நல்லன சொல்லுவார்‌போம்‌ ஆறு என்‌? புண்ணியா! புண்ணியம்‌ ஆனானே!பேய்‌ மாறாப்‌ பிணம்‌ இடு காடு உகந்து ஆடுவாய்க்குஆம்‌ ஆறு என்‌? பரவையுண் மண்டளி அம்மானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

நோக்குவேன் உன்னையே நல்லன நோக்காமைக்காக்கின்றாய் கண்டுகொண் டார்ஐவர் காக்கிலும்வாக்கென்னும் மாலைகொண் டுன்னை என்மனத்தார்க்கின்றேன் பரவையுண் மண்டளி யம்மானே.
சொற்பிரிப்பு
நோக்குவேன்‌, உன்னையே; நல்லன நோக்காமைக்‌காக்கின்றாய்‌; கண்டு கொண்டார்‌ ஐவர்‌ காக்கினும்‌,வாக்கு என்னும்‌ மாலைகொண்டு உன்னை என்‌ மனத்துஆர்க்கின்றேன்‌ பரவையுண் மண்டளி அம்மானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

பஞ்சேரும் மெல்லடி யாளையோர் பாகமாய்நஞ்சேரும் நன்மணி கண்டம் உடையானேநெஞ்சேர நின்னையே உள்கி நினைவாரைஅஞ்சேலென் பரவையுண் மண்டளி யம்மானே.
சொற்பிரிப்பு
பஞ்சு ஏரும்‌ மெல்‌ அடியாளை ஓர் பாகம்‌ ஆய்‌,நஞ்சு ஏரும்‌ நல்‌ மணி கண்டம்‌ உடையானே!நெஞ்சு ஏர நின்னையே உள்கி நினைவாரை,“அஞ்சேல்‌!" என்‌ பரவையுண் மண்டளி அம்மானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

அம்மானே ஆகம சீலர்க் கருள்நல்கும்பெம்மானே பேரரு ளாளன் பிடவூரன்தம்மானே தண்டமிழ் நூற்புல வாணர்க்கோர்அம்மானே பரவையுண் மண்டளி யம்மானே.
சொற்பிரிப்பு
அம்மானே! ஆகம சீலர்க்கு அருள்‌ நல்கும்‌பெம்மானே! பேரருளாளன்‌ பிடவூரன்‌தம்மானே! தண் தமிழ் நூல்‌ புலவாணர்க்கு ஓர்‌அம்மானே! பரவையுண் மண்டளி அம்மானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

விண்டானே மேலையார் மேலையார் மேலாயஎண்டானே எழுத்தொடு சொற்பொருள் எல்லாமுன்கண்டானே கண்டனைக் கொண்டிட்டுக் காட்டாயேஅண்டானே பரவையுண் மண்டளி யம்மானே.
சொற்பிரிப்பு
விண்டானே! மேலையார் மேலையார் மேலாயஎண் தானே! எழுத்தொடு சொல் பொருள்‌ எல்லாம்‌ முன்‌கண்டானே! கண் தனைக் ‌ கொண்டிட்டுக்‌ காட்டாயே!அண்டானே! பரவையுண் மண்டளி அம்மானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

காற்றானே கார்முகில் போல்வதோர் கண்டத்தெங்கூற்றானே கோல்வளை யாளையோர் பாகமாய்நீற்றானே நீள்சடை மேல்நிறை வுள்ளதோர்ஆற்றானே பரவையுண் மண்டளி யம்மானே.
சொற்பிரிப்பு
காற்றானே! கார்முகில் ‌ போல்வது ஓர்‌ கண்டத்து எம்‌கூற்றானே! கோல் வளையாளை ஓர் பாகம்‌ ஆம்‌நீற்றானே! நீள்சடை மேல்‌ நிறை உள்ளது ஓர்‌ஆற்றானே! பரவையுண் மண்டளி அம்மானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

செடியேன்நான் செய்வினை நல்லன செய்யாதகடியேன்நான் கண்டதே கண்டதே காமுறுங்கொடியேன்நான் கூறுமா றுன்பணி கூறாதஅடியேன்நான் பரவையுண் மண்டளி யம்மானே.
சொற்பிரிப்பு
செடியேன்‌, நான்‌; செய்வினை நல்லன செய்யாதகடியேன்‌, நான்‌; கண்டதே கண்டதே காமுறும்‌கொடியேன்‌, நான்‌; கூறுமாறு உன்‌ பணி கூறாதஅடியேன்‌, நான்‌ பரவையுண் மண்டளி அம்மானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

கரந்தையும் வன்னியும் மத்தமுங் கூவிளம்பரந்தசீர்ப் பரவையுண் மண்டளி யம்மானைநிரம்பிய ஊரன் உரைத்தன பத்திவைவிரும்புவார் மேலையார் மேலையார் மேலாரே.
சொற்பிரிப்பு
கரந்தையும்‌, வன்னியும்‌. மத்தமும்‌, கூவிளம்‌,பரந்த சீர்ப்‌ பரவையுண் மண்டளி அம்மானைநிரம்பிய ஊரன்‌ உரைத்தன பத்து இவைவிரும்புவார்‌ மேலையார் மேலையார் மேலாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.