1
மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதேமூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடிஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர் வாழ்ந்து போதீரே.
சொற்பிரிப்பு
மீளா அடிமை உமக்கே ஆள் ஆய், பிறரை வேண்டாதே,மூளாத் தீப் போல் உள்ளே கனன்று, முகத்தால் மிக வாடி,ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்வாளா (ஆ)ங்கு இருப்பீர்; திரு ஆரூரீர்! வாழ்ந்து போதீரே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.