திருமுறை 7 · 7.094 · 10

திருச்சோற்றுத்துறை

அருளியவர்
சுந்தரர்
பண்
கௌசிகம்
தலம்
சோற்றுத்துறை
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

அழல்நீர் ஒழுகி யனைய சடையும்உழையீ ருரியும் உடையான் இடமாம்கழைநீர் முத்துங் கனகக் குவையுஞ்சுழல்நீர்ப் பொன்னிச் சோற்றுத் துறையே.
சொற்பிரிப்பு
அழல்‌ நீர்‌ ஒழுகி அனைய சடையும்‌,உழை ஈர் உரியும்‌, உடையான்‌ இடமாம்‌-கழை நீர்‌ முத்தும் ‌ கனகக் குவையும்‌சுழல்‌ நீர்ப்‌ பொன்னி சோற்றுத்துறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பண்டை வினைகள் பறிய நின்றஅண்ட முதல்வன் அமலன் இடமாம்இண்டை கொண்டன் பிடைய றாததொண்டர் பரவுஞ் சோற்றுத் துறையே.
சொற்பிரிப்பு
பண்டை வினைகள் ‌ பறிய நின்றஅண்ட முதல்வன்‌ , அமலன்‌, இடமாம்‌இண்டை கொண்டு அன்பு இடை அறாததொண்டர்‌ பரவும்‌ சோற்றுத்துறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

கோல அரவுங் கொக்கின் இறகும்மாலை மதியும் வைத்தான் இடமாம்ஆலும் மயிலும் ஆடல் அளியுஞ்சோலை தருநீர்ச் சோற்றுத் துறையே.
சொற்பிரிப்பு
கோல அரவும்‌, கொக்கின்‌ இறகும்‌,மாலை மதியும்‌, வைத்தான்‌ இடமாம்ஆலும்‌ மயிலும்‌, ஆடல்‌ அளியும்‌,சோலை தரு நீர்‌ சோற்றுத்துறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பளிக்குத் தாரை பவள வெற்பிற்குளிக்கும் போல்நூற் கோமாற் கிடமாம்அளிக்கும் ஆர்த்தி அல்லான் மதுவந்துளிக்குஞ் சோலைச் சோற்றுத் துறையே.
சொற்பிரிப்பு
பளிக்குத் தாரை பவள வெற்பில்‌குளிக்கும்‌ போல்‌ நூல் ‌ கோமாற்கு இடமாம்‌அளிக்கும்‌ ஆர்த்தி, அல்லால்‌ மதுவம்‌துளிக்கும்‌ சோலை சோற்றுத்துறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

உதையுங் கூற்றுக் கொல்கா விதிக்குவதையுஞ் செய்த மைந்தன் இடமாம்திதையுந் தாதுந் தேனுஞ் ஞிமிறுந்துதையும் பொன்னிச் சோற்றுத் துறையே.
சொற்பிரிப்பு
உதையும்‌, கூற்றுக்கு; ஒல்கா விதிக்குவதையும்‌; செய்த மைந்தன்‌ இடமாம்‌திதையும்‌ தாதும்‌ தேனும்‌ ஞிமிறும்துதையும்‌ பொன்னி சோற்றுத்துறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

ஓதக் கடல்நஞ் சினையுண் டிட்டபேதைப் பெருமான் பேணும் பதியாம்சீதப் புனலுண் டெரியைக் காலுஞ்சூதப் பொழில்சூழ் சோற்றுத் துறையே.
சொற்பிரிப்பு
ஓதக்கடல்‌ நஞ்சினை உண்டிட்டபேதைப் பெருமான்‌ பேணும்‌ பதியாம்‌சீதப் புனல்‌ உண்டு எரியைக்‌ காலும்சூதப் பொழில்‌ சூழ்‌ சோற்றுத்துறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

இறந்தார் என்பும் எருக்குஞ் சூடிப்புறங்காட் டாடும் புனிதன் கோயில்சிறந்தார் சுற்றந் திருவென் றின்னதுறந்தார் சேருஞ் சோற்றுத் துறையே.
சொற்பிரிப்பு
இறந்தார்‌ என்பும்‌, எருக்கும்‌, சூடிப்‌புறங்காட்டு ஆடும் ‌ புனிதன்‌ கோயில்‌சிறந்தார்‌, சுற்றம்‌, திரு, என்று இன்னதுறந்தார்‌ சேரும்‌ சோற்றுத்துறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

காமன் பொடியாக் கண்ணொன் றிமைத்தஓமக் கடலார் உகந்த இடமாம்தேமென் குழலார் சேக்கை புகைத்ததூமம் விசும்பார் சோற்றுத் துறையே.
சொற்பிரிப்பு
காமன்‌ பொடியாக்‌ கண் ‌ ஒன்று இமைத்தஓமக் கடலார்‌ உகந்த இடமாம்‌தே மென் குழலார்‌ சேக்கை புகைத்ததூமம்‌ விசும்பு ஆர்‌ சோற்றுத்துறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

இலையால் அன்பால் ஏத்து மவர்க்குநிலையா வாழ்வை நீத்தார் இடமாம்தலையாற் றாழுந் தவத்தோர்க் கென்றுந்தொலையாச் செல்வச் சோற்றுத் துறையே.
சொற்பிரிப்பு
இலையால்‌, அன்பால்‌, ஏத்தும் அவர்க்குநிலையா வாழ்வை நீத்தார்‌ இடமாம்தலையால்‌ தாழும் ‌ தவத்தோர்க்கு என்றும்‌தொலையாச்‌ செல்வ சோற்றுத்துறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

சுற்றார் தருநீர்ச் சோற்றுத் துறையுள்முற்றா மதிசேர் முதல்வன் பாதத்தற்றார் அடியார் அடிநாய் ஊரன்சொற்றான் இவைகற் றார்துன் பிலரே.
சொற்பிரிப்பு
சுற்று ஆர் தரு நீர்ச் ‌ சோற்றுத்துறையுள்‌முற்றா மதி சேர்‌ முதல்வன்‌ பாதத்துஅற்றார்‌ அடியார் ‌ அடிநாய்‌ ஊரன்‌சொல்‌ தான்‌ இவை கற்றார்‌ துன்பு இலரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.