திருமுறை 7 · 7.093 · 11

திருநறையூர்ச்சித்தீச்சரம்

அருளியவர்
சுந்தரர்
பண்
குறிஞ்சி
தலம்
நறையூர்ச்சித்தீச்சரம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

நீரும் மலரும் நிலவுஞ் சடைமேல்ஊரும் அரவம் உடையான் இடமாம்வாரும் அருவி மணிபொன் கொழித்துச்சேரும் நறையூர்ச் சித்தீச் சரமே.
சொற்பிரிப்பு
நீரும்‌ மலரும் ‌ நிலவும்‌ சடைமேல்ஊரும்‌ அரவம்‌ உடையான்‌ இடமாம்‌வாரும்‌ அருவி மணி, பொன்‌, கொழித்துச்‌சேரும்‌ நறையூர்ச் ‌ சித்தீச்சரமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

அளைப்பை அரவேர் இடையாள் அஞ்சத்துளைக்கைக் கரித்தோல் உரித்தான் இடமாம்வளைக்கை மடவார் மடுவிற் றடநீர்த்திளைக்கும் நறையூர்ச் சித்தீச் சரமே.
சொற்பிரிப்பு
அளைப்‌பை அரவு ஏர் ‌ இடையாள்‌ அஞ்ச,துளைக்கைக் கரித்‌ தோல் ‌ உரித்தான்‌ இடமாம்‌வளைக்கைம்‌ மடவார் ‌ மடுவில்‌ தட நீர்த்‌திளைக்கும்‌ நறையூர்ச் ‌ சித்தீச்சரமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

இகழுந் தகையோர் எயில்மூன் றெரித்தபகழி யொடுவில் லுடையோன் பதிதான்முகிழ்மென் முலையார் முகமே கமலந்திகழும் நறையூர்ச் சித்தீச் சரமே.
சொற்பிரிப்பு
இகழும்‌ தகையோர் ‌ எயில் மூன்று எரித்தபகழியொடு வில் ‌ உடையோன்‌ பதி தான்‌முகிழ் மென் முலையார் ‌ முகமே கமலம்‌திகழும்‌ நறையூர்ச் ‌ சித்தீச்சரமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

மறக்கொள் அரக்கன் வரைதோள் வரையால்இறக்கொள் விரற்கோன் இருக்கும் இடமாம்நறக்கொள் கமலம் நனிபள் ளியெழத்திறக்கும் நறையூர்ச் சித்தீச் சரமே.
சொற்பிரிப்பு
மறக்‌ கொள்‌ அரக்கள் ‌ வரைதோள்‌ வரையால்‌இறக்‌ கொள்‌ விரல்‌ கோன் ‌ இருக்கும்‌ இடமாம்‌நறக்‌ கொள்‌ கமலம் ‌ நனி பள்ளி எழத்‌திறக்கும்‌ நறையூர்ச் ‌ சித்தீச்சரமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

முழுநீ றணிமே னியன்மொய் குழலார்எழுநீர் மைகொள்வான் அமரும் இடமாம்கழுநீர் கமழக் கயல்சேல் உகளுஞ்செழுநீர் நறையூர்ச் சித்தீச் சரமே.
சொற்பிரிப்பு
முழு நீறு அணி மேனியன்‌, மொய் குழலார்எழு நீர்மை கொள்வான்‌, அமரும்‌ இடமாம்‌கழுநீர்‌ கமழக் ‌ கயல்‌, சேல்‌, உகளும்‌செழுநீர்‌ நறையூர்ச்‌ சித்தீச்சரமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

ஊனா ருடைவெண் டலையுண் பலிகொண்டானார் அடலே றமர்வான் இடமாம்வானார் மதியம் பதிவண் பொழில்வாய்த்தேனார் நறையூர்ச் சித்தீச் சரமே.
சொற்பிரிப்பு
ஊன்‌ ஆர்‌ உடை வெண் தலை உண்‌ பலி கொண்டு,ஆன்‌ ஆர்‌ அடல்‌ ஏறு அமர்வான்‌ இடமாம்‌வான்‌ ஆர்‌ மதியம் ‌ பதி வண் பொழில்வாய்த்‌தேன்‌ ஆர்‌ நறையூர்ச்‌ சித்தீச்சரமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

காரூர் கடலில் விடமுண் டருள்செய்நீரூர் சடையன் நிலவும் இடமாம்வாரூர் முலையார் மருவும் மறுகில்தேரூர் நறையூர்ச் சித்தீச் சரமே.
சொற்பிரிப்பு
கார்‌ ஊர்‌ கடலில் ‌ விடம்‌ உண்டு அருள்செய்‌நீர்‌ ஊர்‌ சடையன்‌ நிலவும்‌ இடமாம்‌வார்‌ ஊர்‌ முலையார் ‌ மருவும்‌ மறுகில்‌தேர்‌ ஊர்‌ நறையூர்ச் ‌ சித்தீச்சரமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

கரியின் உரியுங் கலைமான் மறியும்எரியும் மழுவும் உடையான் இடமாம்புரியும் மறையோர் நிறைசொற் பொருள்கள்தெரியும் நறையூர்ச் சித்தீச் சரமே.
சொற்பிரிப்பு
கரியின்‌ உரியும்‌, கலைமான் மறியும்‌,எரியும்‌ மழுவும்‌, உடையான்‌ இடமாம்‌புரியும்‌ மறையோர் ‌ நிறை சொல் பொருள்கள்‌தெரியும்‌ நறையூர்ச் ‌ சித்தீச்சரமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

பேணா முனிவன் பெருவேள் வியெலாம்மாணா மைசெய்தான் மருவும் இடமாம்பாணார் குழலும் முழவும் விழவிற்சேணார் நறையூர்ச் சித்தீச் சரமே.
சொற்பிரிப்பு
பேணா முனிவன்‌ பெரு வேள்வி எலாம்‌மாணாமை செய்தான்‌ மருவும்‌, இடமாம்‌பாண்‌ ஆர்‌ குழலும்‌, முழவும்‌, விழவில்‌சேண்‌ ஆர்‌ நறையூர்ச் ‌ சித்தீச்சரமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

குறியில் வழுவாக் கொடுங்கூற் றுதைத்தஎறியும் மழுவாட் படையான் இடமாம்நெறியில் வழுவா நியமத் தவர்கள்செறியும் நறையூர்ச் சித்தீச் சரமே.
சொற்பிரிப்பு
குறியில்‌ வழுவாக் ‌ கொடுங்கூற்று உதைத்தஎறியும்‌ மழுவாள் படையான்‌ இடமாம்‌நெறியில்‌ வழுவா நியமத்தவர்கள்‌செறியும்‌ நறையூர்ச் ‌ சித்தீச்சரமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

போரார் புரமெய் புனிதன் அமருஞ்சீரார் நறையூர்ச் சித்தீச் சரத்தைஆரூ ரன்சொல் லிவைவல் லவர்கள்ஏரார் இமையோர் உலகெய் துவரே.
சொற்பிரிப்பு
போர்‌ ஆர்‌ புரம்‌ எய் ‌ புனிதன்‌ அமரும்‌சீர்‌ ஆர்‌ நறையூர்ச்‌ சித்தீச்சரத்தைஆரூரன்‌ சொல் ‌இவை வல்லவர்கள்‌,ஏர்‌ ஆர்‌ இமையோர்‌ உலகு எய்துவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.