1
எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெரு மானையேஉற்றாய் என்றுன்னையே உள்குகின் றேன்உணர்ந் துள்ளத்தால்புற்றா டரவா புக்கொளி யூரவி நாசியேபற்றாக வாழ்வேன் பசுபதி யேபர மேட்டியே.
சொற்பிரிப்பு
எற்றால் மறக்கேன், எழுமைக்கும் எம் பெருமானையே?“உற்றாய்'” என்று உன்னையே உள்குகின்றேன், உணர்ந்து உள்ளத்தால்;புற்று ஆடு அரவா! புக்கொளியூர் அவிநாசியேபற்று ஆக வாழ்வேன்; பசுபதியே! பரமேட்டியே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.