திருமுறை 7 · 7.089 · 11

திருவெண்பாக்கம்

அருளியவர்
சுந்தரர்
பண்
சீகாமரம்
தலம்
வெண்பாக்கம்
நாடு
தொண்டைநாடு

1

பிழையுளன பொறுத்திடுவர் என்றடியேன் பிழைத்தக்காற்பழியதனைப் பாராதே படலமென்கண் மறைப்பித்தாய்குழைவிரவு வடிகாதா கோயிலுளா யேயென்னஉழையுடையான் உள்ளிருந்து உளோம்போகீர் என்றானே.
சொற்பிரிப்பு
"பிழை உளன பொறுத்திடுவர்‌'” என்று அடியேன்‌ பிழைத்தக்கால்பழி அதனைப்‌ பாராதே, படலம்‌ என்‌ கண்‌ மறைப்பித்தாய்;குழை விரவு வடி காதா! கோயில்‌ உளாயே! என்ன,உழை உடையான்‌ உள்‌ இருந்து, 'உளோம்‌; போகீர்‌!' என்றானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

இடையறியேன் தலையறியேன் எம்பெருமான் சரணமென்பேன்நடையுடையன் நம்மடியான் என்றவற்றைப் பாராதேவிடையுடையான் விடநாகன் வெண்ணீற்றன் புலியின்றோல்உடையுடையான் எனையுடையான் உளோம்போகீர் என்றானே.
சொற்பிரிப்பு
இடை அறியேன்‌; தலை அறியேன்‌; “எம்பெருமான்‌, சரணம்‌!” என்பேன்‌;'நடை உடையன்‌, நம்‌ அடியான்‌' என்று அவற்றைப்‌ பாராதே,விடை உடையான்‌, விட நாகன்‌, வெண்நீற்றன்‌, புலியின் தோல்‌உடை உடையான்‌, எனை உடையான்‌, “உளோம்‌; போகீர்‌!” என்றானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

செய்வினையொன் றறியாதேன் திருவடியே சரணென்றுபொய்யடியேன் பிழைத்திடினும் பொறுத்திடநீ வேண்டாவோபையரவா இங்கிருந்தா யோவென்னப் பரிந்தென்னைஉய்யஅருள் செய்யவல்லான் உளோம்போகீர் என்றானே.
சொற்பிரிப்பு
செய்‌ வினை ஒன்று அறியாதேன்‌; “திருவடியே சரண்‌” என்றுபொய்‌ அடியேன்‌ பிழைத்திடினும்‌, பொறுத்திட நீ வேண்டாவோ?பை அரவா! இங்கு இருந்தாயோ? என்ன, பரிந்து என்னைஉய்ய அருள் செய்ய வல்லான்‌, 'உளோம்‌; போகீர்‌!' என்றானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

கம்பமருங் கரியுரியன் கறைமிடற்றன் காபாலிசெம்பவளத் திருவுருவன் சேயிழையோ டுடனாகிநம்பியிங்கே இருந்தீரே என்றுநான் கேட்டலுமேஉம்பர்தனித் துணையெனக்கு உளோம்போகீர் என்றானே.
சொற்பிரிப்பு
கம்பு அமரும்‌ கரி உரியன்‌; கறை மிடற்றன்‌; காபாலி;செம்பவளத் திருஉருவன்‌ ; சேயிழையோடு உடன்‌ ஆகி,“நம்பி இங்கே இருந்தீரே!" என்று நான்‌ கேட்டலுமே,உம்பர் தனித் துணை எனக்கு, 'உளோம்‌; போகீர்‌!' என்றானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

பொன்னிலங்கு நறுங்கொன்றை புரிசடைமேற் பொலிந்திலங்கமின்னிலங்கு நுண்ணிடையாள் பாகமா எருதேறித்துன்னியிரு பால்அடியார் தொழுதேத்த அடியேனும்உன்னதமாய்க் கேட்டலுமே உளோம்போகீர் என்றானே.
சொற்பிரிப்பு
பொன்‌ இலங்கு நறுங்கொன்றை புரிசடைமேல்‌ பொலிந்து இலங்க,மின்‌ இலங்கு நுண் இடையாள்‌ பாகமா, எருது ஏறி,துன்னி இருபால்‌ அடியார் ‌ தொழுது ஏத்த, அடியேனும்‌உன்னதமாய்க்‌ கேட்டலுமே, உளோம்‌; போகீர்‌!‌ என்றானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

கண்ணுதலாற் காமனையுங் காய்ந்ததிறற் கங்கைமலர்தெண்ணிலவு செஞ்சடைமேல் தீமலர்ந்த கொன்றையினான்கண்மணியை மறைப்பித்தாய் இங்கிருந்தா யோவென்னஒண்ணுதலி பெருமானார் உளோம்போகீர் என்றானே.
சொற்பிரிப்பு
கண் நுதலான்‌, காமனையும்‌ காய்ந்த திறல்‌; கங்கை, மலர்‌,தெண்‌ நிலவு, செஞ்சடை மேல் ‌ தீ மலர்ந்த கொன்றையினான்‌;“கண்மணியை மறைப்பித்தாய்‌; இங்கு இருந்தாயோ?” என்ன,ஒண் நுதலி பெருமானார்‌, “உளோம்‌; போகீர்‌!" என்றானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பார்நிலவு மறையோரும் பத்தர்களும் பணிசெய்யத்தார்நிலவு நறுங்கொன்றைச் சடையனார் தாங்கரியகார்நிலவு மணிமிடற்றீர் இங்கிருந்தீ ரேயென்னஊரரவம் அரைக்கசைத்தான் உளோம்போகீர் என்றானே.
சொற்பிரிப்பு
பார்‌ நிலவு மறையோரும் ‌ பத்தர்களும்‌ பணி செய்யத்தார்‌ நிலவு நறுங்கொன்றைச்‌ சடையனார்‌; தாங்க அரியகார்‌ நிலவு மணி மிடற்றீர்‌! இங்கு இருந்தீரே? என்ன,ஊர்‌ அரவம்‌ அரைக்கு அசைத்தான்‌, "உளோம்‌; போகீர்‌!” என்றானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

வாரிடங்கொள் வனமுலையாள் தன்னோடு மயானத்துப்பாரிடங்கள் பலசூழப் பயின்றாடும் பரமேட்டிகாரிடங்கொள் கண்டத்தன் கருதுமிடந் திருஒற்றியூரிடங்கொண் டிருந்தபிரான் உளோம்போகீர் என்றானே.
சொற்பிரிப்பு
வார்‌ இடம்‌ கொள்‌ வனமுலையாள் தன்னோடு மயானத்துப்‌பாரிடங்கள் பல சூழப் ‌ பயின்று ஆடும்‌ பரமேட்டி,கார்‌ இடம்கொள்‌ கண்டத்தன்‌, கருதும்‌ இடம்‌ திரு ஒற்றியூர்‌இடம் கொண்டு இருந்த பிரான்‌, 'உளோம்‌; போகீர்‌!' என்றானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

பொன்னவிலுங் கொன்றையினாய் போய்மகிழ்க்கீ ழிருவென்றுசொன்னஎனைக் காணாமே சூளறவு மகிழ்க்கீழேஎன்னவல்ல பெருமானே இங்கிருந்தா யோவென்னஒன்னலரைக் கண்டாற்போல் உளோம்போகீர் என்றானே.
சொற்பிரிப்பு
பொன் நவிலும்‌ கொன்றையினாய்‌! “போய்‌ மகிழ்க் கீழ்‌ இரு!" என்றுசொன்ன எனைக்‌ காணாமே, சூளுறவு மகிழ்க் கீழேஎன்ன வல்ல பெருமானே! இங்கு இருந்தாயோ? என்ன,ஒன்னலரைக்‌ கண்டால்‌ போல்‌, “உளோம்‌; போகீர்‌!” என்றானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

மான்றிகழுஞ் சங்கிலியைத் தந்துவரு பயன்களெல்லாந்தோன்றஅருள் செய்தளித்தாய் என்றுரைக்க உலகமெலாம்ஈன்றவனே வெண்கோயில் இங்கிருந்தா யோவென்னஊன்றுவதோர் கோலருளி உளோம்போகீர் என்றானே.
சொற்பிரிப்பு
"மான் திகழும்‌ சங்கிலியைத் ‌ தந்து, வரு பயன்கள்‌ எல்லாம்தோன்ற அருள் செய்து அளித்தாய்‌” என்று உரைக்க, "உலகம்‌ எலாம்‌ஈன்‌றவனே! வெண் கோயில் ‌ இங்கு இருந்தாயோ?" என்ன,ஊன்றுவது ஓர்‌ கோல்‌ அருளி, "உளோம்‌; போகீர்‌!” என்றானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

ஏராரும் பொழில்நிலவு வெண்பாக்கம் இடங்கொண்டகாராறும் மிடாற்றானைக் காதலித்திட் டன்பினொடுஞ்சீராருந் திருவாரூர்ச் சிவன்பேர்சென் னியில்வைத்தஆரூரன் தமிழ்வல்லார்க் கடையாவல் வினைதானே.
சொற்பிரிப்பு
ஏர்‌ ஆரும்‌ பொழில்‌ நிலவு வெண்பாக்கம்‌ இடம் கொண்டகார்‌ ஆரும்‌ மிடற்றானைக் ‌ காதலித்திட்டு, அன்‌பினொடும்சீர்‌ ஆரும்‌ திரு ஆரூர்ச் ‌ சிவன்‌ பேர்‌ சென்னியில்‌ வைத்தஆரூரன்‌ தமிழ்‌ வல்லார்க்கு அடையா, வல்வினை தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.