திருமுறை 7 · 7.088 · 10

திருவீழிமிழலை

அருளியவர்
சுந்தரர்
பண்
சீகாமரம்
தலம்
வீழிமிழலை
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

நம்பினார்க்கருள் செய்யுமந்தணர் நான்மறைக்கிட மாயவேள்வியுள்செம்பொ னேர்மட வாரணி பெற்ற திருமிழலைஉம்ப ரார்தொழு தேத்த மாமலை யாளொடும் முடனே உறைவிடம்அம்பொன் வீழிகொண் டீர்அடி யேற்கும் அருளுதிரே.
சொற்பிரிப்பு
நம்பினார்க்கு அருள் செய்யும்‌ அந்தணர் ‌ நால்மறைக்கு இடம்‌ ஆய வேள்வியுள்‌செம்பொன்‌ ஏர்‌ மடவார் ‌ அணி பெற்ற திரு மிழலை,உம்பரார்‌ தொழுது ஏத்த மா மலையாளொடும்‌ உடனே உறைவிடம்‌அம்‌ பொன்‌ வீழி கொண்டீர்‌! அடியேற்கும்‌ அருளுதிரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

விடங்கொள் மாமிடற் றீர்வெள்ளைச் சுருள்ஒன் றிட்டுவிட்ட காதினீர் என்றுதிடங்கொள் சிந்தையி னார்கலி காக்குந் திருமிழலைமடங்கல் பூண்ட விமானம் மண்மிசை வந்திழிச்சிய வான நாட்டையும்அடங்கல் வீழி கொண் டீர்அடி யேற்கும் அருளுதிரே.
சொற்பிரிப்பு
விடம்‌ கொள்‌ மா மிடற்றீர்‌! வெள்ளைச் சுருள்‌ ஒன்று இட்டு விட்ட காதினீர்‌! என்றுதிடம்‌ கொள்‌ சிந்தையினார் ‌ கலி காக்கும்‌ திரு மிழலை,மடங்கல்‌ பூண்ட விமானம்‌ மண் மிசை வந்து இழிச்சிய வான நாட்டையும்‌அடங்கல்‌ வீழி கொண்டீர்‌ ! அடியேற்கும்‌ அருளுதிரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

ஊனை உற்றுயிர் ஆயினீர் ஒளிமூன்று மாய்த்தெளி நீரோ டானஞ்சின்தேனை ஆட்டுகந்தீர்செழு மாடத் திருமிழலைமானை மேவிய கையினீர்மழுஏந்தினீர் மங்கை பாகத் தீர்விண்ணில்ஆன வீழிகொண்டீர்அடி யேற்கும் அருளுதிரே.
சொற்பிரிப்பு
ஊனை உற்று உயிர்‌ ஆயினீர்‌; ஒளி மூன்றும்‌ ஆய்‌, தெளி நீரொடு ஆன்‌ அஞ்சின்தேனை ஆட்டு உகந்தீர்‌! செழுமாடத்‌ திரு மிழலை,மானை மேவிய கையினீர்‌! மழு ஏந்தினீர்‌! மங்கை பாகத்தீர்‌! விண்ணில்‌ஆன வீழி கொண்டீர்‌! அடியேற்கும்‌ அருளுதிரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பந்தம் வீடிவை பண்ணினீர் படிறீர் மதிப்பிதிர்க் கண்ணி யீரென்றுசிந்தைசெய் திருக்குஞ்செங்கை யாளர் திருமிழலைவந்துநாடகம் வான நாடியர் ஆட மாலயன் ஏத்த நாடொறும்அந்தண் வீழிகொண்டீர்அடி யேற்கும் அருளுதிரே.
சொற்பிரிப்பு
“பந்தம்‌, வீடு, இவை பண்ணினீர்‌; படிறீர்‌; மதிப் பிதிர்க் கண்ணியீர்‌' என்றுசிந்தை செய்து இருக்கும்‌ செங்கையாளர்‌ திரு மிழலை,வந்து நாடகம்‌ வான நாடியர்‌ ஆட, மால்‌ அயன்‌ ஏத்த, நாள்தொறும்‌அம்‌ தண்‌ வீழி கொண்டீர்‌! அடியேற்கும்‌ அருளுதிரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

புரிசை மூன்றையும் பொன்றக் குன்றவில் ஏந்தி வேதப் புரவித் தேர்மிசைத்திரிசெய் நான்மறை யோர்சிறந் தேத்துந் திருமிழலைப்பரிசி னாலடி போற்றும் பத்தர்கள் பாடி ஆடப் பரிந்து நல்கினீர்அரிய வீழிகொண் டீர்அடி யேற்கும் அருளுதிரே.
சொற்பிரிப்பு
புரிசை மூன்றையும்‌ பொன்றக்‌ குன்றவில் ‌ ஏந்தி; வேதப் புரவித் தேர்மிசைத்திரிசெய்‌ நால் மறையோர் ‌ சிறந்து ஏத்தும் திருமிழலைப்பரிசினால்‌ அடி போற்றும்‌ பத்தர்கள் ‌ பாடி ஆடப்‌ பரிந்து நல்கினீர்‌!அரிய வீழி கொண்டீர்‌!— அடியேற்கும்‌ அருளுதிரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

எறிந்தசண்டி இடந்த கண்ணப்பன் ஏத்து பத்தர்கட் கேற்றம் நல்கினீர்செறிந்த பூம்பொழில் தேன்துளி வீசுந் திருமிழலைநிறைந்த அந்தணர் நித்தம் நாடொறும் நேசத் தாலுமைப் பூசிக் கும்மிடம்அறிந்து வீழிகொண் டீர்அடி யேற்கும் அருளுதிரே.
சொற்பிரிப்பு
எறிந்த சண்டி, இடந்த கண்ணப்பன்‌, ஏத்து பத்தர்கட்‌கு ஏற்றம்‌ நல்கினீர்‌!செறிந்த பூம்பொழில்‌ தேன்‌ துளி வீசும்‌ திரு மிழலை,நிறைந்த அந்தணர்‌ நித்தம்‌ நாள்தொறும் ‌ நேசத்தால்‌ உமைப்‌ பூசிக்கும்‌ இடம்‌அறிந்து, வீழி கொண்டீர்‌! அடியேற்கும்‌ அருளுதிரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பணிந்த பார்த்தன் பகீரதன்பல பத்தர் சித்தர்க்குப் பண்டு நல்கினீர்திணிந்த மாடந்தொறுஞ் செல்வம் மல்கு திருமிழலைதணிந்த அந்தணர் சந்தி நாடொறும் அந்தி வானிடு பூச்சிறப்பவைஅணிந்து வீழிகொண் டீர்அடி யேற்கும் அருளுதிரே.
சொற்பிரிப்பு
பணிந்த பார்த்தன்‌, பகீரதன்‌, பல பத்தர் சித்தர்க்குப்‌ பண்டு நல்கினீர்‌!திணிந்த மாடம் தொறும்‌ செல்வம்‌ மல்கு திருமிழலை:தணிந்த அந்தணர்‌ சந்தி நாள்தொறும் ‌ அந்தி வான்‌ இடு பூச் சிறப்பு அவைஅணிந்து, வீழி கொண்டீர்‌! அடியேற்கும்‌ அருளுதிரே! ‌
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

பரந்தபாரிடம் ஊரிடைப்பலி பற்றிப் பார்த்துணுஞ் சுற்ற மாயினீர்தெரிந்த நான்மறை யோர்க்கிடம் ஆய திருமிழலைஇருந்து நீர்தமிழோ டிசைகேட்கும் மிச்சையாற் காசு நித்தல்நல்கினீர்அருந்தண் வீழிகொண் டீர்அடி யேற்கும் அருளுதிரே.
சொற்பிரிப்பு
பரந்த பாரிடம்‌ ஊர்‌ இடைப்‌ பலி பற்றிப்‌ பார்த்து உணும்‌ சுற்றம்‌ ஆயினீர்‌:தெரிந்த நால்மறையோர்க்கு இடம்‌ ஆய திரு மிழலைஇருந்து, நீர்‌ தமிழோடு இசை கேட்கும்‌ இச்சையால்‌ காசு நித்தம்‌ நல்கினீர்‌;அருந்‌தண்‌ வீழி கொண்டீர்‌; அடியேற்கும்‌ அருளுதிரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

தூய நீரமு தாய வாறது சொல்லு கென்றுமைக் கேட்கச் சொல்லினீர்தீய றாக் குலை யாளர் செழுமாடத் திருமிழலைமேய நீர்பலி ஏற்றதென் னென்றுவிண் ணப்பஞ் செய்பவர்க்கு மெய்ப்பொருள்ஆய வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே.
சொற்பிரிப்பு
“தூய நீர்‌ அமுது ஆயவாறு அது சொல்லுக! '* என்று உமை கேட்க, சொல்லினீர்‌;“தீ அறா, குலையாளர்‌, செழுமாடத்‌ திரு மிழலைமேய நீர்‌ பலி ஏற்றது என்‌?” என்று விண்ணப்பம்‌ செய்பவர்க்கு மெய்ப்பொருள்‌ஆய வீழி கொண்டீர்‌; அடியேற்கும்‌ அருளுதிரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

வேத வேதியர் வேத நீதியர் ஓது வார்விரி நீர்மிழலையுள்ஆதி வீழிகொண்டீர்அடி யேற்கும் அருளுகென்றுநாத கீதம்வண் டோதுவார்பொழில் நாவலூரன்வன் றொண்டன் நற்றமிழ்பாதம் ஓதவல் லார்பர னோடு கூடுவரே.
சொற்பிரிப்பு
“வேத வேதியர்‌, வேத நீதியர் ‌ ஓதுவார்‌, விரி தீர்‌ மிழலையுள்‌ஆதி வீழி கொண்டீர்‌; அடியேற்கும்‌ அருளுக!” என்றுநாத கீதம்‌ வண்டு ஓது வார்‌ பொழில் ‌ நாவலூரன்‌ வன்தொண்டன்‌ நல்‌ தமிழ்‌பாதம்‌ ஓத வல்லார் ‌ பரனோடு கூடுவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.