திருமுறை 7 · 7.087 · 10

திருப்பனையூர்

அருளியவர்
சுந்தரர்
பண்
சீகாமரம்
தலம்
பனையூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

மாடமாளிகை கோபுரத்தொடு மண்டபம்வள ரும்வளர்பொழில்பாடல் வண்டறையும் பழனத் திருப்பனையூர்த்தோடுபெய்தொரு காதினிற்குழை தூங்கத்தொண்டர்கள் துள்ளிப்பாடநின்றாடு மாறுவல்லார் அவரே அழகியரே.
சொற்பிரிப்பு
மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம்‌ வளரும்‌ வளர்‌ பொழில்‌பாடல்‌ வண்டு அறையும் ‌ பழனத்‌ திருப்‌பனையூர்‌,தோடு பெய்து, ஒரு காதினில்‌ குழை தூங்க, தொண்டர்கள்‌ துள்ளிப்‌ பாட, நின்றுஆடும்‌ ஆறு வல்லார் ‌அவரே அழகியரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

நாறுசெங்கழு நீர்மலர் நல்லமல்லிகை சண்பகத்தொடுசேறுசெய் கழனிப் பழனத் திருப்பனையூர்நீறுபூசிநெய் யாடிதன்னை நினைப்பவர்தம் மனத்தராகிநின்றாறு சூடவல்லார் அவரே அழகியரே.
சொற்பிரிப்பு
நாறு செங்கழுநீர் மலர்‌ நல்ல மல்லிகை சண்பகத்தொடு,சேறு செய்‌ கழனிப்‌ பழனத்‌ திருப்‌பனையூர்‌,நீறு பூசி, நெய்‌ ஆடி, தம்மை நினைப்பவர் தம்‌ மனத்தராகி நின்று,ஆறு சூட வல்லார் ‌அவரே அழகியரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

செங்கண்மேதிகள் சேடெறிந்து தடம்படிதலிற் சேலினத்தொடுபைங்கண் வாளைகள் பாய்பழனத் திருப்பனையூர்த்திங்கள்சூடிய செல்வனாரடி யார்தம்மேல்வினை தீர்ப்பராய்விடிலங்கிருந் துறைவார் அவரே அழகியரே.
சொற்பிரிப்பு
செங்கண்‌ மேதிகள்‌ சேடு எறிந்து தடம்‌ படிதலின்‌ சேல்‌ இனத்தொடுபைங்கண்‌ வாளைகள்‌ பாய்‌ பழனத்‌ திருப்‌பனையூர்‌,திங்கள்‌ சூடிய செல்வனார்‌, அடியார் தம்மேல்‌ வினை தீர்ப்பராய்விடில்‌அங்கு இருந்து உறைவார்‌ அவரே அழகியரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

வாளைபாய மலங்கிளங்கயல் வரிவராலுக ளுங்கழனியுள்பாளையொண் கமுகம் புடைசூழ் திருப்பனையூர்த்தோளுமாகமுந் தோன்றநட்டமிட் டாடுவாரடித் தொண்டர்தங்களைஆளு மாறுவல்லார் அவரே அழகியரே.
சொற்பிரிப்பு
வாளை பாய, மலங்கு, இளங்கயல்‌, வரிவரால்‌, உகளும்‌ கழனியுள்‌பாளை ஒண்‌ கமுகம்‌ புடை சூழ்‌ திருப்‌பனையூர்‌,தோளும்‌ ஆகமும்‌ தோன்ற, நட்டம்‌ இட்டு ஆடுவார்‌; அடித் தொண்டர் தங்களைஆளும்‌ ஆறு வல்லார்‌; அவரே அழகியரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

கொங்கையார்பல ருங்குடைந் தாடநீர்க்குவ ளைமலர்தரபங்கயம் மலரும் பழனத் திருப்பனையூர்மங்கைபாகமும் மாலோர்பாகமுந் தாமுடையவர் மான்மழுவினோடங்கைத் தீயுகப்பார் அவரே அழகியரே.
சொற்பிரிப்பு
கொங்கையார் பலரும்‌ குடைந்து ஆட, நீர்க்‌ குவளை மலர் தர,பங்கயம்‌ மலரும் ‌ பழனத்‌ திருப்‌ பனையூர்‌,மங்கை பாகமும்‌ மால்‌ ஓர் பாகமும் ‌ தாம்‌ உடையவர்‌; மான்‌ மழுவினொடுஅங்கைத்‌ தீ உகப்பார்‌; அவரே அழகியரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

காவிரிபுடை சூழ்சோணாட்டவர் தாம்பரவிய கருணையங்கடலப்பாவிரி புலவர் பயிலுந் திருப்பனையூர்மாவிரிமட நோக்கிஅஞ்ச மதகரியுரி போர்த்துகந்தவர்ஆவில்ஐந் துகப்பார் அவரே அழகியரே.
சொற்பிரிப்பு
காவிரி புடை சூழ்‌ சோணாட்டவர் தாம்‌ பரவிய கருணை அம் கடல்‌; அப்‌பா விரி புலவர் ‌ பயிலும்‌ திருப்‌பனையூர்‌,மா விரி மட நோக்கி அஞ்ச, மத கரி உரி போர்த்து உகந்தவர்‌;ஆவில் ஐந்து உகப்பார்‌; அவரே அழகியரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

மரங்கள்மேல்மயி லாலமண்டப மாடமாளிகை கோபுரத்தின்மேல்திரங்கல்வன் முகவன் புகப்பாய் திருப்பனையூர்த்துரங்கன்வாய்பிளந் தானுந்தூமலர்த் தோன்றலுமறி யாமற்றோன்றிநின்றரங்கில் ஆடவல்லார் அவரே அழகியரே.
சொற்பிரிப்பு
மரங்கள் மேல்‌ மயில்‌ ஆல, மண்டபம் ‌ மாட மாளிகை கோபுரத்தின் மேல்‌திரங்கல்‌ வன் முகவன்‌ புகப்‌ பாய்‌ திருப்‌பனையூர்‌,துரங்க வாய்‌ பிளந்தானும்‌, தூ மலர்த் ‌ தோன்றலும்‌, அறியாமல்‌ தோன்றி நின்று,அரங்கில்‌ ஆட வல்லார் ‌அவரே அழகியரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

மண்ணெலாம்முழ வம்மதிர்தர மாடமாளிகை கோபுரத்தின்மேற்பண்ணி யாழ்முரலும் பழனத் திருப்பனையூர்வெண்ணிலாச் சடைமேவிய விண்ணவரொடு மண்ணவர்தொழஅண்ணலாகி நின்றார் அவரே அழகியரே.
சொற்பிரிப்பு
மண் எலாம்‌ முழவம்‌ அதிர் தர, மாட மாளிகை கோபுரத்தின் மேல்‌,பண்‌ யாழ்‌ முரலும் ‌ பழனத்‌ திருப்‌பனையூர்‌,வெண்‌ நிலாச்‌ சடை மேவிய விண்ணவரொடு மண்ணவர்‌ தொழஅண்ணல்‌ ஆகி நின்றார் ‌அவரே அழகியரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

குரக்கினங்குதி கொள்ளத்தேனுகக் குண்டுதண்வயற் கெண்டைபாய்தரப்பரக்குந் தண்கழனிப் பழனத் திருப்பனையூர்இரக்கமில்லவர் ஐந்தொடைந்தலை தோளிருபது தாள்நெரிதரஅரக்கனை அடர்த்தார் அவரே அழகியரே.
சொற்பிரிப்பு
குரக்கு இனம்‌ குதிகொள்ள, தேன்‌ உ௧, குண்டு தண் வயல்‌ கெண்டை பாய்தர,பரக்கும்‌ தண் கழனிப் ‌ பழனத்‌ திருப்‌பனையூர்‌,இரக்கம்‌ இல்லவர்‌, ஐந்தொடு ஐந்தலை தோள்‌ இருபது தாள்‌ நெரி தர,அரக்கனை அடர்த்தார் ‌அவரே அழகியரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

வஞ்சிநுண்ணிடை மங்கைபங்கினர் மாதவர்வள ரும்வளர்பொழில்பஞ்சின் மெல்லடியார் பயிலுந் திருப்பனையூர்வஞ்சியும்வளர் நாவலூரன் வனப்பகையவ ளப்பன்வன்றொண்டன்செஞ்சொற் கேட்டுகப்பார் அவரே அழகியரே.
சொற்பிரிப்பு
வஞ்சி நுண்‌ இடை மங்கை பங்கினர்‌ மா தவர்‌ வளரும்‌, வளர்‌ பொழில்‌,பஞ்சின்‌ மெல்‌ அடியார் ‌ பயிலும்‌ திருப்‌பனையூர்‌,வஞ்சியும்‌ வளர்‌ நாவலூரன்‌ வனப்பகை அவள்‌ அப்பன்‌, வன்தொண்டன்‌செஞ்சொல்‌ கேட்டு உகப்பார் ‌அவரே அழகியரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.